1/4/1 வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

4/1. வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? 

நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973- ன் விதி 2(17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908- ன் விதி 2(15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது.

முன் அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போதுதான் வாங்க வேண்டும். நமக்கு நாமே வாதாடும்போது தேவையில்லை. ஏன் என்றால் நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ)-ன் படி பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை. வக்கீல்கள் எத்தனை தான் பட்டம் பெற்றிருந்தாலும், வழக்கறிஞர் அவையில் தொழில் செய்வதற்காக பதிவு செய்திருந்தாலும் வேறு ஆஜராகும் ஒவ்வொரு வழக்கிலும், வழக்கறிஞர்கள் நீங்க நபருக்காக அடுத்தவர்களுக்காக வாதாடணும் அப்படீன்னா, எப்படி நீதிமன்றத்தின் முன் அனுமதி வாங்கணுமோ! அதே மாதிரி வக்கீலும் வாங்கித்தான் ஆகனும். இதைத் தான் வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிலும் வக்காலத்து அதாவது தமிழில் பரிந்து பேசும் உரிமை கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இப்ப புரியுதா நீங்க வக்கீலுக்கு படிக்காவிட்டாலும் வக்கீல்தான் அப்படீன்னு

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 4/1. வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா?  நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973- ன் விதி 2(17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908- ன் விதி 2(15) மற்றும் வழக்கறிஞர் சட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *