GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Motor Accident case procedure | வாகன விபத்து வழக்கு நடைமுறை.

Motor Accident case procedure | வாகன விபத்து வழக்கு நடைமுறை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  • Points / குறிப்புகள்.
  • ஒரு விபத்தை செய்தவர், என்னென்ன நீதிமன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்?
  • ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்து இயக்குபவர்கள், முக்கியமாக இரண்டு விஷயங்களை வைத்து இருக்கவேண்டும்.
  • ஒன்று, வாகனம் ஓட்டுவதற்கு உண்டான உரிமம் / Licence .
  • இரண்டு வாகனத்திற்கு உண்டான வாகன பதிவு சான்று / Registration Certificate RC மற்றும் காப்பீடு / Insurance.
  • ஒரு விபத்து நடந்து விட்டால், பாதிக்க பட்டவருக்கு உண்டான இழப்பீட்டை, வாகன இயகியவர்த்தான் கொடுக்க வேண்டும்.
  • அதே சமயம் , இயக்கப்பட்ட வாகனத்திற்கு காப்பீடு இரூந்தால், வாகன உரிமையாளர் சார்பாக அந்த காப்பீட்டு நிறுவனம், அந்த இழப்பீட்டு தொகையை கொடுத்துவிடும்.
  • இதற்கு பெயர் Third party Liability என்று பெயர்.
  • அதே சமயம், Comprehensive Policy வகை காப்பீடு வைத்து இருந்தால், விபத்துக்குள்ளான வாகனத்திற்கே ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதற்கும் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கேட்க முடியும்.
  • ஒரு விபத்து என்பது, கவனக்குறைவாலோ, முரட்டுத்தனமாகவோ செய்யப்பட்டு இருந்தால், அது குற்றம் என்று ஆகி விடுகிறது.
  • ஒரு வாகன ஒட்டி, தற்செயலாக ஒரு விபத்தை செய்துவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம் என்று முயற்ச்சிக்க கூடாது, அப்படி செய்தால் அதுவே ஒரு குற்றமாக ஆகிவிடும்.
  • மாறாக, அடிபட்டவருக்கு தேவையான முதலுதவி செய்துவிட்டு, காவல் துறைக்கு செய்திகளை தெறிவித்து விட வேண்டும்.
  • பொதுவாக ஒரு விபத்து நடந்து விட்டால், அந்த வழக்கை காவல் துறை இந்திய தண்டனை சட்டம் IPC 279 என்ற பிரிவில் பதிவு செய்வார்கள்.
  • அதே சமயம், அந்த விபத்துடைய தன்மையை பொறுத்து, சில கூடுதல் பிரிவுகளிலும் வழக்கு போடலாம்.
  • விபத்துகுள்ளானவருக்கு ஒரு சாதாரண காயம் ஏற்பட்டு இருந்தால், IPC 337-ன் கீழ் வழக்கு பதிவு செய்வார்கள்.
  • அதே சமயம், கொடுங்காயம் ஏற்பட்டு இருந்தால் IPC 338-ன் கீழ் வழக்கு பதிவு செய்வார்கள்.
  • அதே சமயம், அந்த விபத்தினால், ஒரு மரணம் ஏற்பட்டு இருந்தால், IPC 304-A ன் கீழ் வழக்கு பதிவார்கள்.
  • மேற்படி IPC-279, 337, 338, 304A போன்ற சட்டப்பிரிவுகள் அனைத்தும், ஜாமீனில் விடக்கூடிய பிரிவுகள் தான், பல வேளைகளில் காவல் நிலைய ஜாமீனில் கூட விடுவித்து விடுவார்கள்.
  • சில வேளைகளில் , விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்து, நீதிமன்ற ஜாமீனில் விடுவதற்கும் வாய்ப்புள்ளது.
  • ஒருவர், மது குடித்துவிட்டு, வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தினாலோ, தவறாக அல்லது மோசமான முறையில் இயக்கி விபத்தை ஏற்படுத்தினாலோ, IPC-304 ன் கீழ் வழக்கு பதிவு செய்து ஜாமீனில் வெளியே வரமுடியாத நிலையம் ஏற்படலாம்.
  • அடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை Motor Vehicle Inspection MVI க்காக வாகன போக்குவரத்து துறை RTO விற்கு அனுப்பி சோதனை செய்து, சான்று வழங்கிய பிறகே, மீண்டும் சாலையில் இயக்க அனுமத்திக்கபடும்.
  • காவல் துறை, இந்த வழக்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை / Charge Sheet தாக்கல் செய்த பிறகு, இரண்டு அழைபானை / Summon நீதி மன்றம் மூலமாக அனுப்புவார்கள்.
  • அதில் ஒன்று, குற்றவியல் வழக்கு Criminal Case விபத்தை ஏற்படுத்திய காரணததிற்காக, நீதி மன்றத்திலிருந்து ஆஜராக சொல்லி அசிபானை வரும்.
  • மற்றொன்று, விபத்தில் பாதிக்க பட்டவர், அல்லது அவரில் வாரிசு தாரர்கள், நழட ஈடு கேட்டு வழக்கு போட்டு இருப்பார்கள். அதற்கான ஒரு அழைபானையும் வரும்.
  • ஒவ்வொரு விபத்து வழக்கிலும், அபராதமோ, சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ கொடுபதற்கு வாய்ப்புகள் உள்ளன.
  • அதற்கடுத்து, விபத்தில் பாதிக்க பட்டவர் வாகன விபத்து தீர்ப்பாயம் Motor accident claims tribunal மூலமாக பாதிக்கபட்ட நபருக்கு நஷ்டஈடு கேட்டு அழைப்பாணை அல்லது அறிவிப்பு வரலாம்.
  • அதே சமயம், வாகனத்தை இயக்கியவரிம் அனைத்து ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், கவலைப்பட தேவைபட இல்லை. காப்பீட்டு நிறுவனத்திற்கு அந்த அறிவிப்பை அனுப்பி விபத்து விபரத்தை தெரிவித்து விட்டால் போதுமானது.
  • ஆனால், விபத்து நடக்கும் பொது, வாகனத்திற்கு காப்பீடு இல்லாமல் இருந்தால், பாதிக்க பட்டவர், கேட்கும் முழு நஷ்ட ஈட்டையும் வாகன உரிமையாளரே கொடுக்க நேரிடும்.
  • விபத்தை ஏற்படுத்தியவர், காப்பீடு மட்டும் வைத்து இருந்து, வாகனம் ஓட்டுவதற்கு உரிமமோ அல்லது வாகனத்திற்கு பதிவு சான்றிதழோ இல்லாமல் இருந்தால், அந்த வழக்கிற்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டை கொடுத்து விட்டு, காப்பீட்டு நிறுவனம் கொடுத்து விட்டு, பின், வாகன உரிமையாளரிடமிருந்து திரும்ப பெற்றுகொள்வார்கள், அதற்காக் வேறொரு வழக்கை தேவை பட்டாள் தொடருவார்கள்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI Case | The public information officer is ordered to provide Rs 1,000 as compensation to the complainer | பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய வழக்கு.RTI Case | The public information officer is ordered to provide Rs 1,000 as compensation to the complainer | பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்கிய வழக்கு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 3 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

RTI simple explanation | தகவல் பெறும் உரிமைச் சட்டம் சுலபமான விளக்கம்RTI simple explanation | தகவல் பெறும் உரிமைச் சட்டம் சுலபமான விளக்கம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 தகவல் பெறும் உரிமைச் சட்டம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.