காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
காசோலை வழக்கு அசன்னா என்பவர் ரூ. 15 லட்சத்தை சிற்றரசு என்பவரிடமிருந்து கடனாக பெற்றிருந்தார் அந்த கடன் தொகை யை திருப்பி செலுத்துவதற்காக ஒரு காசோலையை சிற்றரசுவுக்கு கொடுத்தார் அதை பணம் பெறுவதற்காக வங்கியில்செலுத்திய போது போதிய பணமில்லை என்று திருப்பப்பட்டு விட்டது அதனால் சிற்றரசு பணம் கேட்டு ஒரு அறிவிப்பை அசன்னாவுக்கு அனுப்பினார் அதன்பிறகும் அசன்னா பணத்தை திருப்பி தராததால் சிற்றரசு அவர்மீது காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது அசன்னா
ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்குப் சிற்றரசுவுக்கு வசதி இல்லை என்றும் 4 நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை கடனாக கொடுத்ததாக கூறியுள்ள போதிலும் அந்த 4 நண்பர்களை சாட்சிகளாக நீதிமன்றத்தில் சிற்றரசு விசாரிக்கவில்லை என்றும் கூறி வாதிட்டார் ஆனால் விசாரணை நீதிமன்றம் அசன்னாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை எதிர்த்து அசன்னா மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. G. சொக்கலிங்கம் விசாரித்தார்.
அசன்னா காசோலை கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார் அசன்னா காசோலை கொடுத்ததை மறுத்துரைக்காத நிலையில் அந்த காசோலைக்குரிய தொகை அவருக்கு வழங்கப்பட்டு விட்டதாக மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 118 ன் அனுமானிக்கப்பட வேண்டும் பணம் கடன் வாங்கி கொடுத்ததை நிரூபிக்க சிற்றரசு 4 நண்பர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே காசோலை கொடுக்கப்பட்டதை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலைப்படி எதிரி பணம் பெற்றுக் கொண்டதாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. R. C. NO – 744/2016
P. R. அசன்னா Vs சிற்றரசு
2016-3-MWN-CRL-DCC-73