#தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாண (ஒழுங்குமுறை) சட்டம், 1997
#நோக்கங்களும்_காரணங்களும்
தமிழகத்தில் சமீப காலத்தில் காளான் தோன்றுவது போன்று பல மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம், தனி மருத்துவமனை, மருத்துவ தங்குமனைகள் தோன்றியுள்ளன.
அவை ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகளாகவும், ஆபத்தளிக்கும் சூழ்நிலையிலும் நடத்தப்படுகின்றன. அவைகளை ஒழுங்குபடுத்த
தற்போது சட்டம் நடைமுறையில் இல்லை. அவைகளை பதிவு செய்து கட்டுப்படுத்தல் அவசியமெனதற்போது கருதப்படுகிறது.
2 – ஆம் மசோதா மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்ற விரும்புகிறது. கீழ்கண்ட தமிழக சட்டமன்றத்தின், இச்சட்டம் ஆளுநரின் இசைவை 14.02.1997 அன்று பெற்று பொதுத் தகவலுக்காகவெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிறுவனங்களையும், அவை சம்பந்தப்பட்ட அதன் ஒரே நிகழ்வில் நடக்கும் சங்கதிகளுக்காகவும் வகைமுறை செய்யப்பட்ட ஒரு சட்டம் இதுவாகும். ஆனால் இந்த
சட்டத்தின் கீழ் தற்போதைய அரசும், இதற்கு முன்பு இருந்த அரசும் போதிய விதிகளை வகுக்காததால், கடந்த 19 ஆண்டுகளாக அந்த சட்டமே அமலுக்கு வராமல் உள்ளது. இச்சட்டம் தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் சட்டம் (ஒழுங்குப்படுத்துதல்) 1997 என அழைக்கப்படும். இது தமிழகம்
முழுமைக்கும் பொருந்தக் கூடியது. தமிழக அரசு அறிவிக்கையின் மூலம் தெரிவிக்கும் அந்நாளிலிருந்து செயலுக்கு வரும் (09.04.1997-ல் நடைமுறைக்கு வந்தது.
#சொற்பொருள்விளக்கம்
இந்த சட்டத்தில் சூழ்நிலையில் வேறுவகையில் பொருள் கொள்ள வேண்டியிருந்தாலொழிய தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு என்பது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அதிகார அமைப்பு மற்றும் தகுதி
வாய்ந்த அலுவலர் அல்லது தனிநபர் அதிகார அமைப்பின் பணிகளைச் செய்வதற்காக அறிவிக்கையின்படி நியமிக்கப்படும் நபர்களையும் குறிக்கும்.
அரசாங்கம் என்பது மாநில அரசாங்கத்தை குறிக்கும்.
தனியார்மருத்துவ_தங்குமனைகள் என்பவை பொது மருத்துவமனை, தாய்மைப்பேறு மருத்துவமனை, மருந்தகம், உடல்ரீதியாக மனரீதியாக
நோயுற்றோர், காயம்பட்டோர் தளர்ச்சியுற்றோர் ஆகியோரை வெளி அல்லது உள் நோயாளிகளைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைகளின் உதவியோடு அல்லது இல்லாமல் இயங்குகிற நிறுவனம் அல்லது மையங்கள் ஆகியவற்றையும் பரிசோதனைக் கூடம் அல்லது மருத்துவ சாதனங்களால்
கதிரியக்க, உயிரியல் அல்லது நோயறியும் அல்லது புனாய்வு பணிகளுக்கென தனிநபர் அல்லது பல நபர்கள் சேர்ந்து இணைக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது அவ்வாறு இணைக்கப்படாதவைகளையும் குறிக்கும். ஆனால் மாநில அல்லது மத்திய அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் அல்லது மத்திய மாநில
அரசுகளால் நிர்வகிக்கப்படும் கம்பெனி அல்லது கார்ப்பரேசன்களால் நிறுவப்பட்டு நிர்வாகமும் பராமரிப்பும் செய்யப்படும் மருத்துவமனைகளை குறிக்காது.
#தனியார் மருத்துவ தங்குமனை நிறுவனங்களை பதிவு செய்தல்.
இச்சட்டம் செயலுக்கு வந்த அந்நாளிலிருந்து அல்லது அதைத் தொடர்ந்து இச்சட்டத்தின்படி பதிவு செய்யாமல் எவரும் தனியார் மருத்துவமனை அமைப்புகளை அமைக்கவோ நடத்தவோ கூடாது.
ஏற்கனவே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அம்மருத்துவமனைகளை இச்சட்டம் செயலுக்கு வந்து 3 மாத காலத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால் இச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு 4வது மாதத்தில் தன்பணிகளை நிறுத்தி விட வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்து பதிவு செய்திருந்தாலோ அல்லது அம்மனு மீது பணிகளை நிறுத்த வேண்டியதில்லை.
1-வது உட்பிரிவின்படி பதிவு செய்வதற்காக செய்யப்படும் விண்ணப்பமான இதற்கென குறிப்பிட்டுள்ள படிவத்தில் குறிப்பிட்டவாறும் ரூ.5000ஃ-க்கு மிகாத கட்டணத்துடன் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதற்கென அதிகாரம் பெற்ற அமைப்பினர் அவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற மருத்துவ நிறுவனங்கள் குறிப்பிட்ட சிறப்பு வசதிகளையும் மனித வளங்களையும் சாதனங்களையும் இதற்கென
குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கும் தகுந்தவாறு உள்ளனவா என்பது குறித்து
திருப்தியடைந்திருந்தாலொழிய தனியார் மருத்துவமனைகளை பதிவு செய்யக் கூடாது.
*#பதிவு செய்தமைக்கான சான்றிதழ்
தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு விசாரித்து மனுதாரர் இச்சட்டப்படியான விதிகளின் படியான இன்றியமையாதவைகளை பூர்த்தி செய்துள்ளார் என்பதில் திருப்தியடைந்தால் அப்படிப்பட்ட தனியார்
மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு பதிவு சான்றிதழை வழங்கலாம்.
தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு விசாரித்த பின்பு மனுதாரர் இச்சட்டம் மற்றும் விதிகளுக்கு இன்றியமையாதவைகளை பூர்த்தி செய்யவில்லை என அறிந்தால் தக்க காரணங்களை எழுதி மனுவை தள்ளுபடி செய்துவிடலாம்.
அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை. பின்னர் புதுப்பிக்கப்படும் சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை ஆகும்.
இச்சட்டத்தில் வகைமுறை செய்யப்பட்டவாறு பதிவதையோ புதுப்பிப்பதையோ செய்ய வேண்டும். பதிவதெற்கென சொல்லப்பட்ட இச்சட்டத்தின் கருத்துக்கள் புதுப்பிப்பதற்கும் பொருந்தும். பதிவு சான்றிதழ் தொலைந்து விட்டால், அழிந்து விட்டால், கிழிந்து விட்டால் அதிகாரம் பெற்ற
அமைப்பினர் குறிப்பிடப் பெற்றுள்ள கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சான்றிதழ் நகலை அவருக்கு வழங்கலாம்.
#பதிவை இடைநீக்கம் அல்லது இரத்துசெய்தல்.
இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தன்னிச்சையாகவோ அல்லது புகாரின் பேரிலோ தனியார் தங்குமனை மருத்துவ நிறுவனங்களுக்கு அறிவிக்கையில் கண்ட காரணங்களுக்காக ஏன் உங்கள் பதிவை இடைநீக்கம் அல்லது இரத்து செய்யக்கூடாது என அறிவிக்கை கொடுக்கலாம்.
தக்க அவகாசம் கொடுத்து விசாரித்து இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தனியார் மருத்துவமனையின் பதிவு செய்வது தொடர்பாக இந்த சட்டத்தின் ஷரத்தையே விதிகளையோ மீறியுள்ளார்கள் என அறிந்தால் மற்ற நடவடிக்கைகளுக்கு குந்தமில்லாமல் அம்மருத்துவமனையின் பதிவை இடைநீக்கமோ இரத்தோ செய்யலாம்.
பொதுநலன் கருதி தக்க காரணங்களுக்காக இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தங்களுக்கு அவசியம் என எழுத்து மூலமாக தெரிவித்துள்ள காரணங்களுக்காக கருதினால் அப்படி காரணத்தை எழுதி அறிவிக்கை இன்றியும் மருத்துவமனையின் பதிவை இடைநீக்கமோ இரத்தோ செய்யலாம்.
#ஆய்வு விசாரணை.
இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் ஆய்வு அல்லது விசாரணைமருத்துவமனையின் கட்டிடங்கள் ஆய்வுக்கூடம் சாதனங்கள் செய்யும் வேலை ஆகியவற்றை பொருத்து ஆய்வு மேற்கொள்ளலாம் அல்லது
மேற்கொள்ள நெறிப்படுத்தலாம். அந்த ஆய்வு விசாரணையின் போது தங்கள் பக்க பதிலை அளிக்க மருத்துவமனையினருக்கு தகுதிப்பாடு உண்டு.
இதற்கென அதிகாரம் பெற்றவர்கள் தங்களின் ஆய்விற்கு விசாரணைக்கு பின்பான மதிப்பீடுகளை தனியார் மருத்துவமனைக்கு தெரிவித்து அவர் கருத்துக்களை அறிந்த பின்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தலாம்.
தனியார் மருத்துவமனையின் ஆய்வு மற்றும் சோதனையின் முடிவாக தெரிவிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்காக எடுத்த அல்லது எடுக்கலிருக்கிற நடவடிக்கைகள் பற்றி அறிக்கை ஒன்றை அதற்கென அதிகாரம் பெற்றோருக்கு குறித்த காலத்தில் தாக்கல் செய்யச் சொல்லலாம்.
அதற்கென அதிகாரம் பெற்றோரின் தகுதிக்கேற்ப குறித்த காலத்தில் தனியார் மருத்துவமனையின் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இதற்கென தனியார் மருத்துவமனையின் விளக்கம் விவரம் எடுத்துரைப்பை கேட்டபின்பு தக்க நெறிப்படுத்தலை அதற்கென அதிகாரம் பெற்றோர்கள்
வழங்குவார்கள்g அத்தகைய நெறிப்படுத்துதலுக்கு கட்டுப்பட்டு அத்தனியார் மருத்துவமனையினர் நடக்க வேண்டும்.
#மேல் முறையீடுகள்.
இதற்கென அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் இச்சட்டத்தின் பிரிவு 4(2)-ன்படி பதிவு செய்ய விண்ணப்பித்ததை தள்ளுபடி செய்தாலோ பிரிவு 5(2)ன் படி பதிவு இடைநீக்கம் அல்லது இரத்து செய்யப்பட்டாலோ பிரிவு 6-ன் படி ஏதாவது நெறியுறுத்தல் செய்யப்பட்டாலோ அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வேண்டியிருந்தால் தக்க அதிகாரம் பெற்றவர்களுக்கு இதற்கென குறித்த
வகையில் மேல்முறையீடு செய்யலாம்.
இச்சட்டத்தின்வகைமுறைகளைமீறுபவர்களுக்கு_தண்டனை எவரேனும் இச்சட்டத்தின் வகைமுறைகளை விதிகளை அல்லது பதிவிற்கான நிபந்தனைகளை மீறினால் 5000 முதல் 15000 வரை
அதிகரிக்கத்தக்க அபராதம் விதிக்கலாம். எனினும் நீதிமன்றம் பதிவு செய்யத்தக்க காரணங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கலாம்.
#கம்பெனி குற்றம்புரிதல்.
இந்த சட்டத்தில் தண்டிக்கத்தக்க குற்றம் எதையேனும் ஒரு குழுமத்தால் செய்யப்பட்டால் அந்த குற்றம் புரியப்பட்ட போது குழுமத்தின் வணிகபணிகளை செய்வதற்கு யார் பொறுப்போ அல்லது பிணை
பொறுப்பு கொண்டவரோ அவரும் குழுமமும் பொறுப்பென கொள்ளப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப் பெறுவார்.
மேற்கண்ட உட்பிரிவில் சொல்லப்பட்டவை எதுவும் அந்நபர் தனது அறிவிற்கறியாமல் நடைபெற்றதாகவோ அத்தவறு நடப்பதை தடுக்க தன்னால் ஆன எல்லா முயற்சியையும் எடுத்துக் கொண்டதாகவோ நிரூபித்தால் அந்நபரை தண்டனைக்குரியதாக்காது.
1- வது உட்பரிவில் சொல்லப்பட்டவைகளுக்கு முரண்படாத வகையில் இச்சட்டத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் ஒன்றை ஏதேனும் ஒரு குழுமம் புரிந்திருந்து அக்குற்றம் ஏதாவது ஒரு இயக்குநர் நிர்வாகி செயலாளர் அல்லது வேறொரு குழுமத்தின் அலுவலரின் சம்மதத்தின் பேரில் ஒத்துழைப்பின் பேரில்
கவனக்குறைவின் விளைவால் நடைபெற்றதாக நிரூபிக்கப்பட்டால் அக்குழுமத்தின் இயக்குநர் மேலாளர், செயலாளர் அல்லது குழுமத்தின் அலுவலரும் குற்றம் புரிந்ததாக கொள்ளப்பட்டு அவர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.
#விளக்கம் :
குழுமம் என்பது இணைக்கப்பட்ட குழுமம், நிறுவனம், சங்கம் அல்லது வேறு நபர்களின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
சங்கம் அல்லது நபர்களின் கூட்டமைப்பு என்பது சங்கத்தின் கூட்டமைப்பின் விதிகளின்படி நிர்வாகத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட நபரை குறிக்கும்.
குற்றங்களை புலன் கொள்ளுதல், இதற்கென அதிகாரம் அளிக்கப்பட்டவர் அல்லது அத்தகைய அதிகாரமளிக்கப்பட்டவர்களின் இசைவை
பெற்றவரின் புகாரின் பேரிலன்றி வேறுவிதத்தில் இச்சட்டத்தின் படியான குற்றங்களை புலன் கொள்ளக்கூடாது.
#தன்னம்பிக்கையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு.
சிவில் குற்றவழக்குகள் சட்டப்படியான நடவடிக்கைகள் எவையும் இச்சட்டத்தின் வாசகங்களின் படி செய்யப்பட்ட செய்யப்படவிருக்கிற நடவடிக்கைகளுக்கெதிராக எடுக்க முடியாது.
இச்சட்டத்தில் வாசகங்களின்படி நன்னம்பிக்கையில் எடுக்கப்பட்ட எடுக்கப்படவிருக்கிற நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எதுவும் அரசுக்கெதிராக எடுக்க இயலாது.
விபர அறிக்கை சமர்ப்பித்தல் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் இதற்கென அதிகாரமளிக்கப்பட்டோர் இதற்கென வழங்கியுள்ள
அதிகப்படியான அவகாசத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் அந்த அதிகார அமைப்புக்கு விவர அறிக்கை புள்ளி விவரம் இது தொடர்பான மற்ற தகவல்களை அமைப்பு கோருகின்ற போதெல்லாம் தரவேண்டும்.
அதிகார அமைப்பு பொதுஊழியரால் அமைக்கப்பட வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பும் இச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் பிரிவு 21 இந்திய தண்டனை சட்டத்தின்படி வழங்கியுள்ளவாறு பொதுஊழியராக இருக்க வேண்டும்.
#விதிகளை ஏற்படுத்தும் அதிகாரம்.
இச்சட்டத்தின் நோக்கத்தை சென்றடைய செய்ய, அரசு தக்க விதிகளை ஏற்படுத்தும்.அப்படி செய்யப்பட்ட விதிகள் அல்லது பிரிவு 15-ன்படி செய்யப்படுகிற உத்தரவுகள் ஆகியவைஉடனடியாக அவை செய்யப்பட்டவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சட்டசபையில் அந்த அமர்வுஅல்லது அதற்கடுத்த அமர்வில் வைக்கப்பட வேண்டும். சட்டசபை அவ்வாறு வைக்கப்படும் விதி அல்லது உத்தரவில் மாறுதல் ஏதேனும் செய்ய விரும்பினால் அந்த மாறுதல்களின் படியோ மாறுதல் ஏதும் தேவையில்லை என கருதினால் மாறுதல்கள் ஏதும் இல்லாமலோ அமுலுக்கு வரும் அம்மாறுதல் அல்லது மாறுதல் செய்யாமை ஏற்கனவே அதற்கென செய்யப்பட்டவைகளின் செல்லுந்தன்மையை குந்தகம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது.
*#சிரமங்களைநீக்கும் அதிகாரம்.
இச்சட்டத்தின் வகைமுறைகளை செயலுறுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், அரசுசந்தர்ப்பங்களின் தேவையை பொறுத்து இச்சட்டத்தின் சரத்துகளுக்கு முரண்படாதவாறு அவர்களுக்கு அவசியம் என கருதும் மாறுதல்களை செய்து அச்சிரமங்களை நீக்கும்.இந்த சட்டம் செயல்பாட்டிற்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அத்தகைய மாறுதல்களை செய்யப்பட
மாட்டாது.
என்றென்றும் மக்கள் பணியில்
இரா.கணேசன்
பாதிக்கப்பட்டோர் கழகம்
அருப்புக்கோட்டை
9443920595