ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
Views:8
Hints / குறிப்புகள்: Automatic Voice to Text conversion by Software
உச்ச நீதிமன்றத்தில் Article 32 வின் படியும், உயர்நீதிமன்றத்தில் Article 226 படியும், ஆட்கொணர்வு நீதிப்பேராணை Hebeas Corpus, என்ற ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த ரிட் மனு எதற்காக தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, அரசியல் அமைப்பு சட்டத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், அவருக்கு மறுக்கப்படுகின்ற போது, அவர் அது குறித்து அரசியல் அமைப்புப் படி, தனக்கு வழங்கப்பட்ட, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்டவும், தனக்குள்ள உரிமையை பாதுகாத்திடவும், உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
அதாவது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு நபர் காணாமல் போய்விடுகிறார், அல்லது ஒரு நபர் கைது செய்யப்படுகின்றார். கைது செய்யப்படுகின்ற போது அரசியலமைப்பின்படி கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படி கைது செய்யப்பட்ட நபரை போலீசார், எந்தெந்த வழிமுறைகளில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
அவை மீறுகின்ற போது,அது குறித்து உரிய நீதிப்பேராணை யை தாக்கல் செய்ய முடியும்.
அதே போன்று தனக்குள்ள உரிமையை ஒரு அதிகார குழுவால் மறுக்கப்படுகின்ற போது, அந்த அதிகார குழுவை எதிர்த்து நீதிப்பேராணை தாக்கல் செய்யலாம்.
அதுமட்டுமின்றி கீழமை நீதிமன்றங்களில் அதனுடைய எல்லைக்கு உட்பட்டு, அந்த கீழமை நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு கீழமை நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லைக்கு மேற்பட்டு செயல்படுகின்ற போது, உயர் நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும். அதற்கேற்றவாறு நீதிப்பேராணை தாக்கல் செய்ய முடியும்.
அதே போன்று பல்வேறு தீர்ப்பாயங்கள் உள்ளன. அந்த தீர்ப்பாயங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியதிகளின் படி, ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படி அவை செயல்பட்டு வருகிறதா?
அவ்வாறு செயல்படாத நிலையில், அவ்வாறு செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நீதிப் பேராணைகள் தாக்கல் செய்ய முடியும்.
அதே போன்று ஒரு உயர் கல்வி அமைப்பாக இருந்தாலும் சரி,அரசுக்கு சொந்தமான எந்த ஒரு அமைப்பு அதிகாரம் கொண்ட துறையாக இருந்தாலும், அந்த துறையில் அவர் வகிக்கக்கூடிய பதவி என்பது சட்டத்திற்கு உட்பட்டு முறையாக இருக்க வேண்டும்.
அதாவது அவருடைய தகுதிக்கு அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த பதவியில் ஒருவர் அமர்கிறார் என்று சொன்னால், அவ்வாறு அமர்வதற்கு அவருக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதை அந்த பதவிக்கு ஏற்ற உரிமை, பதவிக்கு ஏற்ற தகுதி, உடன் அவர் பணிபுரிவார் அதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை.
ஆனால் அவ்விதம் பணிபுரியும் போது, அந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இல்லாத நிலையில் ஒருவர் பதவியில் அமர்த்தப் படுகிறார்கள் என்று சொன்னால், அதை பார்த்துக்கொண்டு அமைதியாக பொதுமக்கள் எவரும் இருக்க முடியாது. அதற்கு உரிய நீதிப்பேராணை தாக்கல் செய்ய முடியும்.
அரசியலமைப்புச் சட்டம் Article 32 & 226 ன் படி, கொடுக்கப்பட்டுள்ள நீதிப் பேராணைகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் இன்று நாம் பார்க்க இருக்கின்ற தலைப்பு Hebeas Corpus.
ஒரு இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி, அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது, அந்த அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற போது, ஒரு நபரை காப்பாற்ற, உரிய நீதிப்பேராணை தாக்கல் செய்ய முடியும்.
அதன்படி ஒரு நபர் கைது செய்யப்படுகிறார், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று உரிய நீதிமன்றத்தில், அவர் மீது வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்திற்கு உட்படுத்தப்படாத நிலையில் அவர் விசாரணை செய்யப் படுகிறார்.
அவர் எந்த இடத்தில் எங்கு வைத்து விசாரணை செய்யப் படுகிறார்? எவ்வளவு நேரமாக செய்யப்படுகிறார்? யார் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகிறார்? அவ்வாறு விசாரணை செய்யப்படும் போது யார் யார் அங்கு இருந்தனர்? எத்தனை மணிக்கு அவரை அழைத்துச் சென்று எத்தனை மணிக்கு விசாரணை ஆரம்பித்தது? அந்த விசாரணை எல்லாம் யார் செய்தது என்பது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா? கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் உரிய நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டாரா? இல்லையா? போன்ற சங்கதிகளை எல்லாம் காவல்துறையினர் முழுமையாக முறையாக பின்பற்றப்பட வேண்டும், என்ற முன் தீர்ப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக கூறி உள்ளது.
அதாவது எந்த ஒரு நபர் எந்த ஒரு குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்ற போது, அந்த காவல் துறையினர் உரிய வகையில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் மிகத் தெளிவாக, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி அவர் கைது செய்யப்படுகின்ற போது, அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கொடுக்கப்பட்டுள்ள, அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற போது, அந்த பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக சேவகர்கள், வழக்கு தாக்கல் செய்யலாம்.
உச்ச நீதிமன்றத்தில் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யலாம்.
ஏன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்? இவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. இன்றுவரை அவரை எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அவர் உண்மையிலேயே போலீசார் விசாரணை செய்கிறார்களா? அல்லது அவரை அடித்து துன்புறுத்தி அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்று தெரியாத நிலையில் கடந்த மூன்று நான்கு நாட்களாக காணவில்லை. எனவே போலீசார்தான் அவரை அழைத்துச் சென்றனர், இந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பட்சத்தில், அவர் உயிருடன் உள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி எதுபோன்ற விசாரணை மேற்கொள்ளப் படுகிறது என்பதும் நாம் தெரிந்து கொள்ள முடியும், என்ற விதத்தில் உயர் நீதிமன்றத்தில் உரிய ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யலாம்.
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனு மீது உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு புறப்பிக்கும்.
இவ்வாறு அழைத்துச் சென்ற நபரை, உரிய நீதிமன்றத்தில் ஒப்படைக்க படாமல் இருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது குறித்து என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை விளக்கம் கேட்கும்.
அதுமட்டுமின்றி அவ்வாறு அழைத்துச்சென்று இருப்பின்,அவரை உரிய வகையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், அந்த ஆஜர்படுத்திய நபருக்கு, தான் எதற்காக கைது செய்யப்பட்டோம், எந்த விசாரணைக்காக அழைத்துச் சென்றனர், என்பது எல்லாம் அவருக்கு தெரியாமல் இருந்தால் கூட அவர் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து அறிந்துகொள்ளமுடியும்.
சட்டத்துக்குப் புறம்பான வகையில் அவரை அழைத்து சென்று போலீசார் உரிய நடவடிக்கை பின்பற்றப்படாத நிலையில் அவரை மறைத்து வைத்து அவரை அடித்து துன்புறுத்தி அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால்,
அந்த பாதிக்கப்பட்ட நபர் அந்த காவல்துறையினருக்கு எதிராக நஷ்ட ஈடு கோர முடியும்.
எந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்பட்டவர்களுடைய அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
அவ்வாறு காக்கப்படாத நிலையில் அவருக்கு அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன அப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.
இந்த ஹெபியஸ் கார்பஸ் Hebeas Corpus என்பது ஒரு லத்தீன் மொழி சொல்லாகும். லத்தீன் மொழியில் “உடலைக் கொண்டு வா” என்று பொருள்படும், அதுவே ஆட்கொணர்வு மனு என்று கூறுவார்கள.
அதாவது ஒருவர் காணாமல் போயிருந்தால் அவர் காணாமல் போனவரை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் படுகிறது காவல்துறையினர் அந்த புகாரை பதிவு செய்த போதிலும் உரிய விசாரணை மேற்கொள்ளாத நிலையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
அதாவது போலீசில் புகார் மனு குறித்து இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே அவரை தேடி கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லுங்க அப்படின்னு சொல்லி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்.
நீதிமன்ற சமாச்சாரங்களில் நீதிப்பேராணை மனுக்கள் மிக முக்கியமாக, அவ்வப்போது செய்தித்தாள்களில் பலர் தாக்கல் செய்துள்ள சங்கதிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்த நீதிப்பேராணை என்ற மனு உச்சநீதிமன்றத்தில் Article 32 உயர்நீதிமன்றத்தில் Article 226 படி யும் தாக்கல் செய்ய முடியும்.
பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினர்கள் அவரது நண்பர்கள் அல்லது ஒரு சமூக சேவர்கள் கூட இந்த மனுவை தாக்கல் செய்யலாம்.
பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் மட்டும் தான் இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அல்ல.
எந்த மனு தாக்கல் செய்வதாக இருந்தாலும் அதில் பிரைமா பேசி இருக்க வேண்டும்.
ஒரு மனு தாக்கல் செய்கிறார் என்று சொன்னால், அவர் சொல்லுகின்ற கருத்துக்கள் நீதிமன்றத்தால் ஏற்கக் கூடிய விதத்தில், அந்த மனுவின் சாராம்சம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆட்கொணர் நீதிப்பேராணை என்றால் என்ன எந்தச் சூழ்நிலையில் அது தாக்கல் செய்யப்படலாம் என்பது குறித்து இந்த வீடியோ மூலம் தெளிவாக கூறியிருக்கின்றேன்.
இது அவ்வாறு பாதிக்கப்படுகின்ற ஒரு நபரின் சார்பில் அவரது உறவினர்கள் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்.
அதே போல பிஎல் படித்துக் கொண்டிருக்கும் மாணவ நண்பர்கள். நீதிப்பேராணை எதற்கு பயன்படுகிறது எந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யலாம் என்று சிறுவினாக்கள் கேள்வி கேட்கின்ற போது உரிய பதிலை பெற முடியும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Courtesy Ex Judge M Pari.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 21 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி? மாநில மனித உரிமை ஆணையம்,
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 87 பொய்வழக்கு (False case) பதிவு செய்த போலீசாருக்கு தண்டனை கிடைக்கச் செய்ய விரும்பினால், சட்டப்படி சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.