RELEASE DEED | யார் யார் விடுதலைப் பத்திரம் எப்போது எழுதித் தரலாம்?
-
by admin.service-public.in
- 127
குறிப்புகள்:
- விடுதலை பத்திரம் என்பது என்ன?
- விடுதலை பத்திரன் யார் யார் எழுதவேண்டும்?
- விடுதலை பத்திரம் பதிவு செய்யப்படவேண்டுமா?
- விடுதலை பத்திரம் பதிவு செய்ய எவ்வளவு செலவு ஆகும்?
- ஒரு முறை எழுதப்பட விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
- அசையும் அல்லது அசையா சொத்தின் பேரில் தனக்கு இருக்கும் உரிமையை, இதர உரிமையாளர்களுக்கு விட்டுகொடுப்பதே விடுதலையாகும். அதற்காக செய்யப்படும் ஆவணமே, விடுதலை பத்திரமாகும்.
- ஒரு சொத்தை குத்தகைக்கு எடுத்த நபரும், குத்தகையை விட்டு விலக விடுதலை பத்திரம் எழுதிகொடுத்துவிட்டு, விலகிக்கொள்ளலாம்.
- விடுதலை பத்திரம் எழுத ரூ100க்கான முத்திரைத்தாள் பயன்படுத்த வேண்டும்.
- குடும்ப சொத்துக்கு பாத்தியப்பட்டவர்கள், விடுதலை அளிக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட சொத்தின் மதிப்பில் 1 சதவீதம் முத்திரைத்தாள் பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும். மேலும், பதிவுக்கான இதர செலவுகளையும் செய்ய நேரிடும்.
- சொத்துக்கு உரிமை இல்லாத ஒரு மூன்றாம் நபருக்கு விடுதலை அளிபதாக இருந்தால், அதற்கு 7 சதவீதம் முத்திரைத்தாள் அயன்படுத்த வேண்டும்,
- ஒருமுறை விடுதைபத்திரம் எழுதி பதிவு செய்யப்பட்டுவிட்டால், எக்காரணம் கொண்டும் அதை திரும்பப்பெறவோ, ரத்தி செய்யவோ முடியாது.
- எந்த காரணத்திற்காக விடுதலை கொடுக்கபடுகிறது, அல்லது விடுதலை வாங்கப்படுகிறது என்பதை தெளிவாக எழுதி, இருவரும் நன்கு படித்து பார்த்து கையெழுத்திட்டு, பதிவுத்துறையில் பதிவு செய்திட வேண்டும்.
- வெளிநாட்டில் வசிப்பவர், விடுதலை பத்திரம் எழுதிகொடுக்க விரும்பினால், ஒரு பத்திரத்தில் அவர் விரும்பிய ஒரு நபருக்கு பவர் என்ற அதிகாரம் அளிக்கவேண்டும். ஒரு பத்திரத்தில் அதிகார வரம்பு விஷயங்களை எழுதி, வசிக்கும் நாட்டில் நோட்டரி அட்டஸ்ட் செய்து, அங்கு இருக்கும் எம்பசி சென்று அங்கேயும் அட்டஸ்ட் செய்தபின்பு, அந்த பத்திரத்தை அதிகாரம் அளிக்கப்ப்டவரிடம் ஒப்படைக்கவேண்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, கொடுக்கப்படும் விடுதலை சட்டப்படி செல்லுத்தக்கதாகும்.

🔊 Listen to this குறிப்புகள்: விடுதலை பத்திரம் என்பது என்ன? விடுதலை பத்திரன் யார் யார் எழுதவேண்டும்? விடுதலை பத்திரம் பதிவு செய்யப்படவேண்டுமா? விடுதலை பத்திரம் பதிவு செய்ய எவ்வளவு செலவு ஆகும்? ஒரு முறை எழுதப்பட விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா? அசையும் அல்லது அசையா சொத்தின் பேரில் தனக்கு இருக்கும் உரிமையை, இதர உரிமையாளர்களுக்கு விட்டுகொடுப்பதே விடுதலையாகும். அதற்காக செய்யப்படும் ஆவணமே, விடுதலை பத்திரமாகும். ஒரு சொத்தை குத்தகைக்கு எடுத்த நபரும்,…