சாட்சி விசாரணை

Summon is to be issued to the witness by Police for any cases. High Court Order | வழக்கிற்கு சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கும்போது சம்மன் அனுப்பவேண்டும். போலீசாருக்கு HC உத்தரவு.

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டோர் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க தேதி, நேரத்தை குறிப்பிட்டு எழுத்துபூர்வ சம்மன் அளிக்கவேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த போலீசாருக்கு தடை விதிக்ககோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி ஏ.வி.ஜெகதீஸ் சந்த்ரா பிறபித்த உத்தரவு: பின்வருமாறு.

பொதுவாக போலீஸ் விசாரணையில் நீதிமன்றங்கள் குறுக்கிடுவது இல்லை. அதே நேரத்தில் விசாரணை என்ற பெயரில், துன்புறுத்தல் நடைபெறும்போது நீதிமன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.
எனவே, காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களில் குறிப்பிடப்படும் நபர்கள் மற்றும் சம்பவத்தின் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கும்போது சம்பந்தப்பட்டோருக்கு, விசாரணைக்கு ஆஜராக வேண்டிய, தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு எழுத்துபூர்வமாக சம்மன் வழங்க வேண்டும். அதில் சி.எஸ்.ஆர். எண் புகார் அளிக்கப்பட்ட தேதி, புகார்தாரர் பெயர் போன்றவைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். போலீசார் விசாரனைத்து அழைத்து யாரையும் தொந்தரவு செய்யகூடாது.
ஒரு புகாரின் பேரில் முதல்கட்ட விசாரணை நடத்துவது, மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது, லலிதா குமாரி வழக்கில் உச்சநீதி மன்றம் பிறபித்த உத்தரவுகளைத் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
விசாரணையின்போது குற்றம் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருந்தால், போலீசார் தாரளமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

“எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை” -சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

ஒவ்வொரு குற்றத்திற்கும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவது அவசியம் என சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த லலிதா குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் எப்.ஐ.ஆர்., பதிவு குறித்து போலீசாருக்கு வழிகாட்டிய சுப்ரீம் கோர்ட் “குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; எப்.ஐ.ஆர். பதிவிற்கு முன் போலீஸ் விசாரணை அவசியமற்றது; எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கைகள் அவசியமற்றது. என்று தெரிவித்துள்ளது.

காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த லலிதா குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் காவல் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகார் கிடைத்தவுடனேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆரம்ப கட்ட விசாரணை தேவையில்லை என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருமணம் தொடர்பான புகார்கள், சொத்து தகராறு, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றில் போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய பின்னரே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஃப்ஐஆர் நகலை சம்பந்தப்பட்டவர்களிடம் உடனே வழங்க வேண்டுமென்றும்,எப்.ஐ.ஆர். பதிவு செய்த 7 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்.என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Source: https://www.aanthaireporter.com/%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA/

AIARA

🔊 Listen to this ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டோர் மற்றும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க தேதி, நேரத்தை குறிப்பிட்டு எழுத்துபூர்வ சம்மன் அளிக்கவேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த போலீசாருக்கு தடை விதிக்ககோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி ஏ.வி.ஜெகதீஸ் சந்த்ரா பிறபித்த உத்தரவு: பின்வருமாறு. பொதுவாக போலீஸ் விசாரணையில் நீதிமன்றங்கள் குறுக்கிடுவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *