GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

Uncategorized காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திக்கு உண்டு.

காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திக்கு உண்டு.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

இந்திய பிரஜையாக உள்ள ஒவ்வொருவருக்கும் காவல் நிலைய புலன் விசாரணை நேர்மையானதாக இருக்கசெய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது என
உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

புகார்தாரர் ஒரு புகாரை காவல் நிலையத்தில் அளிக்கிறார் ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை சரியாக புலனாய்வு செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் அடுத்து என்ன செய்வது என்ற தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.

நீதி தோல்வியடைந்து விடக்கூடாது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அடிப்படை சட்டம் அறிந்து கொள்ள வேண்டும்.

புலன்விசாரணை என்பது மிகவும் விரிவான ஒரு பகுதி இது காவல் துறையினர் சம்மந்தப்பட்ட செயல்பாடுகள் ஆகும். புலன் விசாரணைக்கு காவல்துறையினரே எஜமானர்கள் ஆவார்கள் ஆனால் பல கேள்விகள் மனதில் இயல்பாகவே எழும்.

காவல்துறையினரை கண்காணிப்பது யார்?

சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் அவர்களை வைத்திருப்பது யார்?

காவல்துறையினர் வரம்புமீறி செயல்படும் போது அவர்களை பின்னுக்கு இழுப்பவர்கள் யார்?

சட்டத்தை விட காவல்துறையினர் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை எடுத்துக் கூறுவது யார்?

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை பற்றி எடுத்துக் கூறுவது யார்?

புலன்விசாரணையை நேர்மையான முறையில் செய்ய வேண்டும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று எடுத்துக் கூறுவது யார்?

நம்பி வரும் பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்றுத் தரும் கடமை காவல்துறையினருக்கு உள்ளது என்று எடுத்துக் கூறுவது யார்?

பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறுவது யார்?

இவை அனைத்திற்கும் விடை நீதிமன்றங்கள்தான் என்பதை மறுக்க இயலாது.

வழக்குகளை பதிவு செய்து கைது செய்யும் அதிகாரம் காவல்துறை யினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளனர்.

புலன்விசாரணையை முறையாக செய்ய வேண்டிய கடமை காவல்துறையினருக்கு உள்ளது. காவல்துறையை கண்காணிக்கும் உயர்ந்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது நிரபராதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

புகார்தாரர் ஒரு வழக்கை மேற்கொண்டு புலன்விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173(8) ன் கீழ் மனுதாக்கல் செய்ய முழு உரிமை எப்போதும் உண்டு.

சட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புதிய மாறுதல்களை நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சட்டம் என்பது ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டிருக்கிற ஒரு உயிரினம் ஆகும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களையும் அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். திருத்தம் செய்ய வேண்டும்.

ஒரு புகாரில் ஒளிந்துள்ள உண்மையை வெளிக்கொண்டு வர அந்த வழக்கில் மேற்கொண்டு புலன்விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி புகார்தாரர் மனுதாக்கல் செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக சில வழக்கு தீர்ப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளேன். நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

வினைய் தியாகி Vs இஸ்ரத் அலி (2013-SC-CRL-292)

சந்திரபாபு Vs மாநில அரசு (2015-3-MLJ-CRL-597)

இரவீந்திரநாத் Vs K. சந்திரகாந்தி (2015-4-MLJ-CRL-46)

வர்கீஸ் Vs உத்திர பிரதேச மாநிலம் (2016-3-MLJ-CRL78)

சாமுவேல் ஜெபக்கனி Vs காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பலர் (CRL.R.C. No – 181/2016, DT – 7.8.2016, 2017-1-MLJ-CRL-51.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காவல்துறை போடும் FIRயை உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்வது எப்படி?காவல்துறை போடும் FIRயை உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்வது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 35 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

புதுச்சேரி கல்வித்துறை குடிமக்கள் சாசனம் | Citizen Charter of Puducherry Education Deparmentபுதுச்சேரி கல்வித்துறை குடிமக்கள் சாசனம் | Citizen Charter of Puducherry Education Deparment

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019. (Eng-Tex, Tamil-Video)The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019. (Eng-Tex, Tamil-Video)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 58 JUDICIAL NOTIFICATIONS The High Court of Madras (Conduct of Proceedings by Party-In-Person) Rules, 2019.(Roc.No. 83831-A/2019/F1) No.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)