Trust Registration (டிரஸ்ட் பதிவு) பற்றிய விளக்கம்..!
Trust என்றால் என்ன?
ஒரு நபர் (Settlor / Author) தனது சொத்து, பணம் அல்லது வளங்களை பொதுநலன் அல்லது தனிநபர் நலன் (எ.கா. குடும்ப நம்பிக்கை) நோக்கத்தில், சிலர் (Trustees) வழியாக நடத்தும்படி ஏற்படுத்தும் சட்டரீதியான அமைப்பே Trust (நம்பிக்கை).
Trust வகைகள்
- Private Trust – குடும்ப நலன் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்காக (Indian Trusts Act, 1882 படி).
- Public Trust – பொதுமக்கள் நலன், கல்வி, மருத்துவம், சமூக சேவை, மத/தர்ம அறக்கட்டளை போன்ற நோக்கங்களுக்காக.
சட்ட அடிப்படை
Indian Trusts Act, 1882 – Private Trusts
Charitable and Religious Trusts Act, 1920,
சில மாநிலங்களில் தனித்தனியாக Charity Commissioner Act அல்லது Hindu Religious & Charitable Endowments (HR & CE) Act உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் Public Trusts HR & CE Act, 1959 கீழ் வரும்.
Trust பதிவு செய்ய குறைந்தபட்சம் தேவைப்படும்.
குறைந்தபட்சம் 2 Trustees (பொதுவாக 3–5 பேர்).
ஒரு Settlor (Founder).
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.
- Trust Deed (முக்கிய ஆவணம்) – இதில் வரும்:
Trust பெயர்
முகவரி
Trust நோக்கங்கள் (எ.கா. கல்வி, மருத்துவம், சமூக நலன்)
Settlor (Founder’s) விவரம்
Trustees விவரம்
Trustees அதிகாரங்கள், பதவிக்காலம்
சொத்து / பணம் எந்த அளவுக்கு Trust-க்கு ஒதுக்கப்படுகிறது
விதிமுறைகள் (Meetings, Audit, Dissolution clause).
- Settlor மற்றும் Trustees – அடையாள ஆவணங்கள் (Aadhar, PAN).
- Passport size Photos.
- Trust Office Address proof (வாடகை ஒப்பந்தம் / சொந்தக் காப்பு).
- Stamp Duty (State law படி – தமிழ்நாட்டில் பொதுவாக ₹200 non-judicial stamp paper-ல் Trust Deed தயாரிக்கப்படுகிறது).
பதிவு செய்யும் நடைமுறை (Tamil Nadu)
- Trust Deed non-judicial stamp paper-ல் தயாரிக்க வேண்டும்.
- Sub-Registrar Office (முகவரி அதிகார வரம்பு) உள்ள சார் பதிவகத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.
Settlor + இரண்டு சாட்சிகள் அங்கு கையெழுத்திட வேண்டும்.
பதிவு கட்டணம் (Fees)
Stamp Duty – ₹200 (Non-judicial stamp paper)
Registration Charges – சுமார் ₹1000 வரை (Sub-Registrar Office-ல்).
- பதிவு முடிந்ததும், Sub-Registrar Registered Trust Deed வழங்குவார்.
- பின்னர் வங்கி கணக்கு திறக்கலாம்.
- (Public Trust என்றால்) தேவையானால் HR & CE Department-ல் கூட பதிவு செய்ய வேண்டிய சூழல் வரும்.
Trust Registration-ன் நன்மைகள்.
சட்டபூர்வ அந்தஸ்து கிடைக்கும்.
வங்கி கணக்கு திறக்கலாம்.
சொத்து/நிதி ஏற்கலாம்.
NGO Darpan Portal (NITI Aayog) – அரசு நிதி / திட்டங்களுக்கு விண்ணப்பிக்க.
- CSR Funding பெற Ministry of Corporate Affairs portal-ல் பதிவு.
IT Act Section 12A & 80G பதிவு செய்தால் Income Tax exemption கிடைக்கும்.
அரசு நிதி / CSR நிதி பெறலாம்.
Trust Registration
- பெயர் தேர்வு.
Trust பெயர் யாருக்கும் குழப்பம் தரக்கூடாது.
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட Trust பெயர் மீண்டும் வைக்க முடியாது.
- Trust Deed Draft செய்வது.
Stamp Paper – தமிழ்நாட்டில் பொதுவாக ₹200 Non-judicial Stamp Paper.
Draft செய்யும் போது கீழ்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்:
- Title: “Trust Deed”
- Date & Place
- Settlor பெயர், முகவரி, PAN
- Trustees விவரம் (பெயர், வயது, முகவரி, PAN)
- Trust நோக்கங்கள் (Charitable, Religious, Educational, Social welfare)
- ஆரம்ப நிதி / சொத்து – எவ்வளவு (எ.கா. ₹10,000/- அல்லது நிலம்)
- Trustees பதவிக்காலம், அதிகாரங்கள், resign / removal process
- Meetings நடத்தும் விதிகள்
- Bank Account authority யார் என்பதற்கான விவரம்
- Dissolution (Trust மூடினால் நிதி / சொத்து எப்படி பயன்படுத்தப்படும்).