நிலத்தில் ஏற்பட்டுள்ள தவறை சரி செய்வதற்கான புகார் மனு.
*அரசாணை நிலை எண்: 1971 வருவாய்த் (நி. அ. 2) துறை, நாள்: 14.10.1988*
இன் கீழ் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தனி வட்டாட்சியரால் வழங்கப்படும் பட்டாக்களின் மீது ஆட்சேபணை இருப்பின் அதனை உதவி நிலவரித் திட்ட அலுவலரிடம் மேல்முறையீடு செய்து திருத்தம் செய்து கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*அரசாணை நிலை எண்: 693 வருவாய்த் [நி. அ. 2(1)] துறை, நாள்: 24.07.1997* இன் கீழ் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தனி வட்டாட்சியரால் வழங்கப்படும் பட்டாக்களின் மீது ஆட்சேபணை இருப்பின் அது தொடர்பாக வரும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கோட்டாட்சியர் வழங்கிய ஆணையில் திருப்தி இல்லையெனில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு சீராய்வு மனுவாக தாக்கல் செய்யலாம்.
*அரசாணை நிலை எண்: 396 வருவாய்த் [நி. அ. 2(1)] துறை, நாள்: 18.09.2003* இன் கீழ் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தனி வட்டாட்சியரால் வழங்கப்படும் பட்டாக்களின் மீது ஆட்சேபணை இருப்பின் அது தொடர்பாக வரும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பிறப்பித்த ஆணையில் தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்டி திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் அதே போல் மற்ற மனுக்களையும், தேவையானால் தன்னிச்சையாக ஏற்று திருத்துவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*வருவாய் நிலை ஆணை எண்: 21 (4) மற்றும் அரசாணை (நிலை) எண்:808. நாள்: 05.10.1998*
இன் கீழ் நீண்ட காலமாக ஒருவர் கிராம நத்தம் விதத்தில் குடியிருந்து அனுபவம் செய்கிறார் என்றால் 35 சென்ட் வரை அவர் அனுபவம் செய்ய அனுமதிக்கலாம் பட்டாவும் வழங்கலாம் என்று சார்நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர், இயக்குனர், சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு நில உடமை பதிவேடு திட்டம் (பட்டா பாஸ்புக் சட்டத்தின் கீழ்) சம்பந்தமாக மதிப்பிட்டு குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*நத்தம் நிலவரி திட்டத்தில் ஏற்பட்ட தவறினை திருத்தக் கோரி மனு.*
*மனுதாரர்:*
சதீஸ்குமார் குருசாமி,
இந்திரா காலனி,
துரைச்சாமியாபுரம்,
சிவகிரி தாலுகா,
தென்காசி மாவட்டம் – 627764.
*பெறுநர்:*
சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையர்,
நில நிர்வாக அலுவலர் அலுவலகம்
சென்னை – 5.
*பொருள்:* நத்தம் நிலவரி திட்டத்தின் போது எனக்கு சொந்தமான சொத்தை கிராம கணக்கு பதிவேட்டில் தவறாக பதிவு செய்ததை சரி செய்ய வேண்டியது தொடர்பாக.
*பார்வை:*
1. ____ தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த பதிவு ஆவண எண்.: __ நாள் 23-10-1960.
2. எனது தகப்பனார் கிரயம் பெற்ற பதிவு ஆவண எண். ____ நாள். 27-08-1986.
3. எனது தகப்பனார் மனுதாரர்ரான எனக்கு தான செட்டில்மெண்ட் பதிவு ஆவண எண்:______ நாள். 28-07-2015.
4. 1952 ஆம் வருடம் முதல் 2022 ஆம் வருடம் வரை வில்லங்கச் சான்று.
*கீழ்க்கண்ட அரசாணை மற்றும் சுற்றறிக்கை யின்படி இம்மனுவை பரிசிலனை செய்ய கோருகிறேன்.*
1. தமிழக அரசு அரசாணை (நிலை) எண். 1971. நாள். 14-10-1988.
2. தமிழக அரசு அரசாணை (நிலை) எண். 693. நாள் 24-07-1997.
3. அரசாணை (நிலை) எண்.396. நாள். 18-09-2003.
4. அரசாணை (நிலை) எண் .808. நாள். 05-10-1998.
5.பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தம் (ஏ) துறை. அரசாணை (நிலை) எண். 73 நாள். 11-06-2018.
6.பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தம் (ஏ) துறை. அரசாணை (நிலை) எண்.114 நாள். 20-08-2008.
*மதிப்பிற்குரிய அலுவலர் அவர்களுக்கு,*
1. மனுதாரர் ஆகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். “இந்திய அரசமைப்பு 1950 கோட்பாடு 51அ(ஒ) ன் படி கடமையாக இம்மனு சமர்ப்பிக்கப்படுகிறது”.
2. பார்வை 1 இல் கண்ட சொத்தானது _____ இவர்களிடம் எனது தகப்பனார் _____ அவர்கள் பார்வை 2 இல் கண்டவாறு கிரையம் பெற்றுள்ளார்.
3. பார்வை 2 இல் கண்டவாறு கிரயம் பெற்ற சொத்தை
எனது தகப்பனார் ____ அவர்கள் தன் குமாரரும் மனுதாரரும் ஆகிய எனக்கு பார்வை 3 இல் கண்டவாறு செட்டில்மென்ட் ஆவணம் எழுதி கொடுத்துள்ளார்.