சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டால் வழக்குப் பதியக்கூடாது – உச்ச நீதிமன்றம்
நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளின் நடவடிக்கை பற்றியோ சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பதிவிட்டால் வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.
நாட்டில் சமூக வலை தளங்களில் ஒருவரைப் பற்றியோ அல்லது சமூக நடவடிக்கை பற்றியோ அல்லது அரசியல் கட்சிகளின் நடவடிக்கை பற்றியோ அல்லது ஆளுகின்ற அவர்களை பற்றியோ பதிவிட்டால் இதற்கு முன்பு காவல் துறையில் புகார் அளித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது…
இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் சமூக வலைத் தளத்தில் அரசு துறைகள், அரசு அலுவலர்களின் செயல்கள், சமூக சார்ந்த தகவல்கள், செய்திகள், போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டால் சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் வழக்கு பதியக்கூடாது, கைது செய்யவும் கூடாது அவர்கள் மீது எவ்வித புகாரும் பதியவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…
நீதிமன்ற பிரிவு 66 ஏ யின் படி அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது…
அதனால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் தவறுகளை சுட்டிக் காட்டி அநியாய அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு அநீதிக்கு எதிராக போராடி தவறுகளை சுட்டிக்காட்ட இனி தடை ஏதுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் எவ்வித தங்கு தடையுமின்றி சமூக பணி யாற்றலாம்.
நீதிமன்ற பிரிவு 66A என்பது 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு, மின்னஞ்சல் அல்லது பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் “ஆத்திரமூட்டும்” அல்லது “தீங்கு விளைவிக்கும்” தகவல்களை பரப்புவதை குற்றமாக்கியது. எனினும், இந்த பிரிவு இந்திய உச்சநீதிமன்றத்தால் 2015 இல் ரத்து செய்யப்பட்டது, ஏனெனில் இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்று கருதப்பட்டது.