நிலம் – ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும், ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி மாற்று இடம் கண்டறிந்து தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் – வெளியிடப்பட்ட ஆனை – முன்னேற்றம் ஆய்வு – திருத்த ஆணை வெளியிடப்படுகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில முடிவு அலகு, நிழு-1(2) பிரிவு.
அரசாணை (நிலை) எண்.318,நாள்: 30.08.2019.
- அரசாணை நிலை எண்.465, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை,நாள்: 27.11.2018.
- அரசாணை (நிலை) எண்.496, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை,நாள்: 24.12.2018.
3) கூடுதல் தலைமைச் செயலாளர் / நில நிருவாக ஆணையர் அவர்களின் கடித எண். எப்3/11339/ 2018 மற்றும் கடித எண். எப்3/2794/2018 நாள்: 3.7.2019.
2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு துணை முதலைமச்சர் அவர்களால் நீர்நிலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், இந்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டுக்கு உட்படுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தைச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டது.
அதேபோல், ஆட்சேபணையற்ற அரசு புறப்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்ரமனங்களைச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு,
வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தவும். மேலே இராண்டில் படிக்சுப்பட்ட அரசானையில் வெளியிடப்பட்டது.
- இச்சிறப்புத் திட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் என உத்தரவிடப்பட்ட நிலையில், இந்திய பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 10.03.2019 முதல் 27.05.2019 வரை தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் , வருவாய் அலுவலர்கள் தேர்தல் பணிகளை கவனித்து வந்ததாலும், இத்திட்டங்களைச் செயல்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும், எனவே, இந்த கால அவகாசத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மேலே மூன்றவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்நில் நிருவாக ஆனையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- இந்நிலையில், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், ஆட்சேபனையற்றதாக கண்டறியப்பட்ட சுமார் 1,28,065 இனங்களில் இதுவரை 19,501 இனங்களில் பட்டுமே வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனைப்பட்டா வழங்கி, ஆக்ரமணங்களை அகற்றி, ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்து அதன் தன்மை மாறாமல் பயன்படுத்தும் பணியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை சீரமைத்து மேலும் கால அவகாசம் வழங்கி செயல்பாட்டை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கீழ்கண்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்திட்டங்களை செயப்படுத்த அரசு ஆணையிடுகிறது.
- கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து புறப்போக்கு நிலங்களிலும் உள்ள குடியிருப்பு ஆக்சமணங்கள் மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேட்டில் பதிவு செய்த விபரங்களின் அடிப்படையில் ஆக்ரமண விபரங்களைத் தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே இக்கணக்கெடுப்பு முடிக்கப்பட்டிருப்பின் கணினியில் பதிவின் மூலம் புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டு அதன் அப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” இதுவரை இக்கணக்கெடுப்பு முடிக்கப்படாமல் இருந்தால், 3106.2019 க்குள் ஆக்ரமண விபரங்களைத் தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
- சென்னை மாநகர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சென்னை மாநகர் சூழ் பகுதிகளிலும், இதர மாநகராட்சிப் பகுதிகளிலும் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்கள் பற்றிய விபரங்களை மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேடு மற்றும் புலத்தணிக்கை ஆகியாற்றின் மூலமாக விபரங்களைச் சேகரித்து கணினியில் பதிவு செய்து கொள்கை முடிவு எடுக்கும் பொருட்டு, நில நிர்வாக ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பவேண்டும். இப்பகுதிகளில், தடையாணை பதிவு செய்யப்பட்டுள்ள இனங்களில் அதை தளர்வு செய்வது குறித்து அரசே முடிவு செய்யும்,
- ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வருவாய் நிலை ஆணை எண்.21-இன் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வரன்முறை செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட நிலங்களில் ஆட்சேபனையுற்ற நிலங்களான தோப்பு, களம் போன்ற இனங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானத்தைப் பெற்று அதன் அப்படையில் வரன்முறை செய்வாம்.
- கோயில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்கள் அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி விதி முறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி, நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசானை (நிலை) எண்.200, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை. நாள் 02.11.2018-இல் உள்ள வழிகாட்டுதல்களின் அப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியாக, நில உரிமை பெற்றுள்ள கோயில் வாரியாக தொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணைப்பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட
வேண்டும். - அதேபோல் மேய்க்கால், மந்தைவெளி போன்றவையும் ஆட்சேபனைக்குரிய ஆக்ரமிப்புகளாக இருந்தபோதிலும், ஏழைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொது நலனை கருத்தில் கொண்டும். நீண்ட கால ஆக்ரமணங்கள் கருத்தில் கொண்டும் கால்நடைத்துறையின் அனுமதி பெற்று, மாவட்ட நிர்வாகம் உரிய
விதிமுறைகளுக்குட்பட்டு, முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படும். அரசு ஆணையின்படி வகைமாற்றம் செய்யப்பட்டு, குடியிருப்பு ஆக்ரமணங்கள் வரன்முறைப்படுத்தப்படவேண்டும். - நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்ரமணங்களை அப்புறப்படுத்தி அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு, அத்தகைய குடியிருப்பு ஆக்ரமணம் செய்துள்ள ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு இவைச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட வேண்டும். அத்தகைய தகுதியான பயனாளிகளுக்கு மாற்று புலமாக தகுதியுள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் அதே கிராமத்தில் இல்லாத நிலையில் தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தியோ அல்லது பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு நிலத்தை பெற்றோ மறுகுடியமர்வு செய்யும் வகையில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட வேண்டும். நிலமதிப்பு அதிகமுள்ள நகர் சார்ந்த பகுதிகளில் தனிப்பட்டாவுக்கு மாற்றாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தர வழிவகை செய்யப்பட வேண்டும்.
- ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்குகளில் குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்துப்போதும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களுக்கு மாற்று இடம் வழங்கும்போதும் நகர்புறத்திலும், கிராமப்புறத்திலும் ஆண்டு குடும்ப வருமணம் மூன்று இலட்சம் ரூபாய் வரை உள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆண்டு வருமானம் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி நிலமதிப்பு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பின் படி வரும் செய்து கொண்டு, அதன்
அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட வேண்டும். இந்த வரன்முறை திட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஆக்ரமண விஸ்தீர்ணம் 25 சென்ட்டுக்கு மிகாமல் இருந்து போதுமான இடம் இருந்தால் குடும்பத்திற்கு தலா 2 சென்ட்டுக்கு மிகாமலும் கிராமப்புரங்களில் 3 சென்ட்டுக்கு மிகாமலும் வீட்டுமனைப்பட்டா வழங்கலாம். நகர்ப்புற பகுதிகளில் நிலமதிப்பை கருத்தில் கொண்டு ஆக்ரமண விஸ்தீரனம் 25 சென்ட்டுக்கு கூடுதலாக இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏதுவாக அந்த நிலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்து அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டங்களின் கீழ் நிலமதிப்பு அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு ‘நிதி அதிகார வரப்பு கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்படடுகிறது. - வட்டாட்சியர் – 1.0 இலட்சம் வரை
- வருவாய் கோட்டாட்சியர் -1.0-2.5 இலட்சம் வரை
- மாவட்ட ஆட்சியர் – 2.5 -5.0 இலட்சம் வரை
4 நில நிர்வாக ஆணையர் – 5.0 இலட்சத்திற்கு மேல்- ஆட்சேபனைற்ற அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வருவாய் கோட்ட அலுவர் தலையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் சரிபார்க்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாவட்ட அளவிலான குழு நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு அனுமதி தேவையில்லாத இளங்களில் குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறை
செய்யலாம். - மாவட்ட அளவிலான குழுவினால் ஆக்ரமணங்கள் வரன்முறை செய்ய இயலாத நேர்வுகளில் சம்மந்தப்பட்ட புலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கூட்டுத் தனிக்கை செய்து, அதனடிப்படையில், முன்மொழிவினை வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், நில நிர்வாக ஆனையர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாநில குழுவிற்கு அனுப்பி, உரிய விலக்களிப்பு ஆணை பெற்றபின் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமானப்பட்டா வழங்கவேண்டும்.
- தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்ரமணங்களை வருவாய் கோட்ட அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலரால் பதியப்பட்டிருப்பின் அதனை மாவட்ட ஆட்சியரால் விலக்களிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனனப்பட்டா வழங்கலாம். மாவட்ட ஆட்சியரால் தடையாணைப் புத்தகத்தில் பதியப்பட்டிருப்பின் மாவட்ட ஆட்சியர் தலைமயில் உள்ள குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும். நில நிர்வாக ஆணையராலோ அல்லது அரசளவிலோ பதிவு செய்ப்பட்டிருப்பின் உரிய முன்மொழிவுகளை பெற்று மாநில குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும்.
- இச்சிறப்பு வரன்முறைத் திட்டங்கள் ஓராண்டு காலத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், இந்த விலக்களிப்பு அதிகாரங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
- இந்த அரசாணைப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கணினியில் பதியப்பட்ட புள்ளிவிபரங்களின் அப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் மாதந்திர ஆய்வு அறிக்கையை நில நிருவாக ஆணையருக்கு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்திட்டம் சிறப்பாக செயல்முறைப்படுத்தப்படுகிறதா என்பதை கூடுதல் தலைமைச் செயலாளர் / நில நிருவாக ஆணையர் அவர்கள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
- (ஆளுநரின் ஆணைப்படி)
- அதுல்ய மிஸ்ரா,
- அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
- பெறுநர்:
- கூடுதல் தலைமைச் செய்லாளர்/ நில நிருவாக ஆணையர், சேப்பாக்கம், சென்னை-05.
- அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் /மாவட்ட வருவாய் அலுவலர்கள்,
- தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள், சென்னை-9.
- நகல்:
- மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9
- ஊரக வளர்ச்சி (ம) பஞ்சாயத்து ராஜ், சென்னை-9
- நிதித்துறை, தலைமை செயலகம் சென்னை-9
- மாண்புமிகு அமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை-9.
- வருவாய் பே.மே.த்துறை கூடுதல் தலைமைச் செயலரின் தனிச்செயலர், சென்னை-9.