GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் பாத்துக்காக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய விபரங்கள்.

வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகள்…!

  1. A – பதிவேடு – இது இரண்டு பிரதிகள் இருக்கும் பதிவேடு. ஒன்று விஏஓ அலுவலகத்திலும், மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்திலும் இருக்கும்.

இந்த பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் சர்வே எண், உட்பிரிவு மாறுதல், நில ஒப்படை, நில மாற்றம் சம்மந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும், விஏஓ அலுவலக பிரதியிலும் வட்டாட்சியரால் பதியப்பட வேண்டும்.

  1. B – பதிவேடு : பழைய இனாம் எஸ்டேட் நிலங்கள் பற்றிய விவரங்களை அறிய உதவும். அதாவது 1963 க்கு முன்பு உள்ள கிராம கணக்கு விபரங்களை அறியலாம்.
  2. B1 – பதிவேடு : தேவதாசிகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள், ஜமீன் சமய கொடைகள், அறக்கொடைகள், கிராம பணிக் கொடைகள் மற்றும் பலவிதமான கொடை அளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள் இருக்கும்.
  3. C – பதிவேடு : குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
  4. D – பதிவேடு : தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்
  5. F – பதிவேடு : நில உரிமையை அரசின் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றிய நிலங்கள் குறித்த விபரங்கள் இருக்கும்.
  6. G – பதிவேடு : வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசுக்கு வந்து சேர்ந்த நிலங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்.

இவற்றில் B மற்றும் B1 பதிவேடுகள் தற்போது பராமரிக்கப்படவில்லை. ஆனால் இனாம் மற்றும் ஜமீன் சொத்துக்களை இந்த பதிவேடுகள் மூலம் அறியலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இறப்புச் சான்றிதழ் என்பது ஒரு மதிப்புமிக்க ஆவணமாகும், அதைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்.இறப்புச் சான்றிதழ் என்பது ஒரு மதிப்புமிக்க ஆவணமாகும், அதைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Views: 58 TN இறப்பு சான்றிதழ் இறப்புச் சான்றிதழ் என்பது ஒரு மதிப்புமிக்க ஆவணமாகும், இது ஒரு நபரின் மரணம், உண்மை மற்றும் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. மரணத்தை பதிவு செய்வது என்பது நபரின் நேரம் மற்றும் இறந்த

துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Views: 43 கட்டாக்: துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை ஒருவர் சகித்துக்கொள்ள சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், தம்பதியினரை விவாகரத்து செய்ய அனுமதிக்கும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஒடிசா உயர்