GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்க கூடாது.

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்க கூடாது.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்கும் போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கூறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள படி விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு எந்தவிதமான அறிவிப்பும் அனுப்பாமல் உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க விரும்பினால் அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் சிவகுமார் சதா Vs டெல்லி மாநகராட்சி (1999-3-SCC-161 என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

மேலும் “Dr. V. தேவசகாயம் Vs சத்தியதாஸ் (2002-2-LW-672)” என்ற வழக்கில், ஒரு வழக்கில் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்பாமல் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்கும் பொழுது அதற்கான காரணத்தை அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு காரணங்களை குறிப்பிடாமல் அளிக்கப்பட்ட உத்தரவு ஒரு நிமிடம் கூட நடைமுறையில் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை வலியுறுத்தி 1994-4-SCC-225 என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது
உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுஅந்த முறையில் தான் அந்த விஷயம் நடைபெற வேண்டும் கீழமை நீதிமன்றங்கள் அந்த விதி முறைகளுக்கு முரணாக செயல்பட்டு ஒரு உத்தரவை வழங்கினால் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் விரிவான காரணங்களை கூறாமல் வாதிக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு.CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 91 வணக்கம் நண்பர்களே…! CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு. அரசு அலுவலகங்களின் CCTV

தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம்.தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 21 தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் ஏதாவது உள்ளதா? லட்சமி என்ற சிறுமி அவளது தந்தை மூலமாக உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை

Equal Justice for Everyone

Legal Notice U/s 101 of Indian Evidence Act, 1872 | 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்புLegal Notice U/s 101 of Indian Evidence Act, 1872 | 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 77 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)