தகுதி இல்லாத நபருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய யாருக்கு புகார் அளிக்க வேண்டும்..
தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 பிரிவு 12-ன் கீழ் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் மனு.
மனுதாரர்:
தொடர்பு எண்:
பெறுநர்:
வருவாய் கோட்டாட்சியர்
பொருள்: தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய வேண்டியது தொடர்பாக.
பார்வை:
- தகுதியற்ற நபருக்கு வழங்கி இலவச வீட்டு மனை பட்டா எண்: ——–,நாள்:———–.
- பட்டா பெற்ற நபரின் பெயரில் உள்ள நிலங்களின் பட்டா எண்கள் ———— மற்றும் சர்வே எண்கள்:———–.
- பட்டா பெற்ற நபரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்கள் ————-.
- பட்டா பெற்ற நபரின் அசையும் சொத்து விவரங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்:———–.
- வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண்: 465, 496, 318, 854, 75, 168, 142, 498, 711, 34, 241, 579, 366, 43, 482, 172 மற்றும் 97.
- —————— ஆம் தேதி வருவாய் வட்டாட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 பிரிவு 11 இன் கீழ் அனுப்பிய மனு நகல்.
மதிப்பிற்குரிய வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு.
- இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 5 மற்றும் பிரிவு 51(அ)(ஒ) இன் படி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்திய திருநாட்டை லஞ்ச லாவண்யம் இல்லாத ஊழல் அற்ற நாடாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்பதை ஏற்று செயல்பட்டு வருகிறேன்.
- பார்வை 1- இல் கண்டவாறு இலவச வீட்டு மனை பட்டா பெற்ற நபர் பார்வை 2, 3 மற்றும் 4 இல் கண்டவாறு தனக்கும், தனது குடும்ப நபர்களின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை மறைத்து பட்டா பெற்றுள்ளார்.
- தகுதியற்ற நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 375 ன் படி இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரான செயலாகும்.
- இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து பார்வை 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் நிலை ஆணைகளை பின்பற்றாமல் வட்டாட்சியர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியிருப்பது அரசாணை, வருவாய் நிலை ஆணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரான செயலாகும்.
- மேலும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறையை விதியை பின்பற்றாமல் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தகுதியற்ற நபரை தேர்வு செய்து பரிந்துரை செய்துள்ளது பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 198, 201 & 257 இன் படி குற்றமாகும்.
- தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை வருவாய் வட்டாட்சியர் சிறிதும் கடைப்பிடிக்காமல் தகுதியற்ற நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார்.
- தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதை ஆட்சபனை தெரிவிக்கும் வகையில் எந்தவொரு அறிவிப்போ, தண்டராவோ சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் போடப்படவில்லை.
- தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 (1) ன் படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா வழங்குவது குறித்து அறிவிப்பு மற்றும் படிவம் – 1 வழங்கப்படவில்லை.
- தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியிருப்பது இயற்கை நீதிக்கு எதிரான மற்றும் சட்ட விரோதமாகன செயலாகும்.
எனவே கணம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மேற்படி மனு மீது உரிய விசாரணை செய்து சட்டத்திற்கு புறம்பாக தகுதியற்ற நபருக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய வேண்டியும், பார்வை 6 இல் கண்டவாறு அனுப்பிய மனு மீது நாளது தேதிவரை எந்த வித விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காத வட்டாட்சியர் மற்றும் பட்டா வழங்க பரிந்துரை செய்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் முன்னிலையில் இந்த மனுவை சமர்ப்பிக்கிறேன்.
நாள்:
இடம்:
மனுதாரர்