*பத்திரங்களில் கையெழுத்தும் கைரேகையும்*
1) பத்திரத் பதிவின் போது, சார்பதிவாளர், ஆவணங்களிலும், பத்திரத்திலும், கைரேகை எடுப்பார்கள். அதில், கருப்பு இங்கில் அமுக்கி, ஆவணங்களில் ரேகை வைக்கும்போது, தெளிவில்லாமல் விழுந்துவிட்டது என்றால், ஒன்றும் பிரச்சினை இல்லை. அப்படி விழுந்து விட்டதே என்று ரத்து செய்யக்கூடாது. அதற்குக் கீழே இன்னொரு ரேகை பதிவை பதிக்க வேண்டும்.
2) அதன் பிறகு, இரண்டு ரேகைகளுக்கு கீழே, முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என்று எழுதிட வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் பதிவு நடைபெறுவதால், ரேகையை இங்கில் எடுக்காமல், டிஜிட்டலில் எடுப்பதால், அது போன்ற பிரச்சினை இப்பொழுது இல்லை. அதுவே இப்பொழுது, ஏதாவது காரணங்களுக்காக, மேனுவலில் கைரேகை வைத்தால் மேற்கண்டவாறு செய்ய வேண்டும்.
3) இதுவே பதிவுக்கு செல்லாத பிற ஆவணங்களில், கைரேகை வைத்தால், இதுபோல் முதல் ரேகை தவறாக இருந்தால், இரண்டாவது பதிப்பை (impression) வைக்க வேண்டும்.
4) அதே போல், பத்திரத் பதிவு நடக்கும் போது, இடது பெருவிரல் ரேகையில், காயம் ஏற்பட்டு தெளிவில்லாமல் இருந்தாலும், அல்லது இடது பெருவிரல் இல்லாமல் இருந்தாலும், அல்லது இடது பெருவிரல் ஆபரேஷன் செய்யப்பட்டு, கட்டுப் போடப்பட்டு இருந்தாலும், இடது கையில் உள்ள ஏதாவது ஒரு விரலின் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
5) இன்னும் சில சந்தர்ப்பங்களில், விபத்துக்குள்ளாகி, இடது கை விரல்கள் ஐந்துமே சிதலமடைந்து இருக்கும். ஐந்து விரலை வைத்தும் ரேகை பதிய முடியாது. அப்படி இருக்கும் நிலையில்தான், அடுத்து வலக்கையில் இருக்கும், ஏதாவது ஒரு விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.
6) அதாவது பத்து விரல்ககளில், நன்றாக ஒரே ஒரு விரல் இருந்தாலும் அந்த விரலை பயன்படுத்தலாம். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்றால், எந்த ரேகை பதிவு செய்யப்பட்டதோ, அந்த ரேகை இருக்கிற இடத்திற்கு கீழே, மேலும் இடது கையில் எந்த விரல், அல்லது வலது கையில் எந்த விரல், என்று குறிப்பு எழுத வேண்டும்.
7) பொதுவாக, இடது கை கட்டைவிரல் ரேகை பதிந்தால், அதன் கீழே (Left Thump Impression) L T I (ரேகைபதிப்பவரின் பெயர்) போடுவேண்டும். அதே போல, எந்த கையின் எந்த ரேகை என்று சிறு குறிப்பு எழுத வேண்டும்.
8) சரி 10 விரல்களும், சரி இல்லைமல், தொழுநோய், தொற்று வியாதி நோய், போன்ற சூழ்நிலைகளில், என்ன செய்ய வேண்டும் என்றால், ரேகையே தேவை இல்லை என்று விட்டு விடலாம். அந்த நேரங்களல் ரேகை பதிக்க முடியாத்தற்கான, காரணங்களை தெளிவாக பத்திரத்தில் எழுதியிருக்க வேண்டும். இது இங்க் மூலம் பதிக்கும் ரேகைக்கும் பொருந்தும் டிஜிட்டல் ரேகைக்கும் பொறுந்தும்.
9) ஒரு சிலர், கிரைய பத்திரங்களில் கையெழுத்துப் போடும்போது அடையாள அட்டைகளிலும் அதற்குமுன், பத்திரங்களிலும் தமிழில் கையெழுத்திட்டு இருப்பார்கள். தாங்கள் படித்துவிட்டதாக உணரந்தபிறகு, தற்போது ஆங்கிலத்தில் தன்னுடைய கையெழுத்தை புதியதாக போட்டு பழகியிருப்பார்கள்.
10) அதே போல, ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு வந்தவர்கள், பிறகு தமிழ் உணர்வு வந்து, தமிழில் கையெழுத்திட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு சிலர், அம்மா, மனைவி, காதலி, பெயரையெல்லாம் கையைழுத்தில் சேரக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
11) இந்த மாதிரி நேரத்தில், புதிய கையெழுத்து போடும்போது, பழைய கையெழுத்து பற்றி, இதற்கு முன் அப்படி கையெழுத்து இடுவது வழக்கம் என்றும், அதனை நான் மாற்றிவிட்டேன் என்று சிறிய குறிப்பை பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.
12) ஒரு சில பழைய நபர்கள் இருக்கிறார்கள். கையெழுத்து போட்டால், பத்திரத் தாளை பாதி நிரப்புவார்கள். அழுத்தி பேனா பிடித்து முத்திரை தாளை சேதமாக்குவார்கள். சிலர் பதட்டத்தில், கையெழுத்தை ஒழுங்காக போட மாட்டார்கள். அந்த மாதிரி நேரங்களில் கைரேகை வாங்கலாம். அப்பொழுது முதலில் கையெழுத்து இடுவது என் வழக்கம் என்றும், கைநடுக்கம் காரணமாக தற்போது ரேகை பதிக்குறேன் என்றும் குறிப்பிட வேண்டும்.
இதுவே கையெழுத்து மற்றும் காய் ரேகை வைப்பதற்கான முறைகளாகும் .