GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் அரசாணைகள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் அரசாணைகள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்.

ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள்.

ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.

  1. அரசு அலுவலர்களும், பணியாளர்களும், தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண். 1134, நாள்.2-.01-1978.
  2. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும், தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30-01-1981.
  3. பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும், என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971
  4. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.
  5. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.
  6. அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.
  7. அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.

ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப்பித்துள்ளது.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இத்துடன் தமிழ் வளர்ச்சிக்கான சில திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)Caste and Religion are not necessary to note in school certificates | பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதி மன்றம் ஆணை (Download)

Views: 65 `No Caste No Religion’ பள்ளிச் சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அரசாணை,தமிழ்நாடு அரசு. நகலை பெற W.P.No.18488 of 2016 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள்

அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம் அது சாத்தியமே.அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம் அது சாத்தியமே.

Views: 10 அரசு நிலத்தை வாங்க முடியுமா? ஆம்… அது சாத்தியமே…. நிலமதிப்பை அங்கீகரிக்கும் அதிகாரிகள் வரம்பு: நிர்ணயம் செய்யப்படும் நிலத்தின் மதிப்பைப் பொறுத்து, அந்த மதிப்பை ஏற்று ஆணை பிறப்பிக்கும் அதிகார வரம்பு பல்வேறு அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை அரசாணை

Views: 12 புறம்போக்கு நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன. இப் புறம்போக்கு நிலங்கள்