உங்க சொத்து பத்திர நகல்கள் தொலைஞ்சு போச்சா?
ஆவணங்களை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html , https://tnreginet.gov.in/portal/
என்ற இந்த இணையதளங்களின் பயன்பாடுகள் என்ன தெரியுமா?
பொதுமக்கள் இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது
சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதை எப்படி பெற வேண்டும் தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின்போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும், ஒரு நிமிட பட்டா திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கு தானியங்கி பட்டா என்று பெயர்.
கிராம நத்தம் பட்டா இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை என்பதால்தான், ஒரு நிமிட பட்டா திட்டத்தை நம்முடைய அரசு விரிவாக்கம் செய்திருக்கிறது.
இதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
எனவே, இதன்மூலம், இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் ..
அதேபோல, உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்படும்.
மக்களின் வசதிக்காக இணையதளம்
அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில்
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, தமிழக மக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் பெற வேண்டுமானால்,
https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் அரசு கொண்டுவந்துள்ளது.
இதனால், இசேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய வேண்டியதில்லை.
அதற்கு பதிலாக பட்டா மாறுதலை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.. இதனால் நேரம் மிச்சமாகும்.
பத்திரம் தொலைந்துவிட்டதா? இதேபோல, தொலைந்த பத்திரத்தையும் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பெல்லாம் பத்திரம் தொலைந்து போய்விட்டால், அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால், தாலுகா அலுவலகத்துக்குதான் நேரில் செல்ல வேண்டியிருக்கும்.
இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தாலும், பல நாட்கள் அலைச்சலுக்கு பிறகுதான், உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திர நகலை பெற முடியும்.
ஆனால், இப்போது அனைத்துமே ஆன்லைன் மயமாக்கப்பட்டுவிட்டதால், தொலைந்து போன பத்திரத்தின் நகலை எளிதாக பெற முடியும்.
எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
- முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைய உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்
- “உள்நுழைவு” என்ற இடத்தில், உங்களுடைய பெயர் மற்றும் பாஸ்வேர்ட், தரப்பட்டுள்ள கேப்சா கோடினை தந்து உள்ளே நுழைய வேண்டும்.
- இந்த வெப்சைட்டிற்குள் இப்போதுதான் நீங்கள் முதல்முறையாக நுழைகிறீர்கள் என்றால், “பயனர் பதிவு” என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்
- அங்குள்ள விவரங்களை பூர்த்தி செய்து, அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும்.. உங்கள் செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும். இப்போது உங்கள் புது கணக்கு ஓபன் ஆகிவிடும்.
- “மின்னணு சேவை” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், “சான்றளிக்கப்பட்ட நகல்” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- “தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க” என்ற ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். இப்போது “ஆவணத்தின் வகைப்பாடு” என்ற இடத்தில் “சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- “ஆவண எண்” என்பதில், உங்களுடைய வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண நம்பரை பதிவிட வேண்டும்
“சார் பதிவாளர் அலுவலகம்” என்ற இடத்தில், எந்த அலுவலகத்தில் நீங்கள் பத்திரம் பதிவு செய்தீர்களோ, அந்த அலுவலகத்தினையும், “ஆண்டு” என்ற இடத்தில், பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஆண்டினையும் தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது கேப்சா கோடினை உள்ளது போலவே டைப் செய்து, “தேடுக” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இப்போது தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.
- “இணையவழி விண்ணப்பிக்க” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, “தனிப்பட்ட விவரங்கள்” என்ற ஆப்ஷனில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, “சரி” என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது “கட்டண விவரங்கள்” என்ற ஆப்ஷனில் “ஆன்லைன் மூலம்” என்பதை தேர்வு செய்து, “செலுத்துக” என்ற பட்டனையும் கிளிக் செய்ய வேண்டும்.
- ஆன்லைனில் பணம் கட்டியபிறகு, ACKNOWLEDGE RECEIPT கிடைத்துவிடும்..
- இறுதியாக, வெப்சைட்டின் முகப்பு பக்கத்திற்கு சென்று “மின்னணு சேவை” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, “சான்றளிக்கப்பட்ட நகல்” என்ற ஆப்ஷனையும், பிறகு “கோரிக்கை பட்டியல்” என்ற 2 ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது, உங்களது விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையொப்பமிட்ட ஆவணம் போன்ற விவரங்கள் காணப்படும்.
- இரண்டு நாள் கழித்து, இந்த வெப்சைட்டை மீண்டும் செக் செய்து, “மின்னணு சேவை” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, “சான்றளிக்கப்பட்ட” என்ற ஆப்ஷன், “கோரிக்கை பட்டியல்” என்ற ஆப்ஷனை, கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்தால், உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.