GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

(Land Disputes)

  1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
    பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018
W. P. No – 491/2012, dt – 4.6.2014
W. P. No – 16294/2012, dt – 4.4.2014

  1. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
    அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
    மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019

  1. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
    ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
    தவறு செய்யும் விஏஓக்களை
    பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 13916/2019, dt – 1.7.2019

  1. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
    வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
    உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No – 18489/2009, dt – 1.7.2011

  1. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
    பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

  1. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
    பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No – 2060/2001, dt – 2.11.2012
S. A. No – 1715/1989, dt – 25.6.2002
W. P. No – 16294/2012, dt – 3.4.2014

  1. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
    நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
    பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court
W. P. No – 18754, 20304, 2613/2005
DT – 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)

  1. பட்டா பெயர் மாற்றம் செய்ய
    நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
    W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
  2. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
    பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high court

  1. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
    பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

legal notice

Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)Legal Notice | How to send legal notice | சட்ட அறிவிப்பு கடிதம் எப்படி அனுப்புவது. (Video)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 Points / குறிப்புகள்: Legal notice / சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பும்போது அது ஒரு அறிவிப்பாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர

High Court Order against Temple festivals

Permission | for festival time in temples | கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்சிகள் இரவு 8 முதல் 11 வரை மட்டும் அனுமதி. உயர்நீதி மன்றம் உத்தரவு.Permission | for festival time in temples | கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்சிகள் இரவு 8 முதல் 11 வரை மட்டும் அனுமதி. உயர்நீதி மன்றம் உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்சிகளை இரவு 8 மணிக்கு தொடக்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும். மேலும், ஆபாசமான வார்த்தைகள்,

போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 போலீஸ் பொய் வழக்கு போடுகிறார்களா? பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள கீழ் கண்டவாறு செயல்பட்டால் நீங்கள் உங்களை தற்க்காத்து

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)