GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அடமானக் கடன்கள் சட்டம்

அடமானக் கடன்கள் சட்டம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அடமானக் கடன்கள் சட்டம்


சொத்துக்களை அடமானமாகக் கொடுத்து கடன் பெறுவது அடமானக் கடன்;

பணம் கொடுப்பவரிடமே சொத்தை ஒப்படைத்து விடுவது; பணம் கொடுத்தவர் சொத்தை அனுபவித்து வருவார்;

கடன் வாங்கியவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாரோ அன்று அவர் சொத்தை திரும்ப பெற முடியும்; அதுவரை கடன் கொடுத்தவரே சொத்தின் சொந்தக்காரர் போல சொத்தை அனுபவிப்பார்;ஒருவேளை, கடன் வாங்கியவர், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால், அவ்வளவுதான்! கடன் கொடுத்தவருக்கே சொத்து சொந்தமாகிவிடும்! கடன் வாங்கியவர் சொத்தை இழந்துவிட வேண்டியதுதான்! இப்படித்தான் பழங்காலத்தில் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்திருக்கிறார்கள்; அந்த வகை அடமானத்தை “மார்ட்கேஜ்” Mortgageஎன்பர்; mort மார்ட் என்றால் இறந்த என்று பொருள்; gage கேஜ் என்றால் பிணை என்று பொருள்;

மார்ட்கேஜ் என்பது பிரென்ச் வார்த்தை;இதைத்தான் இங்கிலாந்து சட்டம் Morguam vadium (or Dead Pledge) என்று சொல்கிறது;அப்படி அடமானம் வைக்காமல், சொத்தை ஒப்படைத்து அதில் வரும் வருமானங்களை மட்டும், கடன் கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டு வந்து, ஒரு காலக்கட்டத்தில் சொத்தை திரும்ப ஒப்படைப்பது என்பது ஒரு வகை அடமானம்; இதில் சொத்து பறிபோகாது;இதை இங்கிலாந்து சட்டம் Vivium Vadiam (or Living Pledge) என்கிறது;

இப்படித்தான் பழங்காலங்களில் அடமானங்கள் இருந்திருக்கின்றன;அடமானக் கடன் வாங்குவது என்பது கிட்டத்தட்ட சொத்தை விற்பதற்குச் சமம்! கடனை திரும்பிக் கொடுத்தால் மட்டுமே சொத்து திரும்பக் கிடைக்கும்! இல்லையென்றால், கடன் கொடுத்தவரின் சொத்தாகிவிடும்!

இந்தியாவில் இப்படிப்பட்ட அடமான முறைதான் வழக்கத்தில் இருந்திருக்கிறது; கடன் கொடுத்தவருக்கு சொத்தை கிரயமாகக் கொடுத்து விடுவது;கடன் வாங்கியவர், பணத்தை திரும்பிக் கொடுக்கும்போது, கடன் கொடுத்தவர்,சொத்தை மறு-கிரயம் எழுதிக் கொடுப்பார்; இதை சென்னை மாகாணத்தில், “அவதி விக்கிரயம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்; இது ரோமன் சட்டத்தில் உள்ள பிடுசியா Fiducia அடமான முறை ஆகும்; (Fiducia = கடன் வாங்குபவர் அவரின் சொத்தை, முழு உரிமையுடன் கிரயமாக, கடன் கொடுத்தவருக்கு எழுதிக் கொடுத்துவிடுவது);

மற்றொரு அடமான கடன் முறைப்படி — சொத்தின் உரிமையாளர், கடன் வாங்கும்போது, அவரின் சொத்தை, கடன் கொடுத்தவருக்கே கொடுத்து விடுவார்;ஆனால் கடன் கொடுத்தவர், அந்த சொத்தை வட்டிக்காக, அல்லது அசலுக்காக, அந்தச் சொத்தில் வரும் வருமானங்களை அனுபவித்துக் கொள்வார்; ஒரு குறிப்பிட்ட கால முடிவில்,அந்த சொத்தை, கடன் வாங்கியவருக்கே (அந்த சொத்தின் உரிமையாளருக்கே) திரும்ப ஒப்படைத்து விடுவார்; இதில் அந்த அடமானச் சொத்து திரும்ப கிடைத்து விடும்; சொத்து பறிபோகாது;இந்த முறைக்கு ரோமன் சட்டத்தில் பிக்னஸ் அடமானம் Pignus என்று பெயர்;இங்கிலாந்தில் இதை யூசுபிரக்சுரி அடமானம் Usufructuary mortgage என்று பெயர்; Use the Fruits. பலனை அனுபவித்துக் கொள் என்பதாகப் பொருள்;

இந்த வகை அடமானமுறை தென் இந்தியாவிலும் இருந்திருக்கிறது;இதையே “போக்கிய அடமானம்” அல்லது “சுவாதீன அடமானம்” என்று சொல்வர்;மலபார் பகுதியில் இதையே “கனம்” அல்லது “ஒத்தி” என்று சொல்வர்;

முகமதிய சட்டத்திலும், அவதி விக்கிரயம் என்ற வகை அடமானம் போன்றே அடமான முறை இருந்திருக்கிறது;அதற்குப் பெயர் “பை-பில்-வாபா” “Bye-bil-wafa” என்று பெயர்; இதில் வட்டிப் பிரச்சனை இல்லை; குரான் கட்டளைப்படி முகதியர் எவரும் வட்டி வசூல் செய்யக் கூடாது; எனவே கடன் வாங்கியவர் சொத்தை, கடன் கொடுத்தவருக்கு கிரயமாகவே கொடுத்துவிட வேண்டும்;அந்த தொகையுடன் மேலும் ஒரு தொகை சேர்த்து திரும்பக் கொடுக்கும் காலத்தில்,மறு கிரயம் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்;

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Writ petition means | ரிட் மனு என்றால் என்ன?Writ petition means | ரிட் மனு என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்

கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAOகிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAO

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

வழக்கறிஞர் அல்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்காடிகள் சார்பாக ஆஜராகி வழக்கை நடத்த முடியுமா?வழக்கறிஞர் அல்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்காடிகள் சார்பாக ஆஜராகி வழக்கை நடத்த முடியுமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 வழக்கறிஞர் அல்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்காடிகள் சார்பாக ஆஜராகி வழக்கை நடத்த முடியுமா? என்ற கேள்வி பல தரப்பிலும் ஓடிட்டே

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)