GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_

மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள் மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் என தமிழகத்தில் அறிவிப்பு செய்யபட்டுள்ளது.

புகார்

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், காவல்துறையினர் மற்றும் அரசு துறையினர், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்கள், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள, மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் அல்லது மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் புகார் அளிக்கலாம்.

வாழ்க்கை சுதந்திரம் சமத்துவம் தனி மனித கௌரவம் குறித்த உரிமைகளே மனித உரிமை எனப்படும் என்று மனித உரிமை பாதுகாப்பு சட்டம் பிரிவு 2(d) தெரிவிக்கிறது இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை அமைப்புகளில் புகார் கொடுக்க கூடாது.

தேசிய மாநில ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரை மட்டுமே இவ்வாறான பரிந்துரைகள் பல கிடப்பில் உள்ளன பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக விடப்படுகிறது ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.

தேசிய,மாநில ஆணையங்கள் வெகு தொலைவில் இருப்பவை மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அருகே இருப்பவை.

புகார் தாக்கல் முறை – :

மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாக அல்லது வழக்கறிஞர் மூலம் தனி புகாராக (private Complaint) தயாரிக்க வேண்டும்.

இப்புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி குற்றவியல் விசாரணை முறை சட்டம், [CrPC] 1973, பிரிவு-200, தற்போதைய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா BNSS -2023, [BNSS] பிரிவு-223 -ன்படி குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள, பகுதிக்கு உட்பட்ட ஆள்வரையுள்ள (Jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) [JM] நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

புகாரை பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 202-ன்படி BNSS, பிரிவு 225-ன்படி விசாரணை செய்து புகாரில் அடிப்படை உள்ளது என முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகார் நகலை வழங்கி கேள்வி கேட்டு பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

மாயத்தோற்றமா?

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் தமிழகத்தில் கடந்த 1996-ல் அமைக்கப்பட்டது கடந்த 1996 முதல் 2010 வரை தமிழகத்தில் இருந்து தேசிய மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் மொத்த எண்ணிக்கை -130233 இதே பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -21349 இதே பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை – 108717

இதே பத்து ஆண்டுகளில் தமிழக மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167

பரிந்துரை அதிகாரம் மட்டுமே
கொண்ட ஆணையங்களை நாடிய மக்கள் -99.9% தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை நாடிய மக்கள் – 0.1%. இதற்கு காரணம் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வின்மை நடைமுறை பிரச்சினைகள்.

தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் சிறப்பு புலனாய்வு குழுக்கள் உள்ளன. இதைப்போல பிரிவு 37 -ன்படி உள்ளபடி மாவட்ட அளவில் மனித உரிமைக்கான சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இதைப்போல பிரிவு 31-ன்படி உள்ளபடி அரசு குற்றஞ்சாட்டுனர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும். மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கான தக்க விதிமுறைகளும் வழி காட்டுதல்களும உடனே வகுக்கப்பட வேண்டும். பொது மக்களிடையே மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்..

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

THE BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA, (BNSS) Amendment of Cr.P.C. 2023THE BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA, (BNSS) Amendment of Cr.P.C. 2023

Views: 13 THE BHARATIYA NAGARIK SURAKSHA SANHITA, 2023——————ARRANGEMENT OF CLAUSES——————CHAPTER IPRELIMINARYCLAUSES (a) in case of intentional omissionor sufferance;(b) in case of negligent omission orsufferance.Imprisonment for 3 years,or fine, or both.Non-cognizable

ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்திற்கும் பழைய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளின் வித்தியாசம்ஜூலை முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்திற்கும் பழைய சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளின் வித்தியாசம்

Views: 15 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.