நுகர்வோர் யார் என்பதன் விளக்கம்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் என்பதன் விளக்கம், “காசு கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ, தன் சொந்த உபயோகத்திற்காக பெறும் ஒருவர் நுகர்வோராவார். அவர் அப்பொருளுக்கான விலையை முழுமையாகவோ, பகுதியாகவோ செலுத்தி இருக்கலாம், அல்லது விலையை முழுமையாகவோ, பகுதியாகவோ பின்னர் தருவதாக வாக்களித்திருக்கலாம்.
குறிப்பு:
வாங்கிய பொருளை வணிக நோக்கத்துடன் பெறும் நபர், நுகர்வோராக இருக்க முடியாது. இருப்பினும், தனது சுய வேலைவாய்ப்பிற்காக அல்லது தனது வாழ்வின் ஆதாரத்திற்காக வாங்கியிருப்பின், அவர் நுகர்வோராகவே கருதப்படுவார்.
நுகர்வோர் கல்விக்காக, தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல், மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
மாநில அளவிலான “நுகர்வோர் தகவல் மையம்” செயல்பட்டு வருகிறது.
வானொலி , தொலைக்காட்சி வாயிலாக நுகர்வோர் கல்வி நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் மன்றங்களை நிறுவி, மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ச்சியாக கருத்தரங்குகள், கருத்துப்பட்டறைகள் நடத்துவதுடன், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகடன், நுகர்வோர் நலன் கருதி செயல்படும் தன்னார்வ ஆர்வலர்கள், சேவை தருபவர்களுடன், அவ்வப்போது கலந்துரையாடல்களும் நடத்தப்படுகின்றன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் கீழ், நுகர்வோர் நலன் கருதி, நுகர்வோர்களை காக்கும் எண்ணத்துடன், சட்ட தீர்வுகளை காணுவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது.
நேர்மையற்ற வணிக முறையினை தடுப்பதற்கும், எச்சரிப்பதற்கும், பொருட்கள் மற்றும் சேவைகள் தர பரிசோதனை செய்து, தீர்வு காண்பதற்கான முழு முயற்சிகளை எடுக்கிறது.
அனைத்து நுகர்வோர்கள் நிலைத்த தன்மையுடைய நுகர்வு குறித்து அறியச் செய்தல் .
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களின் பணிகள் என்ன?
நுகர்வோர் மன்றங்கள், சீரிய செயல்பாடுகளுடன், புதிய யுத்திகளை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மன்றங்களின் செயல்கள் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் முதல் வியாழன் அன்று, மாதாந்திர கூட்டங்களை நுகர்வோர் மன்றங்கள், பள்ளி முடிவுற்றபின் ஒரு மணி நேரத்திற்கு நடத்திட வேண்டும். பிரதி மாதமும் மாதிரி அட்டவணையில் திட்டமிட்டுள்ளபடி, ஏதேனும் ஒரு தலைப்பினை எடுத்து மன்றம் நடத்தப்பட வேண்டும்.
தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, நுகர்வோர் தொடர்புடைய தினங்கள் பள்ளி / கல்லூரிகளில் கொண்டாடப்பட வேண்டும். அத்தினங்களில் பள்ளி அளவிலான சுவரொட்டி வரைதல் / பேச்சுப்போட்டி / கட்டுரைப்போட்டி ஆகியவை நுகர்வோர் மன்றங்களால் நடத்தப்பட வேண்டும்.
வருடத்தில் குறைந்தது நான்கு நாட்களில், மன்ற உறுப்பினர்கள் சந்தைகளுக்கும் நுகர்வோர் நீதிமன்றங்கக்கும் நேரடியாக சென்று பார்வையிடுவதோடு, வசிப்பிடங்களில் சென்று செயல்முறை விளக்கக் கூட்டத்தினையும் ஏற்பாடு செய்யலாம். இவையாவும், முன்னதாகவே திட்டமிடப்பட்டு சனிக்கிழமைகளில் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கூட்ட மற்றும் பயிற்சி நடவடிக்கையும், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளரால், மன்ற தீர்மான பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
நுகர்வோர் தொடர்பான செய்திகளை, நுகர்வோர் மன்றத்தின் செய்திப்பலகையில், நுகர்வோர் மன்ற மாணவர்களும், ஆசிரியர்களும் தினந்தோறும் பிரசுரிக்க வேண்டும்.
நுகர்வோர் குறைபாடுகள் களைய எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
நுகர்வோர் ஒரு பொருளிலோ , சேவையிலோ குறைபாடு காண்பாராயின், அவர் சம்மந்தப்பட்ட அரசு அல்லது வணிக நிறுவனத்தினை அணுகி, அக்குறையினை நிவர்த்தி செய்து தரவோ, பொருளினை மாற்றித் தரவோ, அல்லது செலுத்திய தொகையினை மாற்றித் தரவோ, எழுத்து மூலமாக கோரலாம். அவ்வாறு மனு செய்கின்ற போது, சம்மந்தப்பட்ட நிறுவனம் / அரசிடமிருந்து ஒப்புகை பெற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நிறுவனம் குறையினை தீர்க்காத போது, அவற்றை தீர்த்து வைக்க சட்டப்படியான நடவடிக்கையினை தொடரலாம்.
புகாரினை யார் பதிவு செய்யலாம்?
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ல் நுகர்வோர் என வரையறுக்கப்பட்டுள்ள எவரும் புகார் செய்யலாம்.
பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு புகாரினை பதிவு செய்யலாம்.
மத்திய அரசிடம் புகாரினை பதிவு செய்யலாம்.
மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யலாம்.
ஒரே நோக்கத்துடன் உள்ள நுகர்வோர்களின் சார்பாக, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் புகாரினை பதிவு செய்யலாம்.
எப்பொழுது புகார் செய்யலாம்?
கீழ்காணும் சூழ்நிலைகளில் புகாரினை எழுத்து வடிவில் கொடுக்கலாம்.
நேர்மையற்ற வணிக முறையின் அடிப்படையில் நுகர்வோருக்கு இழப்பு ஏற்பட்டிருப்பின், நுகர்வோர் வாங்கிய பொருள் குறைபாடுடையதாக இருப்பின், அல்லது நுகர்வோர் பயன்படுத்திய சேவை குறைபாடுடையதாக இருப்பின், நுகர்வோர் பொருளுக்கு செலுத்திய விலை, பொருளின் மேலுறையில் குறிப்பிட்ட விலையை விட, அல்லது சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பின், சட்டத்திற்கு புறம்பாக நுகர்வோரின் வாழ்க்கைக்கு உத்திரவாதமற்ற, அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள் விற்கப்படுமாயின்.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு என்றால் என்ன?
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு என்பது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-ன் கீழ் வரும் விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை, உறுப்பினர் / செயலராகவும், மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள், மற்றும் நுகர்வோர் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர்களையும் உறுப்பினர்களாக கொண்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, உடனடி தீர்வு காணப்படவேண்டும். (அரசு ஆணை எண்.616, கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள்: (5.11.93).
எங்கே புகாரை பதிவு செய்யலாம்?
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான இக்குழுவிடம், குறை பற்றி மனு அளித்தால், உடன் சம்பந்தபட்ட துறை மூலம் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நுகர்வோர் குறைதீர் அமைப்புகள் பொருளின் விலை, அல்லது சேவையின் மதிப்பு, மற்றும் கோரப்படும் இழப்பீட்டின் மதிப்பு, மாவட்ட மன்றம் ரூ.20 லட்சம் வரையிலும், மாநில ஆணையம் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகவும், ரூ.1 கோடி வரையிலும், தேசிய ஆணையம் ரூ. 1 கோடிக்கு கூடுதலாக இருந்தால்.
புகாரை எப்படி பதிவு செய்யலாம் ?
புகாருக்கான காரணம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும்.
புகாரை பதிவு செய்ய கட்டணம் ஏதுமில்லை.
உறுதி மொழி அளிக்க முத்திரைத்தாள் தேவையில்லை.
புகாரை அஞ்சலிலோ அல்லது புகார்தாரரால் நேரிலோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமோ பதிவு செய்யலாம்.
வழக்கறிஞர் தேவையில்லை.
என்னென்ன தகவல்கள் புகாரில் இருக்க வேண்டும் ?
ஒரு புகார் கீழ்க்காணும் தகவல்களை உடையதாக இருக்க வேண்டும்
புகார் செய்பவரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி.
எதிர்மனுதாரர் அல்லது மனுதாரர்களின் பெயர் மற்றும் முழுமையான முகவரி.
பொருள் வாங்கிய / சேவையைப் பெற்ற தேதி.
அதற்காக செலுத்தப்பட்ட தொகை வாங்கப்பட்ட பொருளின் விபரம் எண்ணிக்கையுடன் / சேவையின் விபரம்.
புகார் நியாயமற்ற வர்த்தக நடைமுறை / குறையுள்ள பொருள் / சேவையில் குறைபாடு / கூடுதல் கட்டணம் வசூலித்தது – இவற்றில் எதை பற்றியோ அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பட்டியல் / ரசீது நகல்கள் மற்றும் இது தொடர்பான கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள்.
இந்த சட்டத்தின் கீழ் எதிர் நோக்கும் நிவாரணம்.
பெறக்கூடிய நிவாரணங்கள் :
நுகர்வோர் மன்றம் / ஆணையம் கீழ்காணும் நிவாரணங்களுக்கு ஆணையிட முடியும். பொருளில் உள்ள குறைபாட்டை நீக்கிட. மாற்றுப் பொருளைத் தர. பொருளுக்கு செலுத்திய விலையை திருப்பிதர, ஏற்பட்ட நட்டம் / சேதங்களுக்கு நட்ட ஈடு தர, சேவையில் காணப்பட்ட குற்றம் அல்லது குறைபாட்டை நீக்கிட, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை நிறுத்தவோ, அதை மீண்டும் தொடர்வதைத் தடுக்கவோ, தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருளை விற்பனையிலிருந்து திரும்பப் பெறுவதற்கு ஆணையிட, மனுதாரர்களுக்கு ஏற்படும் வழக்கு செலவுகளை தரச் சொல்லிட,
மேல் முறையீட்டு மனுக்களை யாருக்கு எப்படி பதிவு செய்வது ?
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும்,
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும்,
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் உச்ச நீதி மன்றத்திலும் முறையிடலாம்.
மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் மேல் முறையீடு செய்ய கட்டணம் இல்லை.
என்ன காரணத்திற்காக மேல் முறையீடு செய்யப்படுகிறது, என்ற விபரத்துடனும், கீழ் அமைப்பின் உத்திரவின் நகல்களுடன் புகாரை பதிவு செய்யும் முறையிலேயே, மேல் முறையீட்டு மனுவையும் பதிவு செய்ய வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?
ஒரு நுகர்வோருக்கு கீழ்க்காணும் உரிமைகள் உள்ளது.
- பாதுகாப்பு உரிமை.
- தகவல் பெறும் உரிமை.
- விருப்பத்தினை தேர்வு செய்யும் உரிமை.
- குறைதீர்க்க கேட்கப்படும் உரிமை.
- நுகர்வோர் கல்வி பெறும் உரிமை.
- குறை நிவர்த்தி பெறும் உரிமை.
ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலின் படி. ஏற்படுத்தப்பட்ட மாறுதலில் பின்வரும் உரிமைகள் இணைக்கப்பட்டுள்ளன.
- சுகாதாரமான சுற்றுச்சூழல் உரிமை.
- அடிப்படைத் தேவை உரிமை.
நுகர்வோர் பாதுகாப்பு பற்றி கூடுதல் விவரம் எங்கு பெறலாம்?
- மத்திய அரசு இணையதளம் www.fcamin.nic.in அல்லது www.core.nic.in மூலம் பல முக்கிய தகவல்கள் / நுகர்வோர் செய்திகளை தெரிந்து கொள்ளலாம். மற்றும் எண் 1800114000 தொடர்பு கொள்ளலாம்.
- உங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொள்வதோடு, உங்கள் பகுதியில் நேர்மையாக செயல்படும் நுகர்வோர் அமைப்புகளையும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி
வ.எண். நுகர்வோர் குறைதீர் மன்றம் / ஆணையம் தொலைபேசி எண்.
1 தலைவர்,மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
எண். 212, இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004 044-24940687 044- 24618900
2 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் சென்னை (தெற்கு) ,
212, இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர்,
சென்னை – 4 044 – 24938697
3 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் சென்னை (வடக்கு),
212, இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 4 தொலைபேசி: 044 – 24952458
4 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சப் கலெக்டர் ஆபீஸ் வளாகம்,
ஜீ எஸ் டி சாலை, மேலமையூர் கிராமம்,
செங்கல்பட்டு நகரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 044 – 27428832
5 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
எண்.பு டி.சி.வி.நாயுடு சாலைமுதல் குறுக்கு சாலை,
திருவள்ளுர் – 602 001 04116 – 27664823
6 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மாவட்ட நீதி மன்ற வளாகம் சத்துவாச்சேரி,
வேலூர் – 632 009 0416 – 2254780
7 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
58/டி, அண்ணா சாலை,
ஆதிதிராவிடர் நல அலுவலகம், கீழ்தளம்,
திருவண்ணாமலை – 606 601
8 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
கதவிலக்கம் 58,
சென்னை ட்ரங்க் சாலை,
விழுப்புரம் –
9 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
102, புதுபாளையம் பிரதான சாலை
கடலூர் – 2 04142 – 295926
10 தர்மபுரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
கிருஷ்ணகிரியுடன் இணைந்து செயல்படுகிறது
11 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
வட்டாட்சியர் அலுவலக வளாகம்,
சேலம் – 636 002 0427 – 2213279
12 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
3-152-டி, ஜீவா காம்ப்ளக்ஸ்,
திருச்சி பிரதான சாலை,
நாமக்கல் – 637 001 04286 – 224716
13 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
ஈரோடு வணிக வளாகம்,
சுரம்பட்டி நாலு ரோடு,
ஈரோடு – 638 009 0424- 2250022
14 மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கோயமுத்தூர் -641 018 0422- 2300152
15 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
என்.ஜி . எம்.எஸ் வளாகம்,
உதகமண்டலம்- 643 001 04232 -2451500
16 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
நகராட்சி கட்டடம், அசாத் சாலை,
கரூர் – 630 002 04324 – 260193
17 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
லட்சுமி இல்லம்,
345, ரோவர் நகர், முதல் தளம்,
எல்லம்பவூர் சாலை,
பெரம்பலூர் – 621 212 04328 – 276700
18 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
தூய மேரி வளாகம்,
முதல்தளம்,
பாரதிதாசன் சாலை திருச்சி – 620 001 0431 – 2461481
19 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
இளங்கோ வணிகவளாகம் நீதிமன்றம் சாலை,
நீதி நகர் தஞ்சாவூர் – 613 002 04362 – 272507
20 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
52.குமரன் கோயில் சாலை,
திருவாரூர்- 610 001 04366 – 224353
21 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
543, பொது அலுவலக சாலை
வெள்ளிபாளையம்,
நாகப்பட்டினம் 04365 – 247668
22 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மாவட்ட நீதி மன்ற வளாகம்
புதுக்கோட்டை –
23 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
கதவிலக்கம் 95 மற்றும் 96 ஓய்வுதியதாரர்கள் தெரு
ஆரிய பவன் அருகில்
திண்டுக்கல் 0451- 2433055
24 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
முதல் மாடி, நீதிமன்ற வளாகம்,
லட்சுமிபுரம்,
பெரியகுளம் ரோடு, தேனி – 625 523 04546 – 269801
25 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மாவட்ட நீதி மன்ற வளாகம்,
மதுரை 0452 – 2533304
26 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
10/25, திருப்பத்தூர் ரோடு ,
சிவகங்கை – 630 561 04575 – 241591
27 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
நாடக சாலை தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம 626 125 04563 – 260380
28 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மாவட்ட நீதி மன்ற வளாகம்
இராமநாதபுரம் –
29 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
2/263, 10வது தெரு,”வள்ளி இல்லம்”,
ஙி&ஞி காலனி, தூத்துக்குடி – 628 008.
30 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
கதவிலக்கம் 4/993, சுவது தெருசாந்தி நகர்,
பெல் அம்புரோஸ் காலனி பாளையம்கோட்டை,
திருநெல்வேலி 0462 – 2572134.
31 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
ப.எண்.36/1, பு.எண்.55, முதல் தளம்
பிரசிடென்ட் சிவதானு சாலை, எஸ்.எல்.பி.மேல் நிலைப்பள்ளி தெற்கு
நாகர் கோயில்,
கன்னியாகுமரி மாவட்டம் 629 001 04652 – 229683
32 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
எண் 46, எம்.வி.கே மான்சன் வெஸ்ட் லிங் காலனி
கிருட்டிணகிரி – 635 001
(தருமபுரி மாவட்ட வழக்குகளும் இங்கே கண்காணிக்கப்படுகின்றன)
