GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி !

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி !

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

Consumer Court case apply

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது எப்படி !


முதலில் யார் மீது வழக்கு தொடரப்போகிறீர்களோ அவருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பவேண்டும். (இது பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்). நோட்டீஸை பதிவுத்தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அதன் பின் அவர் எவ்வித பதிலும் தராவிட்டால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறைப்படி புகார் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இனி புகார் மனுவை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். கீழே மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை வடக்கு
( உங்கள் பகுதி மாவட்ட மன்றத்தின் ஊரை குறிப்பிட வேண்டும்)

Complaint No…………..of 2015

உங்கள் பெயர்


( முழுமையான முகவரி) மனுதாரர்
Vs.

( 1 ). பெயர்,
———————————–
——————————-
( முழுமையான முகவரி)
(2). பெயர்.
—————————————–
———————————- எதிர் மனுதாரர்
( முழுமையான முகவரி)

(ஏதிர் மனுதார்கள் அனைவரையும் 1,2 என வரிசை கிரமத்தில் குறிப்பிடவேண்டும்)

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன் கீழ் சமர்ப்பிக்கப்படும் மனு

  1. அறிமுகம். (Introduction) உங்களை பற்றியும், எதிர்மனுதாரர்/மனுதாரர்களை பற்றி குறிப்பிடவேண்டும்,
  2. பரிவர்த்தனை(Transaction) உங்களுக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே நடைபெற்ற சேவை அல்லது விற்பனை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை குறிப்பிட வேண்டும்.
  3. குறைபாடு (Deficiency) விற்பனை அல்லது சேவையில் இருந்த குறைபாடுகளை தெளிவாக விளக்க வேண்டும்,
  4. சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகள்(Rectification) உங்கள் புகார் தொடர்பாக எதிர்மனுதாரரை நேரடியாக தொடர்பு கொண்டது, கடிதம் அனுப்பியது , லீகல் நோட்டீஸ் அனுப்பிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
  5. இதர சட்ட பிரிவுகள் (Other provisions) உங்களது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு. வேறு சட்டங்களின் படி குற்றமாக இருக்குமானால் அது பற்றிய விபரம்.
  6. ஆதாரங்கள்(Evidence) உங்கள் குற்றச்சாட்டை நிருபிக்க கூடிய ஆதாரங்களாகிய பில்,ரசீது, வாரண்டி, கேரண்டி கார்டு, கடிதம் போன்ற ரிக்கார்டுகள் மற்றும் சாட்சிகள் விபரம் இவற்றைகுறிப்பிடவேண்டும் . அவற்றின் நகல்களில் / உண்மை நகல் / என நீங்கள் ஒவ்வொன்றிலும் கையொப்பமிட்டு இணைப்பு ஆவணமாக சேர்க்க வேண்டும்.
  7. அதிகார எல்லை (Jurisdiction) நீங்கள் வசிக்கும் பகுதி வழக்கு தொடரப்போகும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். அதைப்போல நீங்கள் கேட்கும் நஷ்ட ஈடு ரூபாய் 20 லட்சத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். இதை இப்பகுதியில் குறிப்பிட வேண்டும்.
  8. காலக்கெடு ( Limitation) உங்கள் புகார் சம்பந்தமான பரிவர்த்தனை நடந்து இரண்டு ஆண்டு காலக்கெடுவிற்குள் உங்கள் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.
  9. கேட்கப்படும் நிவாரணம் (Relief claimed) இப்பகுதியில் குறைபாடான சேவையை சரி செய்தல், குறைபாடு உள்ள பொருளை மாற்றி கொடுத்தல், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கான நஷ்ட ஈடு, அதை கணக்கிட்ட முறை, போன்ற தாங்கள் விரும்பும் நிவாரணத்தை குறிப்பிட வேண்டும்.
  10. வேண்டுதல் (Prayer) ” மதிப்பிற்குறிய இந்த நுகர்வோர் குறைதீர் மன்றம் கீழ்கண்ட நான் கோரும் நிவாரணங்களை வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்” என உங்கள் வேண்டுதல்களை தெளிவாக எழுத வேண்டும்.

இடம்; ———————–
நாள்: ( கையொப்பம்)
மனுதாரர்
(Party in Person)

Verification
(உங்கள் பெயர்) என்ற மனுதாரராகிய நான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எனது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் உண்மையானது என்றும், எந்த ஒரு உண்மையும் மறைக்கப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
இடம் ———————–
நாள்: மனுதாரர்

————————————-

நுகர்வோர் நீதிமன்றங்கள் கீழ்கண்ட நிவாரணங்களை வழங்கி உத்தரவிடலாம்.

(1) விற்கப்பட்ட பொருளில் உள்ள குறைகளை அகற்றுதல்

(2) மாற்றுப் பொருள் தருதல்

(3) பொருளின் விலையை வட்டியுடன் திருப்பித் தருதல்

(4) ஏற்பட்ட கஷ்டத்துக்கும் நஷ்ட்டத்துக்கும் ஈடு செய்தல்

(5) சேவையில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுதல்

(6) முறைகெட்ட/தடை செய்யும் வர்த்தக செயல்களைத் தடுத்தல் மற்றும் மேலும் தொடராதிருக்க உத்தரவிட

(7) ஆபத்தான பொருட்களின் விற்பனையை நிறுத்துதல்

(8) போதுமான செலவுத் தொகை வழங்கி உத்தரவிடல்.

மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறைகள்

(1) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தீர்ப்பை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

(2) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.

(3) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

புகாரை பதிவு செய்யும் முறை

முதல் கட்டம்:- எதிர் தரப்புக்கு நோட்டிஸ் அனுப்பவேண்டும்.

2ஆம் கட்டம்:- புகாரை அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.

3-ஆம் கட்டம்:- பிரமாண வாக்கு மூலம் அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து அனுப்பிய நோட்டிஸ், பில், ரசீது நகல்களோடு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

4-ஆம் கட்டம்:- தீர்ப்பு வழங்கப்பட்ட பின் எதிர்தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறினால், அதற்குண்டான விண்ணப்பத்தை தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

5-ஆம் கட்டம்:- தீர்ப்பு உங்களுக்கு நிறைவளிக்காவிட்டால், நியாயம் மறுக்கப்பட்டதென்று கருதினால் அதற்குண்டான படிவத்தின்படி மேல்முறையீடு செய்யலாம்.

புகாரில் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள்

(1) புகார் செய்பவரின் பெயரும், முழுவிலாசமும்,

(2) எதிர் தரப்பினர் பெயரும், முழு விலாசமும்,

(3) பொருளை வாங்கிய அல்லது சேவையைப் பெற்ற தேதி, அதற்காக கொடுக்கப்பட்ட தொகை/விலை,

(4) வாங்கிய பொருளின் பெயர், செயல் அல்லது பயன், அளவு போன்ற விவரங்கள்,

(5) முறையில்லா வர்த்தகர் செயலைப் பற்றியோ, குறையுள்ள பொருளைப் பற்றியோ, சேவையில் குறைபாடு பற்றியோ அல்லது அதிக விலை வசூலிக்கப்பட்டது குறித்தோ அல்லது வேறு எதற்காக என்ற விவரம்,

(6) பில்கள், ரசீதுகள், வவுச்சர்கள், கடிதங்கள் போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுளளதா என்ற விவரம்,

(7) செயல்படுத்தும் விண்ணப்பங்களில் (Executive Petition Documents) எதிர் தரப்பின் பெயர்கள் கொடுக்கப்படவேண்டும்.

எதிர்த்தரப்புக்கு அனுப்பப்பட வேண்டிய நோட்டிஸின் மாதிரி படிவம்:-

(இது நுகர்வோர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயலாகும். இந்த நோட்டிஸ் எதிர்தரப்புக்கு உங்களால் பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்)

அனுப்புனர்:- உங்கள் பெயரும், முகவரியும் தேதி……..

பெறுனர்:- எதிர்தரப்பினரின் பெயரும் முகவரியும்.

ஐயா,

பார்வை:……………… பெற்றதற்கு உங்கள்……………….. தேதியிட்ட பில் எண்………………

(1) எனக்கு ……………..பொருள்/சேவை அளித்தீர்கள், அதில் உள்ள குறைபாடுகளை இதன் கீழ் கொடுக்கிறேன் (விவரமாக எழுதவும்)

(2) ஏற்கனவே நீங்கள் ஏதேனும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தால் அதை நினைவுப்படுத்தவும்.

(3) (அவர்கள் 15 நாட்களுக்குள்) குறையைச் சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய பொருள் கொடுக்கவேண்டும், அல்லது அதன் விலையைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய உள்ளேன் என்பதையும் தெரிவிக்கவும்.

இப்படிக்கு

உங்கள் கையொப்பம

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 25 1. “மேய்க்கால் புறம்போக்கு” என்றால் என்ன? தமிழில் “மேய்க்கால்” என்றால் மாடுகள் மேய்ச்சலுக்கான இடம். “புறம்போக்கு” என்றால் பொதுப் பயன்பாட்டுக்கான நிலம்,

அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு!(DEFAMATION)அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு!(DEFAMATION)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 அவதூறு அல்லது மானநஷ்ட வழக்கு. DEFAMATION SUIT. நம் நாட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய, உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தின்

உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 176 உறுப்பினரின் ஆட்சேபனைக்குரிய பதிவுக்குவாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாதுஐகோர்ட்டு உத்தரவு.. குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள்,

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)