*விவாகரத்து பெற்ற மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு யாருடைய இன்ஷியல் – வழக்கும் தீர்வும்*
Husband name change birth certificate la diverse after . Case apply hc. Wife. Municipal all right it. Hc info.
கணவர்,மனைவிக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மனைவி, ஒரு ஸ்பெர்ம் டோனர் மூலம், குழந்தை பெற்று கொண்டார். மனைவிக்கு உதவியாக மருத்துவமனையில் ஒருவர் இருந்தார்.அவரை,தந்தை என்று பிறப்பு சான்றிதழில் போட்டிருந்தது.
மனைவி, ஆர்.டி.ஓ. வசம் மனு தாக்கல் செய்து, பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்ற கேட்டார். அவர் நிராகரித்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
பிறப்பு இறப்பு சட்டத்தின் கீழ், சான்றிதழ் வழங்கிய அந்தந்த கார்ப்பரேஷன் கமிஷனர்,நகராட்சி என்றால் ஆணையாளர் ஆகியோருக்கு, பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்ய அதிகாரம் உண்டு.இந்த வழக்கில்,அந்த பெண் வசம் ஒரு அபிடவிட் வாங்கி கொண்டு, திருத்தி தரலாம் என்று கூறி உள்ளது.கணவர் மற்றும் உதவி செய்த நபர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, குழந்தை தங்களுக்கு பிறக்கவில்லை என்று அபிடவிட் தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்றம் முன் தீர்ப்பும் இருந்தது. கணவரை பிரிந்து வாழும் மனைவி வசம் இருக்கும் குழந்தைக்கு, தாயின் initial போட்டு கொள்ளலாம் என்று ஜெயலலிதா காலத்தில் 2003 ல் அரசாணையும் உள்ளது என்று கூறி, பிறப்பு சான்றிதழில்,தந்தை பெயரை நீக்க சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை,அதிகாரிகள் வழக்கு முடிவதற்கு செய்து முடித்தனர்.
தீர்ப்பை pdf வடிவில் இலவச பதிவிறக்கம் செய்ய லிங்க்
[http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/159654](http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/159654)
*விவிலியராஜா* வழக்கறிஞர்
*9442243433*