GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்தால் அதை செய்ய எப்படி மனு செய்வது ?

காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்தால் அதை செய்ய எப்படி மனு செய்வது ?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல் துறை பொய் வழக்கை ரத்து செய்ய மாதிரி மனு.

திருமிகு காவல் துணைக் கண்காணிப்பாளர்.

போடிநாயக்கனூர் உட்கோட்டம்.

போடிநாயக்கனூர்

தேனி மாவட்டம்

அவர்கள் முன்னிலையில்

S.ராஜசேகரன்

தேனி மாவட்டம் – 625513
மனுதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர்
(BODI TOWN STATION CRIME NO.256 OF 2023)

எதிர்
Xxxx
6வது வார்டு
துரைராஜபுரம் காலனி
தேனிமாவட்டம் –
குற்றபுகார்தாரர்

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 கோட்பாடு 19,21,22(4) மற்றும் குற்றவிசாரணைநடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 169,437 மற்றும் காவல்நிலைய ஆணை எண் (PSO) – 655,659 இன் படி போடிநாயக்கனூர் நகர் கவல் நிலைய (குற்ற எண்: 256/2023) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரும் மனு..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், 42பிள்ளையார்கோயில் தெரு, குப்பிநாயக்கன்பட்டியில் வசிக்கும் ராஜசேகரன் வயது 48, த/பெ V சிவணான்டி இந்து ஆகிய நான், இந்திய சாட்சியச்சட்டம் 1872 ன் பிரிவு 70 ன் கீழ் ஏற்புரை செய்து, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ன் பிரிவு 57(1) ன் படி நாட்டில் அமலிலுள்ள சட்டங்களை நீதிமுறையில் கவனத்தில் கொண்டு, எந்த வழக்கிற்கும் பாதகமின்றி இம்மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

1 நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 கோட்பாடு 51அ(ஓ) -ன் கடமையாக, கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகள், ஊழலுக்கு எதிராக அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக, மற்றும் பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறேன்.

2 இந்திய அரசமைப்பு 1950 ன் கோட்பாடுகள் 29(1), 350 மற்றும் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956 பிரிவு -4ன் படி இம்மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

3 ஒரு குற்றம் நடக்கவிருக்கிறது என்பதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பும், அதற்கான சட்டப்படியான வழிகளை கையாள வேண்டிய கடமையும், அதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் சட்டப்படி செயல்படாமல் இருப்பது, இந்திய தண்டனைச்சட்டம் 1860-ன் பிரிவு -2ன் கீழ் குற்றமாகும் அதன் அடிப்படையில் இம்மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

    4 இந்திய அரசமைப்பு 1950ன் கோட்பாடு 375-ன் படி “இந்திய அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு, உரிமையியல், குற்றவியல், மற்றும் வருவாய்த்துறை, ஆகியவற்றிற்கான அதிகாரவரம்புள்ள நீதிமன்றங்களும், நீதித்துறை, செயல்துறை, நிர்வாகத்துறை அலுவலர்களும், அவர்களுடைய அலுவல்களைத் தொடர்ந்து நடத்தி வரவேண்டும்” என்பதை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    5 உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் நீதிபதிகள் இடமாற்ற வழக்கின், ஏழு நீதிபதிகள் குழுவின் தீர்ப்பு, வறுமை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் நீதிமன்றத்தை அணுக முடியாதவரது குறையை களையக்கோரி, நேரடியான பாதிப்புக்கு ஆளாகாதவர் நீதிமன்றத்தை அணுகமுடியுமா? என்ற விவாதத்தை தீர்த்துவைத்தது. இத்தகையோரது அடிப்படை சட்டப்பூர்வமான அல்லது அரசிலமைப்பு சட்ட உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, போதுமான ஈடுபாடு கொண்ட எந்த ஒரு பொதுமனிதனும், ஒரு அஞ்சல் அட்டையின் மூலமாகக் கூட நீதிமன்றத்தை நாடலாம் (எஸ்.பி.குப்தா மற்றும் ஏனையோர் எதிர் குடியரசுத்தலைவர் மற்றும் ஏனையோர்,AIR 1982SC149) என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

    6 மேற்படி முதல் தகவல் அறிக்கையில் என் மீது பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட பதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
    *1. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலைய குற்றஎண்- 256/2023 தெரிவிக்கப்பட்டது, காந்தி அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல், மற்றும் ஜாதி பற்றி குறிப்பிட்ட குற்றம் நடந்தது 23/05/2023 மாலை 6:00. இடம் பங்கஜம் மேல்நிலைப் பள்ளி முன். நான் அழைத்தது சம்பந்தமாக செல்பேசி சாட்சி இல்லை. குற்றம் நடந்த நேர சிசிடிவி பதிவும் இல்லை. அதேசமயம் மேற்படி நேரத்தில் என்னுடைய வீட்டில் இருந்தேன் என்னிடம் ஆதாரம் உள்ளது.

      *2. சிவில் வழக்கு O.S.NO.124/2021 என்பது தவறு. (கோர்ட் ஸ்டேட்ஸ் ஆதாரம் உள்ளது) காந்தி வீட்டு வழக்கு முடிந்துவிட்டது என்பதும் தவறு, (கோர்ட் ஸ்டேட்ஸ் ஆதாரம் உள்ளது).

      *3. 8/08/2020 இல் ப்ரியா ஸ்டுடியோ ஜ கா நி மே பள்ளிவளாகத்தில் இல்லை ஆனால் பள்ளி வளாக கடையில் வைத்து பணம் கொடுத்ததாக தவறான தகவல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      *4. 23/05/2023 தேதி போடி டிஎஸ்பி ஆபிஸிலிருந்து 9498182209 என்ற நம்பரில் காவலர் செந்தில்குமார் என்பவர் காந்தி புகார் சம்பந்தமாக அலைபேசி அழைத்து பேசியது. சென்னை ரயிலில் பயணம் பேசமுடியவில்லை என மறுநாள் 24/05/23 நான் புகார் சம்பந்தமாக பேசும்போது நகர் காவல்நிலையத்தில் விசாரணை என தெரிவித்தது (செல்லிடபேசி பதிவு ஆதாரம் உள்ளது)

      5.31/05/2023 மாலை 7:27 மணிக்கு போடி நகர் காவல்நிலையத்திலிருந்து வந்த அழைப்பு பின் நான் தொடர்பு கொண்டபோது புகார் பற்றி காவலர் தெரிவிக்கவில்லை.. (செல்லிடபேசி பதிவு ஆதாரம் உள்ளது)

      6.31/05/2023 மாலை 7:48 மணிக்கு எனது வீட்டிற்கு சென்ற காவலர் இன்ஸ்பெக்டர் அம்மா அழைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. (செல்லிட பேசி பதிவுஆதாரம் உள்ளது)

      31/05/2023 மாலை 8:53 க்கு போடி நகர் காவல் ஆய்வாளர் அவர்களிடம் 9445877935 பேசும்போது மறுநாள் காலை வரச்சொன்னார். மறுநாள் காலை நேரடியாக ஆய்வாளரை சந்தித்து கேட்டபோது “புகார் கொடுத்தவங்க வர்ல வந்தால் கூப்பிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

      7.ஏற்கனவே பணம் பறிக்கும் நோக்கத்துடன் காந்தி மற்றும் அய்யர்சாமி இருவரும் பொய் புகார் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் 23/05/23 காணொளி (போடி நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்) மற்றும் செய்தி பரப்பப்பட்டது

      8.ஆனால் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நடந்தது 23/05/2023 புகார்தாரர் காலதாமதமாக 28/06/2023 புகார் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது… உண்மையில் பொய் புகார் கொடுத்தது 23/05/2023 அப்படி இருக்க 25/05/23 நடந்ததாக இரண்டாம் புகார் மூலம் 28/06/2023 முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது பொய் என்று உறுதியாகிறது.

      9.
      GROUNDS
      i.The case register by the SIOFPOLICE is unjust, illegal and arbitrary.
      ii.The case register by the SI OF PLOCE is against the principles of Natural justice and fundamental rights.
      iii.The SI OF POLICE registering the case against the petitioner is against the principles laid down in Chapter XII of the Code of Criminal Procedure – 1973.
      iv.The SI OF POLICE without applying the mind and deep route of investigation the case was registered as against the petitioner.
      v.The SI OF POLICE failed to note that, none of the elements were made out in the complaint for investigating the same.

      vi..The entire case registered by the SI OF POLICE, is only on the ground of Face value and clear abuse of the provision of Law, the FIR stands quashed.
      vii.The respondent failed to conduct the preliminary investigation of the complaint of the SI OF POLICE respondent to register the case is against the findings of the Lalitha Kumari Vs Union of UP (2008) 7 SCC 164.
      Viii.The SI OF POLICE without made detailed investigation to register the case and not followed the procedure established by the code, the act of the respondent is in violation of the procedure established by the Criminal procedure code it a clear abuse of process of law.
      ix.The SI OF POLICE failed to note that, the principle laid down in Hon’ble this Court in Linga Bhaskar vs Inspector of Police, Thoothukudi South Police Station, 2018-2-L.W (Crl.) 309.
      In the FIR AND CHARGE SHEET contain without primia facie a materials filed by the respondent liable to quash based on the findings in Kamal shivaji Pokarnekar v. State of Maharahtra, (2019) 14 SCC 350, wherein it was held that: “Quashing the criminal proceedings is called for only in a case where the complaint does not disclose any offence, or is frivolous, vexatious, or oppressive. If the allegations set out in the complaint do not constitute the offence of which cognizance has been taken by the Magistrate, it is open to the High Court to quash the same. It is not necessary that a meticulous analysis of the case should be done before the Trial to find out whether the case would end in conviction or acquittal. If it appears on a reading of the complaint and consideration of the allegations there in, in the light of the statement made on oath that the ingredients of the offence.

      x. The SI OF POLICE failed to note that without cogent material to against the only in the circumstances that registration of case Karunamoorthi v. state, 2020 SCC OnLine Mad 6026 “itself is an abuse of process of law, inherent powers can be exercised to prevent abuse of process of law.
      xi.The SI OF POLICE failed to note that, the principle observed by the Hon’ble Supreme Court in State of Haryana and Ors. Vs. Bhajan Lal and Ors. MANU/SC/0012/1992,
      “(1) Where the allegations made in the First Information report or the complaint, even if they are taken at their face value and accepted in their entirety do not prima facie constitute any offence or make out a case against the accused.
      (2) Where the allegations in the first information report and other materials, if any, accompanying the FIR do not disclose a cognizable offence, justifying an investigation by police officers under Section 156(1)_ of the Code except under an order of a Magistrate within the purview of Section 155(2) of the Code.
      (3) Where the uncontroverted allegations made in the FIR or complaint and the evidence collected in support of the same do not disclose the commission of any offence and make out a case against the accused.
      (4) Where, the allegations in the FIR do not constitute a cognizable offence but constitute only a non-cognizable offence, no investigation is permitted by a police officer without an order of a Magistrate as contemplated under Section 155(2) of the Code.
      (5) Where the allegations made in the FIR or compliant are so absurd and inherently on the basis of which no prudent person can ever reach a just conclusion that there is sufficient ground for proceeding against the accused.
      xii.The 1st respondent were failed to note that, the MONEY dispute were existing between them, in the result of the MONEY AND CIVIL dispute the defacto complainant were lodged the complaint is liable to quash.

      குற்ற சம்பவம் மிக காலதாமதமாக கொடுத்திருந்தால், அந்தப் புகார் ஜோடனை செய்யப்பட்ட புகார் என்று கருதி சாட்சிகளின் சாட்சியங்களை ஏற்கக்கூடாது என உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளன. நமது உச்சநீதிமன்றமும்,

      Kishan Singh (D) through L.R.s . Appellants VS, Gurpal Singh & amp; Others . Respondents என்ற வழக்கில், “Prompt and early reporting of the occurrence by the informant with all its details gives an assurance regarding truth of its version. In case, there is some delay in filing the FIR, the complainant must give explanation for the same. Undoubtedly, delay in lodging the FIR does not make the complainant’s case improbable when such delay is properly explained.

      என்று கூறப்பட்டுள்ளது. இதேகருத்து AIR 1997 SC 3247 லும் வலியுறுத்தப்பட்டது Moolchand vs. State Madhya Pradesh என்ற வழக்கில்,

      “In the case independent witness Khemchand (P.W.1) has turned hostile. Shripat Pathak has not been examined. FIR is five days delayed, for which no acceptable reason has been given. Under these circumstances since the FIR is highly delayed, story of prosecutrix and her husband cannot be believed. Due to delay in FIR, a reasonable doubt is created in favour of the appellant/accused and when the entire story becomes doubtful then benefit of doubt is to be given to the 4 accused and he cannot be convicted for offence under Section 354 of IPC read with Sec. 3(1)(xi) (Prevention of Atrocities) Act, 1989. என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

      10.என் மீது புகார் அளிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த புகாரிலும் புகார் கொடுப்பதில் 33 நாட்கள் ஏற்கனவே காந்தி தரப்பினர்களுக்கு இடையே கொடுக்கல் வாங்கல் சிவில் பிரச்சினை, உள்ள நிலையில் காலதாமதம் அரசுதரப்பு வழக்கை பாதிக்கிறது. இத்தகைய சூழநிலையில் புகார் கொடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

      11.குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 41,41A-இன் படி ஏழு ஆண்டுகள் வரை தண்டணை விதிக்கதக்க குற்றங்களில் குற்றா சாட்டப்பட்டவர்களை கைது செய்தாகவேண்டும் என்று (Not Mondatory) கட்டாயம் இல்லை KM.HemaMishra VS State Of UP and Others 2014(Cri)L.J.1107(SC) என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் திருமிகு.காவல்துணைக்கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

      12.எதிரிக்கு காயம் ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் எதிரிக்கு காயம் எதனையும் ஏற்படுத்தவில்லை. இந்த குற்ற சாட்டில் நீதித்துறை நடுவர் (Megistrate) எதிரியை பிணையில் (ஜாமினில்) விடுவிக்கலாம் 2005 CrLJ Page 378 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் அத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கிலும் யாரும் காயம் அடையவில்லை என்றும் பொய் குற்றசாட்டில் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவே இந்த மனு மீது பரிசீலிக்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      13.குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் பிணையாளர்கள் (Sureties) இல்லாமலே பிணையில் விடுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. 1978 SCC (Cri)485, 1978 4 SCC 47,HUSSAINARA VS HOME SECRETRY STATE OF BIHR,AIR 1979 SC 1360:SCC 1980(1)93: 1980 SCC (Cri)35:1979CriLJ1036 ஆகிய வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் அத்தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த மனு பரிசீலிக்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      14.இந்திய அரசமைப்பு சட்டத்தின் கோட்பாடு 21-இன்படி ஒரு நபரின் அந்தஸ்து என்பது அவரது மதிப்புமிக்க சொத்து மற்றும் அவரது அடிப்படை உரிமையாகும். இந்நிலையில் பிணை மனு நிலுவையில் இருக்கும்போது ,பிணை வழங்குவதில் உள்ளடங்கிய அதிகாரமாக “ இடைக்காலப்பிணை “ வழங்குவதற்கான விருப்புரிமை அதிகாரம் உள்ளது.மனுதாரர் இடைக்கால பிணைமனு சமர்பித்திருந்தால் அன்றைய தினமே இடைக்கால பிணை வழங்கப்பட வேண்டும் சுக்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு (2009) 7 SCC 559, 2009 3SCC (Cri) 487 Date 18-05-2009 வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பதையும் திருமிகு. காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

      15,மேற்படி வழக்கை நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன். வழக்கு விசாரணையில் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராவேன் என்பதை திருமிகு. காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் 654, 655-இன் படி குற்ற விசாரணை முறை சட்டம் 1973 –இன் 437ஆகிய பிரிவுகளின் நோக்கத்துக்குள் வந்தால் காவல்துறை விசாரணை அதிகாரி ஜாமினில் விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் மேலும் காவல் நிலைஆணை 566 இன் படி விசாரணை நடு நிலையாக இருக்கவேண்டும் எனவும் பொய்வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை காவல் நிலை ஆணை 566 உட்பிரிவு 3 இன் படி (MISTAKE OF FACT) ரத்து செய்து படிவம் 90இல் எதிர் முறையீட்டாளருக்கு தெரிவிக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அதன் அடிப்படையில் இந்த மனுவின் மீது முடிவெடுக்கவேண்டுமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

         எனவே திருமிகு. காவல் துணைக் கண்காணிப்பாளர்  அவர்கள் இந்த மனுவை பரிசீலனை செய்து,
      
             1.குற்ற விசாரணை முறை சட்டத்திற்கு விரோதமாகவும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு விரோதமாகவும் தொடரப்பட்ட மேற்படி முதல் தகவல்  (குற்ற எண்:256/2023) அறிக்கையை  தமிழ்நாடு காவல் ஆணை கள் 566,659—இன் படி பொய் வழக்கு என நீதிமன்றத்திற்கு (MISTAKE OF FACT) என அறிக்கை அனுப்ப தக்க நடவடிக்கை எடுக்கமாறு மிகவும் தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்.

      2.மேற்படி வழக்கில் எதிர் மனுதாரர் பொய் சாட்சி அளித்தல் காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் பொய்சாட்சியம் சொல்லுதல்அப்பாவிகளுக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்து தீங்கு செய்தல் மற்றும் நீதி நிர்வாகத்தை பாதிக்கசெய்தல் ஆகிய குற்றங்களுக்கு இந்திய் தண்டனை சட்டம் 1860 பிரிவுகள் 182,211 கீழ் மேலும் தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் 662-இன் கீழ் வழக்கு தொடுத்து தக்க நடவடிக்கை எடுக்கவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      ஒப்பம்

      S.Rajasekaran
      03/08/2023

      தக்க நடவடிக்கை எடுக்க நகல் சமர்ப்பிக்கப்படுகிறது :

      1.குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 1973 பிரிவு2 (7) இன் கீழ் நடவடிக்கை எடுக்க மாண்புமிகுசிறப்பு வன்கொடுமைத்தடுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேனி மாவட்டம்.

      2.குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 1973 பிரிவு2 (7) இன் கீழ் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் தேனி மாவட்டம்

      3.குற்றவிசாரணை நடைமுறை சட்டம் 1973 பிரிவு482 இன் கீழ் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) மதுரை மாவட்டம்.

      4, கோட்பாடு 13(2) இந்திய அரசமைப்பு 1950 இன் கீழ் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ராஜ்பவன் கிண்டி சென்னை மற்றும் கோட்பாடு 154 இந்திய அரசமைப்பு 1950 ஆளுநர் அவர்கள் கடமையை செய்ய சமர்ப்பிக்கப்படுகிறது

      குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *

      Related Post

      வழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்காக RTI யில் தகவல் கேட்க எந்தவித தடையேதுமில்லைவழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்காக RTI யில் தகவல் கேட்க எந்தவித தடையேதுமில்லை

      ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

      தகவல் பேரும் உரிமை சட்டம் 2005 ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.தகவல் பேரும் உரிமை சட்டம் 2005 ன் படி கேட்கப்பட்ட கேள்விகள்.

      ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1), 6(3) மற்றும் 7(1)ன் கீழ் தகவல் கோரிமனு. அனுப்புதல்: பெறுதல்: பொது

      Filing procedure in civil courts

      Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்Filing procedures in civil Courts for plaint| உரிமையியல் நீதி மன்றங்களில் வாதி வழக்கு தாக்கல் செய்யும் முறைகள்

      ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 Presentation of plaint Plaint – வாதி நீதிமன்றத்திற்கு சமர்க்கும் வழக்கை இரண்டு பிரதிகள் தயார் செய்ய வேண்டும். அவை CONQUER

      வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.