*உங்களுக்கான தெளிவான பதில்👇:-*
*ப.சத்தியகுமார்,*
தலைவர்,
மாநில சட்டம்-ஒழுங்கு அணி,
மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம்
( தமிழ்நாடு – புதுச்சேரி)
📲 *:- +919626669371*
நண்பருக்கு வணக்கம்…
🙏🙏🙏
உங்கள் கேள்வியினூடாக உங்கள் ஆதங்கம் புரிகிறது…
இது இன்றளவில் பரவலாக உள்ளது… சரி இதற்கு நீங்கள் ஒரு முடிவுகட்ட தீர்மானித்துள்ளதை அடிப்படையில் வாழ்த்தி வரவேற்கிறோம்…
*இது ஒரு நுகர்வோர் பிரச்சனைதான்…* சுங்கச்சாவடியினர் அமைத்துள்ள கட்டணச்சாலையில் பயணிக்க கட்டணம் செலுத்தி பயணச்சேவையை அனுபவிக்கும் நீங்கள் அடிப்படையில் ஒரு *நுகர்வோர் ( Consumer) …*
சுங்கச்சாவடியில் நீங்கள் செலுத்தும் நிதி *சாலை வரி ( Road Tax )* அல்ல… அது *””கட்டணம்””* /சுங்கச்சாலைகளை அதனால்தான் *”கட்டணச்சாலை”* என்று அழைக்கிறார்கள்… எனவே *வரிச்சாலை* என்று எங்கேயும் யாரும் அழைப்பதில்லை… அழைத்ததில்லை..
எனவே வாகனம் மூலம் செல்லாத பயணத்திற்கு உங்களிடம் பணம்பிடித்தம் செய்தது *குற்றம் /முறைகேடு*
எனவே முதற்கட்டமாக பின்வருமாறு விளக்கம்/தகவல்கள்/ வேண்டி ஒரு நுகர்வோர் சட்ட அறிவிப்பு அனுப்புங்கள்… இந்நடவடிக்கை 100% உங்களுக்கு பயனளிக்கும்…
*பாரதிய சாட்சிய அதிநியம் -2023 சட்டப்பிரிவு : 75*
இவற்றுடன் இணைந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 2019,
*சட்டப்பிரிவு : 2(7)(ii) ,*
*சட்டப்பிரிவு : 2(9)(ii) ,*
*சட்டப்பிரிவு : 2(42) -*
இவைகளின் கீழ், உங்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்தது தொடர்பாக
1) நாள், நேரம், சிசிடிவி வீடியோ பதிவு ஆதாரம்
2) குறித்த சுங்கச்சாவடியில் ஒவ்வொரு தரப்படுத்தப்பட்ட வாகனத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் எவ்வளவு ? , அவை எந்ததேதி முதல் எத்தகைய அனுமதிகளை பின்புலமாக கொண்டு அங்கு உரிமையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டதோ அந்த ஆவணங்களின் *சான்றொப்பமிட்ட நகல்கள் ( Attested Copy)*
3) *எந்த வரிசை எண்கொண்ட சுங்கப்பாதை ( பூத் )* வழியாக வாகனம் குறித்த நாளில் பயணித்தது…? எத்தனை சிசிடிவி கேமராக்கள் அங்கு முறையாக பராமரிக்கப்படுகிறது…???
4) தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் ( NHAI ) வழங்கிய அறிவுறுத்தல்படி *சிசிடிவி கேமராக்களின் வீடியோ சேமிப்பகம் ( Storage)* எத்தனை நாட்கள்வரை முறையாக சேமிப்பில் வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு இதுவரை வரப்பெற்ற அறிவுறுத்தல் கடிதம் அல்லது ஆணை அல்லது நிர்வாக சுற்றறிக்கையின் *சான்றொப்பமிட்ட நகல் ( Attested Copy)*
5) சுங்கச்சாவடி சிசிடிவி கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ள நினைவக அட்டை *எத்தனை டெராபைட்* அளவுவரை நிறையளவு கொண்டுள்ளது…?
6) சுங்கச்சாவடி சிசிடிவி கேமராக்கள் கடைசியாக எந்த தேதியில் பழுதுபார்க்கப்பட்டது ? பழுது பார்த்தமைக்கு எவ்வளவு செலவுகள் ஆனது ? அந்த செலவீனத்திற்கு ஆதாரமான பதிவேடுகள் – இரசீதுகளின் *சான்றொப்பமிட்ட நகல்கள் ( Attested Copy)*
7) குறித்த நாளில், குறித்த பாதையில் , குறித்த நேரத்தில் வாகனம் பயணித்தபோது –
*எனது வாகனத்திற்கு முன்சென்றதும், பின்வந்ததுமாகிய* வாகனங்களின் பதிவு எண்கள் என்ன…?
8) குறித்த நாளில், குறித்த ஷிப்டில், குறித்த எண்கொண்ட பாதையில் ,
அன்றளவில் மட்டும் அந்த ஷிப்டுக்குள் மாத்திரம் *பாஸ்டேக் ( Passtag)* மூலம் எவ்வளவு பணம் வசூலானது…? *கைமுறையாக அபராதத்தொகையுடன் ( Penalty) இருமடங்கு பணம்* செலுத்தியர்களின் கட்டணவசூல் வகையில் எவ்வளவு பணம் வசூலானதாக *”சுங்கச்சாவடி வசூல் பதிவேட்டில்” அல்லது “கணிணியில்” பதிவிடப்பட்டிருந்தால் அதனை பதிவிறக்கம் செய்து சான்றொப்பமிட்டு வழங்கும் நகல்கள் ( Attested Copy)*
9) உங்கள் வாகனத்தில் எந்த வங்கியின் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள பாஸ்டேக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்விக்கப்பட்டது…?
அந்த மாதத்தில் எத்தனை முறை உங்கள் வாகனம் குறித்த சுங்கச்சாவடியில் இருபுறமும் பயணித்ததாக பதிவுகள் உள்ளது…?? அவைகளின் தேதி,நேரம் உள்ளிட்ட விபரம்
👆✍️👉மேற்காணும் இத்தகைய தகவல்களை எல்லாம் மேற்காண் சட்டப்பிரிவுகளின் கீழ் தகுந்த தெளிபொருள் விளக்கம் கேட்டும் மற்றும் உங்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்களை கேட்டும், அதற்கு விரிவான தெளிவான பதில் வழங்கிடக் கூறி 15-நாட்கள் அவகாசம் கொண்ட *”நுகர்வோர் சட்ட அறிவிப்பு ( Consumer Legal Notice )”*
அனுப்புங்கள்… இதற்கு வழக்கறிஞர் தேவைப்படாது… நீங்களே அனுப்பலாம்… *15-16 நாள் பாருங்கள்… பதில் வரவில்லை என்றாலோ , எந்தவொரு ஆதாரம், சட்டப்பூர்வ மேற்கோளுமின்றி* தெளிவற்ற திருப்தியற்ற இட்டுக்கட்டும் மொட்டைப் பதில்கள் ஏதும் வழங்கினால் மேற்காணும் *சட்ட அறிவிப்பின் நகலையும் இணைத்து -* மின்னணு வழியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கவும்…
புகார் நிச்சயம் ஏற்கப்படும்… விசாரணை நடைபெறும்… தீர்வு கிடைக்கும்…
நுகர்வோருக்கு வேண்டிய எந்தவொரு தகவலையும் வழங்க மறுப்பது என்பது, *நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019, சட்டப்பிரிவு 2(11)(ii) -ன் கீழ் சேவைக் குறைபாடு* ஆகும் என்றறிக…
எனவே மேற்காண் சேவைக்குறைபாட்டிற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் *சட்டப்பிரிவு : 2(9)(V)-ன் படி* உரிய மன்றத்தில் குறைவுதீர்வை நாடி பரிகாரம் பெறுவதற்கு உங்களுக்கு சட்டம் உரிமை வழங்கியுள்ளது…
உங்கள் பாஸ்டேக் வங்கி, சுங்கச்சாவடி நிர்வாகம், மாவட்ட NH திட்ட இயக்குநர் ( PDO ) ஆகியோரை எதிர்மனுதாரராக இணைத்து, ஆணையத்தில் புகார் தாக்கல் செய்து விரிவான விசாரணை மற்றும் பாதிப்புக்குத்தக வேண்டியவாறான இழப்பீடுகளை கோரலாம்…
நன்றி…
*PSPA*