SARFAESI ACT என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் யாவை?
சர்பாசி ஆக்ட் – இது வங்கிகள் கொடுத்த கடனை நீதிமன்றங்களை நாடாமல் வங்கிகளே வசூல் செய்து கொள்ள அதிகாரம் தருகிறது. பிரச்சனை எழுந்தால் ‘வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயத்தின்’ உதவியையும் நடலாம்.
SARFASI ACT – இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act அதாவது ‘நீதிச் சொத்தை பத்திரப்படுத்தலும் மறு கட்டமைத்தலும் மற்றும் பிணைய நலனை வலியுறுத்தி செயல்படுத்தல்’.
வங்கி கொடுத்த கடனை வசூலிக்க இந்த சட்டம் இயற்றப்பட்ட 2002-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கு கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் கட்டி ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்ய ஆயிரத்தெட்டு சட்ட நடைமுறைகளை பின்பற்றி வங்கி வழக்கை நடத்தி தீர்ப்பு வாங்க வேண்டும். இதற்கு பல மாதங்கள் வருடங்கள் ஆவதாகவும் அதனால் வாராக் கடன்கள் அதிகமாவதாகவும் வந்த புகாரை அடுத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் வங்கி கொடுத்த கடனை அதுவாகவே வசூல் செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ் ‘கடன் வசூல் தீர்ப்பாயம்’ (Debt Recovery Tribunal) ஒன்றும் ‘கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ (Debt Recovery Appellate Tribunal) ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது . இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை அதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் ஜப்தி செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலை வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்கள் கண்டபடி எதிர்வாதம் செய்யவும் முடியாது.
கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறும் போது, இந்த சட்டம், 2002, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சொத்துக்களை ஏலம் விட அனுமதிக்கிறது.
மீட்பு அல்லது புனரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கிகள் செயல்படாத சொத்துக்களை (என்.பி.ஏ) குறைக்க இது உதவுகிறது. கடன் வாங்குபவர் தனது வீட்டுக் கடனை ஆறு மாதங்களுக்கு திருப்பிச் செலுத்துவதில் தவறினால், வங்கிகள் அவருக்கு / அவளுக்கு 60 நாள் தருகின்றன . அந்த ஆறு மாதங்களில் பதில் சொல்லவில்லை என்றால் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஜப்தி செய்து ஏலம் விடுவார்கள். அந்த 60 நாட்களில் பணத்தை செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் அல்லது அவகாசம் கேட்கலாம் அவகாசம் முடிந்ததும் மீண்டும் ஜப்தி செய்து ஏலம் விடுவார்கள்.
இந்த சட்டத்தின் 2016 ம் வருடம் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.
பிரிவு – 13 :
அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 – பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.
பிரிவு – 17 :
வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது இருந்தால் அல்லது வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம்.
பிரிவு – 34 :
பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால தடை பெறவே முடியாது. ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.