GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?
ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!
மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும் ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.
ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள் எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்களை அரசர்கள் போல நினைத்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் உள்ளது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.
உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், நியாயத்தை கேட்கும் பொதுமக்கள் என அனைவர் மீதும், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக பொய் புகார் அளித்து காவல்துறையினர் உதவியுடன் வழக்கு பதிவு செய்கின்றனர்.
அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை, எளிய மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை. பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சை எடுக்கின்றனர்.
எத்தனையோ சட்டங்களின் இருந்தும் இதுபோன்ற அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பதை யோசித்து பாரத்தால் அற்ப காரணங்களால் தான் தப்பி விடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக….
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1.8.2014 ஆம் தேதி ரிட் மனு எண். 20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.9.2015 ஆம் தேதி அரசாணை எண். 99 ஐ வெளியிட்டது.
ஆனால் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவையோ அல்லது அரசாணை எண் 99 யையோ எவனாவது மதிக்கிறானா?
அப்படி என்றால் இவர்களை எப்படி தண்டிப்பது?
மக்கள் பணி செய்யாத, செய்ய தவறுகிற அரசு ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட அலுவலர்களே என்று சட்டம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற அலுவலர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 கூறுகிறது.
ஆனால் தண்டனை பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அற்ப காரணங்களின் அடிப்படையில் தான் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள்.
அந்த ஓட்டை என்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 தான் அந்த ஓட்டை.
Crpc sec 197 – Prosecution of judges and public servants
பொது ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் மத்திய அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் கு. வி. மு. ச பிரிவு 197 கூறுகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166(அ),166(ஆ),354,354(அ),354(இ),354(ஈ),370,375,376,376(அ),376(இ),376(ஈ),509 போன்ற குற்றங்களை ஒரு அரசு ஊழியர் செய்தால் அதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஊழல், பொய் ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக வழக்கு தொடரவும் அனுமதி பெற தேவையில்லை.
அரசு ஊழியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை பார்த்தால், அநேகமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ஐ காரணம் காட்டி தப்பி சென்றிருப்பதாகவே துலங்குகிறது.
எனவே ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்யத் தவறினால் அவர்மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவுத் தபாலில் அனுப்பி அதன்பிறகு தான் குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தவறு செய்த அதிகாரி ஈசியாக தப்பி விடுவார்.

இரா.கணேசன்,
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சுத்தமான காற்று, சுகாதாரமான தண்ணீர் பொதுமக்களுக்கு தரவேண்டியது அரசின் தலையாய கடமைசுத்தமான காற்று, சுகாதாரமான தண்ணீர் பொதுமக்களுக்கு தரவேண்டியது அரசின் தலையாய கடமை

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Collector’s power is not for appointing Panchayat secretaries | பஞ்சாயத்து செயலர்களை நியமிக்கும் உரிமை கலக்டர்களுக்கு இல்லை. உயர்நீதி மன்றம் உத்தரவு.Collector’s power is not for appointing Panchayat secretaries | பஞ்சாயத்து செயலர்களை நியமிக்கும் உரிமை கலக்டர்களுக்கு இல்லை. உயர்நீதி மன்றம் உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று குற்றச் சட்டங்களில் திருத்தம்.இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று குற்றச் சட்டங்களில் திருத்தம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898, இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று குற்றச் சட்டங்களில்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)