நியாய விலை கடை புகார் பதிவேட்டில் புகார் பதிவு செய்வது எப்படி?
புகார் தாரர் பெயர்:
முகவரி:-
ஸ்மார்ட் கார்டு எண்:
தொலை பேசி எண்.
பெறுநர்: வட்ட வழங்கல் அலுவலர்,
வட்டாட்சியர் அலுவலகம், ———-மாவட்டம்.
புகாருக்கான காரணம்.
என்னென்ன புகார்கள்பதிவு செய்யலாம்?
👇
01. முழு நேர நியாய விலை கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் திறந்திருக்கவேண்டும். அவ்வாறு திறந்திருக்க வில்லை எனில் புகார் பதிவு செய்யலாம்.
02. அரிசி பருப்பு கோதுமை சர்க்கரை உள்ளிட்ட தரமில்லாத உணவு பொருட்கள் விநியோகம் செய்தால் புகார் பதிவு செய்யலாம்.
03. எடை குறைவாக பொருட்கள் விநியோகம் செய்தால் புகார் பதிவு செய்யலாம்.
04. கள்ள சந்தையில் பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் புகார் பதிவு செய்யலாம்.
05.தினசரி பொருட்கள் இருப்பு விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வில்லை என்றால் புகார் பதிவு செய்யலாம்.
06.கடை விடுமுறை நாட்களில் தகவல் பலகையில் எழுதி வைக்க வில்லை என்றால் புகார் பதிவு,செய்யலாம்.
07. கடை விற்பனையாளர் எடையாளர் தவிர்த்து மூன்றாம் நபர் கடையில் இருந்தால் புகார் பதிவு செய்யலாம்.
08. புகார் தெரிவிக்க வேண்டிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள் தகவல் பலகையில் எழுதி வைக்க வில்லை என்றால் புகார் பதிவு செய்யலாம்.
09. ரவை.சேமியா, உப்பு,டீத்தூள், மைதாமாவு, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களை ரசீது இல்லாமல் கட்டாய படுத்தி விற்பனை செய்தால்.