மத்திய அரசின் பூ ஆதார்…என்றால் என்ன
பத்திரப்பதிவு செய்ததுமே பட்டா.. அதிக சொத்து வாங்கியவர்களுக்கு சிக்கல்?
நில மோசடிகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ‘பூ ஆதார்’ கொண்டு வரப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு சொத்துக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய பூ ஆதார் வழங்கப்படும்.
இந்த திட்டம் காரணமாக ஒரு சொத்து பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே சொத்தின் உரிமையாளர் பெயர் பூ ஆதாரில் மாறி விடும்.
அதேநேரம் நிலஉச்ச வரம்பு சட்டத்தை மீறி அதிக சொத்து வாங்கியவர்களை எளிதாக கண்டுபிடிக்கவும் அரசால் முடியும்
பொதுவாக சொத்துக்களின் மதிப்பு ஏறியபடி தான் உள்ளது
ஒருகாலத்தில் சென்னையில் வெறும் 10000 ரூபாய்க்கு வாங்கிய இடங்கள் எல்லாம் இன்று 100 கோடி என்கிற அளவிற்கு மதிப்பு உயர்ந்துவிட்டது. அதேபோல் கடந்த 2012ல் 3 லட்சமாக இருந்த நிலத்தின் மதிப்பு , இப்போது 18 லட்சம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமல்ல, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திருப்பூர்,சேலம், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் நிலத்தின் மதிப்பு கடந்த 10 வருடங்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல இடங்களில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
நிலத்தின் மதிப்பு உயர்வு காரணமாக ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
விவசாயத்தை விட ரியல் எஸ்டேட்டில் அதிக லாபம் இருப்பதால், விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பதும் அதிகரித்து வருகிறது.
1.நான்கு வழிச்சாலை,
2.பேருந்து நிலையம்,
3.கலெக்டர் ஆபிஸ்,
4.ஆர்டிஓ ஆபிஸ்,
5.விமான நிலையம்,
6.மருத்துவமனை,
7.பள்ளி,
8.கல்லூரி,
9.புதிதாக போடப்படும் சாலைகள்,
10.வேகமாக வளரும் புறநகர் பகுதிகள் போன்றவை காரணமாக நிலத்தின் மதிப்பு பல்வேறு இடங்களில் அதிகரித்துள்ளது.
இதனால், 10 ,15 வருடம் முன்பு யாருமே எட்டிப்பார்க்காத இடம் கூட இன்று, தங்கத்தை விடவும் அதிக மதிப்புடையதாக மாறிவிட்டது.
இதனால் நிலத்தை போலியாக ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
அதேபோல் அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
போலியாக ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
போலியான பத்திரப்பதிவு, அரசு நில ஆக்கிரமிப்பு நிலங்கள், போன்றவற்றை வாங்கியவர்கள் வாழ்நாள் முழுவதும் வேதனையில் தவிக்கிறார்கள்.
இப்படி போலியான ஆவணங்களால் பத்திரப்பதிவு செய்வதை தடுக்கவும், அரசு நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதேநேரம் இந்தியா முழுவதும் அரசு நில மோசடியை தடுக்கவும், நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி தெளிவான தகவல்களை திரட்டவும் முடிவு செய்துள்ளது .
எப்படி ஆதார் கார்டு ஒருவருக்கு இருக்கிறதோ, அதுபோல் நிலத்திற்கும் தனி ஆதார் எண் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது சொத்துகளை அடையாளம் காண ஒவ்வொரு சொத்துகளுக்கும் தனித்துவமான அடையாள எண்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதற்கு ‘பூ ஆதார்’ என்று பெயரிட்டுள்ளது
இதில் ‘பூ’ என்பது பூமியை அதாவது நிலத்தை குறிப்பதாகவும், பூ ஆதார் குறித்து கடந்த பட்ஜெட்டின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நில மோசடிகளை தடுப்பது தான் ‘பூ ஆதார்’ கொண்டு வரப்பட்டதன் முதன்மையான நோக்கம் ஆகும்.
இதற்காகவே தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பத்திரபதிவுத்துறையுடன், வருவாய்த்துறையும் இணைந்து செயல்படும் வகையில் தொழில்நுட்பங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உட்பிரிவு அல்லாத சொத்துகளை பதிவு செய்யும்போது அடுத்த நிமிடமே பட்டா மாறுதல் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பூ ஆதார் திட்டம் எளிதாக நடைமுறைக்கு வந்துவிடும். எனவே, குறிப்பிட்ட ஒரு சொத்துக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய பூ ஆதார் வழங்குவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.
அதேநேரம் இந்த பணியை முடிப்பது என்பது மிகவும் சவாலான காரியம் ஆகும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு சொத்துகளுக்கும் தனித்துவ அடையாள எண்களுடன் கூடிய ‘பூ ஆதாரை’ வழங்குவதற்கு மாநிலங்களை ஊக்குவிக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க போகிறதாம்.
‘பூ ஆதார்’ வந்துவிட்டால், சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் உள்ளது என்பதை மிக எளிதாக அரசால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்டறிய முடியும்.
இந்த பூ ஆதார் திட்டப்படி, ஒரு சொத்து பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே சொத்தின் உரிமையாளர் பெயர் பூ ஆதாரில் மாறி விடும்.
குறிப்பிட்ட அந்த சொத்தின் ‘பூ ஆதார்’ எண்ணை அதற்காக உருவாக்கப்படும் வெப்சைட்டில் உள்ளிடும்போது உடனடியாக அது யாருடைய சொத்து என்பதை அறிய முடியும்..
“தமிழக அரசு ஊழியர்களுக்கு.. யோசிக்காத சூப்பர் அறிவிப்பு.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! “
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலங்களும் நில உச்சவரம்பு சட்டம், தனிநபர் அல்லது ஒரு குடும்பம் எவ்வளவு சொத்துகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள முடியும் என வரையறைகளும் உள்ளன.
இதன்படி ஒருவர் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக சொத்துகளை வைத்துள்ளாரா? என்பதையும் அரசால் கண்டுபிடிக்க முடியும்.
அதேபோல் அதிக சொத்து இருந்தால், இந்த சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது?, இவ்வளவு சொத்துகளை வாங்குவதற்கு அவருக்கான வருமான ஆதாரம் என்ன என்பதையும் மத்திய அரசால் கண்டுபிடித்து கேள்வி கேட்க முடியும்.
அதேபோல் ஆக்கிரமிப்புகளுக்கு இனி வாய்ப்பே இருக்காது
இந்த பூ ஆதாரை பொறுத்தவரை 14 அல்லது 16 இலக்கங்களை கொண்ட குறியீட்டு எண்ணாக இருக்கும் என்றும் அந்த நிலம் அமைந்துள்ள மாநிலம், மாவட்டம், தாலுகா, கிராமம், நிலத்தின் வகைப்பாடு ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அந்த குறியீடு எண்கள் இருக்கும் என்கிறார்கள்.