GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் நோட்டாரி பப்ளிக் சட்டம் என்ன சொல்கிறது.

நோட்டாரி பப்ளிக் சட்டம் என்ன சொல்கிறது.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

The Notaries Act, 1952(53 of 1952

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக்(`உண்மை நகல்’ என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படும்)
பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மிடம் இருக்கும் அசல் டாக்குமென்ட்களின் பிரதிகளை( Xerox ) அரசாங்கம், கோர்ட், இதர நிறுவனங்கள் என்று பலருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

அப்போது அசல்(Original) டாக்குமென்ட்களை கொடுப்பது சாத்தியமில்லை.
எனவே, அவற்றின் பிரதிகளை (அந்தக் காலத்தில் டைப் செய்யப்பட்ட நகல்கள்) ஜெராக்ஸ் பிரதிகளாக சமர்ப்பிக்கலாம்.

💥ஆனால், நாம் கொடுக்கும் பிரதிகள் உண்மை நகல்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்…?


இது உண்மையான நகல் என்று நமக்கு நாமே உறுதி அளித்துக் கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட, பொறுப்பான வேறு ஒருவர்தான் அதைச் செய்ய முடியும்.
அவர்தான் நோட்டரி பப்ளிக் ஒரு டாக்குமென்ட்டை `உண்மை நகல்’ என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

இன்னும் சில விஷயங்களில் சட்டப்படி, முத்திரைத்தாளில் பிரமாணமாக எழுதி, கையெழுத்திட்டு சமர்ப்பிப்பார்கள் சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு, சமர்ப்பித் தாலும் கூட, ஒரு நோட்டரி பப்ளிக், என் முன்னிலையில் இன்னார், இன்ன தகவல்கள் இடம் பெறும்படியான பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும்.

அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.
வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பிராக்டீஸ் செய்தவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தை மூத்த நோட்டரிகள் இரண்டு பேர் சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும்.
பிறகு, அதற்குரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும்.

அவர் அந்த விண்ணப் பங்களைப் பரிசீலனை செய்து தகுதி யானவற்றை சிபாரிசு செய்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.
வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு விண்ணப்பித்திருக்கும்போது `இவர்கள் நோட்டரி ஆவதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால், அர சாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்’ என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும்.

ஆட்சேபணை ஏதுமில்லாமல், மற்ற அம்சங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.
இப்படி நியமிக்கப்படுபவர்கள் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும்.

அவரவர்கள் தமக்கு குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதிக்கான விஷயங்களில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும்.

மாநில அரசிடம் மட்டும் அனுமதி பெற்ற செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நோட்டரி ஒருவர், புதுக் கோட்டை டாக்குமெண்டை அட்டஸ்ட் செய்ய முடியாது.

ஆனால், ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய, அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் அனுமதி அளிக்கப்படும் , மூன்றாண்டு களுக்கு ஒருமுறை அந்த அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது விண்ணப்பிக்கும்போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது.

அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போதுமானது, இதற்கும் கட்ட ணம் உண்டு.

ஒரு வழக்கறிஞர் நோட்டரிக்கான அனுமதி பெற்றதும் நோட்டரிக்குரிய இரண்டு ரப்பர் ஸ்டாம்ப்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று நோட்டரியின் பெயர் மற்றும் அவர் செயல்பட அனு மதிக்கப்பட்ட எல்லையைக் குறிப்பிடும் வட்ட வடிவத் திலானது.

இன்னொன்று அவரது பெயர் மற்றும் முகவரி கொண்ட செவ்வக வடிவ ரப்பர் ஸ்டாம்ப்.

நோட்டரி பப்ளிக் என்பவர் ஆவணத்தில் கையெழுத்திடும்போது பச்சை மையில்தான் கையெழுத்துப் போட வேண்டும்.

அஃபிடவிட் என்று சொல்லப் படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம்.

ஒருவருடைய உயிலின் பிரதிகளை, சொத்து டாக்குமென்ட்களை `உண்மை நகல்’ என்று அட்டஸ்ட் செய்யலாம்.

ஒருவர் பெயரில் இருக்கும் டெலிஃபோனை அவரது வாரிசுதார ருக்கோ அல்லது அவரது விருப்பத்தின் பேரில் வேறு ஒருவருக்கோ மாற்றும் போது, அந்த ஒப்பந்தத்தை அட்டஸ்ட் செய்யலாம்.

வங்கிகளுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ அளிக்கும் இன்டம் னிடி பாண்டுகளை அட்டஸ்ட் செய்யலாம்.

அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் செல்லும்போது, நீங்கள் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட மாட்டீர்கள்; இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுவீர்கள்; அதற்கான அவசியம் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துச் சொல்வதுபோல் சில அஃபிடவிட்கள் கொடுக்க வேண்டும். அவற்றுக்கு நோட்டரியின் அட்டஸ் டேஷன் அவவதற்க்கு ஆண்டுக்கு ஒரு முறை, ஒவ்வொரு நோட்டரியும், தாங்கள் அட்டஸ்ட் செய்த டாகுமென்ட் களின் விவரங்களை, அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையும் இருக்கிறது.

நோட்டரிகள் பயன்படுத்தக் கூடிய `நோட்டரி ஸ்டாம்ப்’ என்று ஒன்றுண்டு, பிரமாணப் பத்திரம், பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை அக்ரிமென்ட்கள் என்று நோட்டரிகள் எதில் கையெழுத் திட்டாலும், அதில் பத்து ரூபாய் மதிப்புள்ள நோட்டரி ஸ்டாம்ப்களை ஒட்ட வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை நகல் என்று சான்றளிக்கும் டாக்குமென்டில் நோட்டரி ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமில்லை.

அட்டஸ்ட் செய்கிறபோது சம்பந்தப்பட்டவர் அந்த நோட்டரிக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக இருக்க வேண்டும். அப்படித் தெரியாத பட்சத்தில், சம்பந்தப் பட்டவருக்கும், நோட்டரிக்கும் அறிமுகமான ஒரு பொதுவான நபர் அவசியம். இருவருக்கும் தெரிந்த அந்த நபர், இன்னாரை எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டு கையெழெுத்திட வேண்டும்.

அதன் பிறகு நோட்டரி, `நான் அறிந்த இன்ன நபரால், அடையாளம் கூறப் பட்ட இவர், என் முன்னிலை யில் அளித்த பிரமாணம்
இது’ என்று குறிப்பிட்டு கையெழுத்திடலாம்.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட தினத்தில் வராமல் தாமதமாக வந்து சேர்ந்தால், அந்தக் கப்பலின் கேப்டன் காலதாமதத்துக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

💥 அந்நிய நாட்டிலிருந்து வரும் கப்பலின் கேப்டனுக்கு இங்கே இருக்கும் நோட் டரியை எப்படித் தெரிந்திருக்கும்…?


அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கப்பலுக்குரிய லோக்கல் ஏஜென்ட் மூலமாக அடையாளம் கண்டு நோட்டரி பிரமாணப் பத்திரத்தை அட்டஸ்ட் செய்வார்.

💥 நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன…?


  1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது.
  2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது.
  3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது.
  4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது
  5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது.
  6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது.
  7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள்.

அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.
நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

💥 அவற்றில் முக்கியமான சில பணிகளை :-


  1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்.
  2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit).
  3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்.
  4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்.
  5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்.

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும்.

“சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956” ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சட்டம் சொல்வதென்ன? அரசு ஊழியர் நடத்தை விதிகள் படி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா!சட்டம் சொல்வதென்ன? அரசு ஊழியர் நடத்தை விதிகள் படி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 18 அரசு ஊழியர் என்பவர் யார்? நடத்தை விதிகள் என்ன சொல்கிறது? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா? சட்டம் சொல்வதென்ன? தமிழ்நாடு

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு_ தடுப்புச் சட்டம் 2003

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 The Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act,2003 சட்ட

அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்ககாத நிலையில்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 அரசு துறைக்கு மனு செய்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அல்லது அரசு அரசுத் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாத

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)