GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள்

EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

EMI வசூல் என்ற பெயரில் வங்கி நிர்வாகத்தினர் மிரட்டி வந்தால் இதுபோல புகார் அளியுங்கள் இந்த புகார் மீது இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டிருப்பதை கீழே காணலாம்! இதுபோல பாதிப்பு இருப்பவர்கள் இதுபோல உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்! மேலும் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்!

ஒப்புதலுடன் பதிவஞ்சல்

மனுதார்:
S. கருப்பசாமி,
119, தெற்கு இரத்தினசாபாபதிபுரம் தெரு,
திருநகரம்,
அருப்புக்கோட்டை -626101,
விருதுநகர் மாவட்டம்.
Cell Phone No.

பெறுநர்:
திரு. வங்கி குறைதீர்ப்பாளர் (Bank ombudsman) அவர்கள்,
ரிசர்வ் வங்கி,
சென்னை -600001.
இமெயில். bochennai@rbi.org.in

ஐயா,
பொருள்:
வங்கியியல் சட்டம் மற்றும் Reserve Bank of India guidelines நடைமுறை விதிகளுக்கு முரணாக அடமான கடன் முழுமையாக செலுத்தி அடமான கடனை முற்றாக்கம் செய்வதற்கு தடையாக இருந்து கொண்டும், EMI வசூலிக்க சிவில் நடைமுறையை பின்பற்றாமல் கடானாளியாகிய எனது வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்துவரும் Equitas Small Finance Bank Limited, என்ற தனியார் வங்கி நிறுவனத்தின்மீது புகார் மனு.

பார்வை:
Equitas Small Finance Bank Limited, கடன் கணக்கு எண். 700008710942, Agreement No. SEVDGAR0455247

1) மனுதாரர் ஆகிய நான் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, திருநகரம், தெற்கு ரத்தின சபாபதிபுரம் தெரு, கதவு எண்.119, இல் குடியிருந்து வரும் சுப்பிரமணி என்பவரின் மகனான S. கருப்பசாமி, வயது 47 ஆகிய நான் அகத்தூய்மையோடும், உளப்பூர்வமாகவும், எந்தவித உள்நோக்கமின்றியும், வழங்கும் (அபிடவிட்டு) சத்திய பிரமாணம்.

2) மனுதாரர் ஆகிய நான் மேலே கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் ஒரு சாதாரண ஏழை விசைத்தறி நெசவுத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆவேன். மேலே காணும் முகவரியில் உள்ள வீட்டினை கட்டுவதற்கு Equitas Sumall Finance Bank, விருதுநகர் என்ற நிறுவனத்திடம் இருந்து அடமான கடன் பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். இந்த வங்கியில் எனக்கு மொத்தம் ரூ.10,37,799 (ரூபாய் பத்து இலட்சத்தி முப்பத்தேழாயிரத்து ஏழுநூற்றி தொண்ணூற்றி ஒன்பது மட்டும்) கடன் பாக்கி இருப்பதாக வங்கி நிர்வாகத்தினர் வாய்மொழியாக கூறி வருகின்றனர். இந்த கடன் தொடர்பான எழுத்து மொழியான வரவு செலவு அறிக்கையை பலமுறை கேட்டு துயர்ந்தும், வரவு செலவு அறிக்கையை (statement) வழங்காமல் இருந்து வருகின்றனர். இந்த வங்கி கடன் தவிர எனக்கு வெளியில் வங்கியல்லாத தனி நபர்களிடம் கடன்பாக்கி இருந்து வருகிறது. மேலும் எனது குடும்ப அவசிய அவசர தேவைகளுக்காகவும், எனது மொத்த கடன் பாக்கியை பைசல் செய்வதற்காகவும், மேற்படி தாவா சொத்தினை (நான் குடியிருக்கும் வீட்டை) விற்பனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையை விளக்கி Equitas Sumall Finance Bank, நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகத்திற்கும், விருதுநகர் கிளை நிறுவனத்திற்கும் மனுதாரர் ஆகிய என்னால் கோரிக்கை மனு ஒன்று கடந்த 21.06.2024 ஆம் தேதியில் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பித் தரப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

2) இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக (ஜுன் மற்றும் ஜுலை) என்னால் தவணைத் தொகையை (EMI) Equitas Sumall Finance Bank, விருதுநகர்க்கு செலுத்த இயலவில்லை. இதன் காரணங்களால் இந்த வங்கி நிறுவனத்தின் கடன் தொகை வசூலிப்பவரான திரு கண்ணன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக எனது வீட்டுக்கு நேரில் வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டு தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்தால் ரூ. 40,00000 (ரூபாய் நாற்பது இலட்சம்) பெறுமானம் உள்ள வீட்டை ரூ. 10,00000 (ரூபாய் பத்து இலட்சத்துக்கு மட்டும்) ஏலம் விட்டு எங்கள் நிறுவனத்தின் கடனை பைசல் செய்து கொள்வோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றார். மேலும் இந்த வங்கியின் மேலாளர்களான திரு. மாரிமுத்து (9442778867) என்பவரும், மார்நாடு (9655805497) என்பவரும் கைப்பேசி மூலம் இதே கருத்துக்களை உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த 09.08.2024 ஆம் தேதி திரு கண்ணன் என்பவரும், திரு மாரிமுத்து என்பவரும், திரு மார்நாடு என்பவரும் காலை சுமார் 10.00 மணியளவில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்து எங்கள் வீட்டு வாசல் முன்னால் நின்று கொண்டு சுமார் 02.00 மணி நேரமாக (EMI) தவணைத் தொகை செலுத்தினால்தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என்று என்னையும் எங்கள் குடும்பத்தினரையும் மிகவும் அவதூறு செய்தும், சர்பாசி ஆக்ட் மூலம் குறைந்த தொகைக்கு உங்கள் வீட்டை ஏலம் விட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள் இந்த நிகழ்வுக்கு சாட்சிகள் உள்ளனர்.

3) மேலும் எந்த காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் வீட்டுக்கு சென்று இதுபோல (EMI) தவணைத் தொகையை செலுத்துமாறு கேட்டு மிரட்டுவது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 441 வது பிரிவுப்படி குற்றம் என்றும், தெருவில் பல பொதுமக்கள் முன்னிலையில் அவதூறு செய்வது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 499 பிரிவுப்படி குற்றம் என்றும், குறைந்த தொகைக்கு ஏலம் விட்டு விடுவதாக மிரட்டுவது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 503 வது குற்றம் என்றும் (RBI) Reserve Bank of India Guidelines கடனை வசூலிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை களில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வங்கி நிர்வாகத்திடம் அடமானமாக இருக்கும் தாவா சொத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள முன்வந்த நபர்களை விருதுநகரில் உள்ள வங்கி நிர்வாகத்திடம் அழைத்துச் சென்ற போது இந்த வங்கியின் நிர்வாகியான திரு மாரிமுத்து, மற்றும் மார்நாடு ஆகிய இருவரும் அடமான கடனில் இருக்கும் இந்த சொத்தை விலைக்கு வாங்க முன்வரும் நபர்களிடம் வங்கி நிர்வாகத்தின் சட்டப்படியான நடைமுறையை கூறாமல் இந்த வில்லங்கமான சொத்தை ஏன் நீங்கள் விலைக்கு வாங்க நினைக்கிறீர்கள் என்று கேட்டு எனது சொத்தை விலைக்கு வாங்க வந்த நபரை திருப்பி அனுப்பி உள்ளனர் இந்த வங்கி நிர்வாகத்தின் இந்த அத்துமீறிய செயல்பாடுகளால் நானும், எனது குடும்பத்தினரும், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்.

4) ஆகையால் மேன்மை தாங்கிய வங்கி குறை தீர்ப்பாளரான (Bank ombudsman) தாங்கள் ஏழை மனுதாரரின் இந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு Reserve Bank of India guidelines விதிமுறைகளை மீறி செயல்படுகின்ற Equitas Small Finance Bank Limited, விருதுநகர் நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும், Equitas Small Finance Bank Limited, விருதுநகர் கிளை நிர்வாகத்தினரின் மிரட்டல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்கவும், எனது வீட்டை விற்பனை செய்து, வங்கி கடனை செலுத்துவதற்கான சட்டப்படியான வழிமுறைகளை மேற்படி வங்கி நிறுவனத்திற்கு வழங்கி, ஏழை மனுதாரர் ஆகிய எனது நிம்மதியான ஜீவன வாழ்க்கைக்கு உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கின்றேன்.
மனுதார்

தேதி:
இடம்: அருப்புக்கோட்டை

நகல்கள்:
1) திரு. நிர்வாகி அவர்கள்,
Equitas Small Finance Bank Limited,
4th Floor Phase-2,
Spencer Plaza,
769,Anna Salai,
Chennai -600002
2) திரு. நிர்வாகி அவர்கள்,
திரு. நிர்வாகி அவர்கள்,
Equitas Small Finance Bank Limited,
103/1A, மதுரைரோடு,
தீயணைப்பு நிலையம் அருகில்,
விருதுநகர் -626001,

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தவனை கட்டாதற்கு வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம்.தவனை கட்டாதற்கு வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.Jail IAS officers if they defy court orders: Madras HC | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Jail IAS officers if

Police how to manage complaints from public? what the court orders say | புகார்களை காவல்துறை எப்படி கையாள வேண்டும்? பல தீர்ப்புகள் சொல்வதென்ன?Police how to manage complaints from public? what the court orders say | புகார்களை காவல்துறை எப்படி கையாள வேண்டும்? பல தீர்ப்புகள் சொல்வதென்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 இந்திய பிரஜையாக உள்ள ஒவ்வொருவருக்கும் காவல் நிலைய புலன் விசாரணை நேர்மையானதாக இருக்கச் செய்ய அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது என

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)