நான் போட்டியிட, எனக்கு தேவைப்படும் தகுதிகள்.
- உறுபினராக போட்டியிட 21 வயதை எட்டியிருக்க வேண்டும்.
- தலைவராக போட்டியிட 21 வயதை எட்டி இடுக்க வேண்டும்.
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- போட்டியிடும் எல்லைபரப்பில், ஓட்டுரிமை உள்ளவராக இருக்க வேண்டும்.
- குற்ற செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.
- அப்படி தண்டிக்க பட்டுருந்தால், 5 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.
- மனநலம் சரி இல்லாதவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
- கண் பார்வையற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது.
- காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட முடியாது.
- ஊமையானவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
- மத்திய, மாநில, அல்லது உள்ளாட்சி களில் அரசு ஊழியராக இருக்க கூடாது.
- பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. யாக இருத்தல் கூடாது.
காரைக்கால் உள்ளாட்சியில் மாற்றப்பட வேண்டியவை.
- ரோடுகள், சாக்கடைகள் குப்பை எடுத்தல் போன்ற பணிகளை, வெளியாட்களுக்கு ஒப்பந்தம் விடாமல், உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வாய்ப்பை கூட்டும் பொருட்டு, நகராட்சி / கொம்யூன் நிர்வாகமே நேரடியாக செய்யும்.
- பயன் படுத்தப்படாமல் கிடக்கும் ப்ளாட்டுகள், விளை நிலங்கள் போன்றவைகளை, குறைந்த தொகை குத்தகைக்கு உள்ளாட்சி அமைப்பு சார்பாக எடுத்து, அதின் தகுதிக்கேற்ற விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். அதில் பல ஆயிரம் நபர்களுக்கு வேலைகள் வழங்கப்படும்.
- உள்ளாட்சி துறை ஊழியர்களை கண்காணிக்க, உள்ளாட்சி அமைப்பு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஏற்படுத்தி, அதன் மூலமாகவும் வேலைவாய்ப்பு கூட்டப்படும்.
- வாரத்தில் அரை நாள், மக்களின் யோசனை கேட்பு நேரமாக அறிவிக்கப்படும். சிறந்த யோசனைகளுக்கு பரிசளிப்புடன் அந்த யோசனை நடைமுறை படுத்தப்படும்.
- வாரத்தில் அரை நாள் மக்களின் குறைகள் கேட்பு நேரமாக அறிவிக்கப்படும். குறைகளுக்கு தக்க வாறு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
- வீடு இல்லாதவர்களுக்கு மத்திய மாநில அரசு உதவி திட்டங்கள் மூலம், வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அதற்கு இடைப்பட்ட காலத்திற்கு இலவச குடியிருப்பு பகுதி ஏற்பாடு செய்து குடியமர்த்தப்படும்.
- கடந்த 4 வருடங்களாக நகராட்சிக்கு போதுமான வருமானத்தை ஏற்பாடு செய்யத்தெரியாமல், வீட்டு வரிகளை சுமார் 1000 சதவீதம் உயர்த்தியது. இப்படி ஒரேடியாக மக்களை சிரமத்திற்குள்ளாக்கியது சட்டத்திற்கு புறம்பானது, ஆனால் அதை யாரும் நீதி மன்றம் மூலம் அணுகவில்லை. எனவே வீட்டு வரி குறைக்கப்படும்.
தேர்தல் செலவுகள் உச்ச வரம்பு:
- ஊராட்சி மன்ற (கிராம பஞ்சாயத்து) உறுப்பினருக்கான செலவு ரூ: 25,000
- ஊராட்சி மன்ற (கிராம பஞ்சாயத்து) தலைவருக்கான செலவு ரூ: 2,50,000
- கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினருக்கான செலவு ரூ: 3,20,000
- நகரமன்ற உறுப்பினருக்கான செலவு ரூ: 3,20,000
- நகராச்சி தலைவருக்கான செலவு
- * புதுச்சேரி ரூ: 30,00,000
- * உழவர்கரை ரூ: 35,00,000
- * காரைக்கால் ரூ: 14,00,000
- * மாஹே ரூ: 10,00,000
- * ஏனாம் ரூ: 10,00,000
செய்யவிருக்கும் சாதனைகள்:
- இந்த தேர்தலை நான் ஒத்த ரூபாய் செலவு கூட செய்யாமல் சந்திக்க இருக்கிறேன்.
- நோட்டீஸ் கொடுத்தல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிபெருக்கி விளம்பரம், வீட்டுக்கு வீடு கூப்பாடு, காலில் விழுதல், கையெடுத்து கும்பிடு அனைத்தும் தவிர்க்கப்படும்.
குறிப்பு:
- 68-88 வேட்பு மனு தாக்கல் விண்ணப்பம்.
- 120 சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியினால், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் விண்ணப்பம்.
- 140-142 தர்தல் செலவுகளை சமர்பித்தல்.
- 150 மற்ற வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தல்.
- 154 தேர்தல் முகவரை பணியமர்த்தும் படிவம்.
- 195 துண்டுசீட்டு சுவரொட்டி அனுமதி படிவம்.
- 263 வாக்கு எண்ணிக்கை முகவர் படிவம்.