GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் What law says | சட்டம் சொல்வதென்ன?

What law says | சட்டம் சொல்வதென்ன?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட, 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4).

2, நீதிபதி தவறு செய்தால், 7 வருடம் சிறை. IPC-217.

3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து, அப்பீல் செய்யலாம். CRPC 404.

4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166.

5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும், இந்தியக் குடிமகன் எவரும், தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6, சட்டம் படித்த பாமரன் எவரும், வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2).

7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும், ஆவணம் மற்றும் சான்றிதழ், தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும், (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43.

10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு, நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும், கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து, யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும், செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு. சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற, செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக R I Office-லும் V A O ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால், படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும். மற்றப்படி அன்று Article 21(14).

16, புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8).

17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும், அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல், 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே, ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267.

20, அடுத்தவருடைய அசையும் சொத்தை, பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403.

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல், மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96.

23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295.

24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295.

25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419.

26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

    27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484.

    28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது, மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494.

    29, முந்தைய திருமணம் மறைத்தல், 10 வருடம் சிறை. IPC-495.

    30, IPC-499 ல், 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி, யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட.

    இதில் IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
    CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

    குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Related Post

    Police not to interference cases | காவல் துறை தலையிடக்கூடாத வழக்குகள்.Police not to interference cases | காவல் துறை தலையிடக்கூடாத வழக்குகள்.

    ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

    Writ petitions means ? நீதிப் பேராணை என்றால் என்ன?Writ petitions means ? நீதிப் பேராணை என்றால் என்ன?

    ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 34 நீதிப் பேராணை என்றால் என்ன?இந்திய அரசியலமைப்பிலுள்ள, நீதிப் பேராணைகளின் வகைகள் எத்தனை? 1976 ஆம் ஆண்டு, 42 வது அரசமைப்பு சட்டத்

    நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) சம்மந்தமான முழு விபரம்.

    ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 நில குத்தகைநில குத்தகை (LAND LEASE) தனியாருக்கு சொந்தமில்லாத அரசு வசமுள்ள நிலங்கள், அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், புறம்போக்கு நிலங்கள்

    வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)