GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் மாவட்ட ஆட்சியர் , வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களுடைய முக்கிய பணிகளை காண்போம்

மாவட்ட ஆட்சியர் , வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களுடைய முக்கிய பணிகளை காண்போம்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
  1. மாவட்ட ஆட்சித் தலைவர் :-

இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் படி “ஊராட்சிகளின் ஆய்வாளராக” இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியரின் பொறுப்புகளும் கடமைகளும் பின்வருமாறு :-

ஒரு மாவட்டத்தின் ஆட்சியரே அந்த மாவட்டத்தின் “ஊராட்சிகளின் ஆய்வாளர்”ஆக இருக்கிறார்.

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளான
1.கிராம ஊராட்சி
2.ஒன்றிய ஊராட்சி
3.மாவட்ட ஊராட்சி ஆகியவை தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளை ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

1.மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் உறுதிப்படுத்துதல் அதற்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல்.

2.மக்களுக்கு கிராமசபை கூட்டங்கள்கான அறிவிப்புகள் உரிய காலத்தில் கொடுக்கப்படுவதையும் கிராம சபையில் மக்கள் இயற்றிய தீர்மானங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் கண்காணித்தல் மேலும் கிராம சபை கூட்டத்திற்கான சட்ட விதிமுறைகள் அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்துதல்.

3.ஒரு நிதியாண்டில் ஊராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து பணிகளையும் விவரிக்கும் அறிக்கையான “நிர்வாக அறிக்கைகள்”ஆண்டுதோறும் முறையாக சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்தல்.

4.வரும் நிதியாண்டிற்க்கான நிதிநிலை அறிக்கைகளை கிராம ஊராட்சி உட்பட மூன்று அடுக்கு ஊராட்சிகள் அனைத்தும் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்துதல்.

5.ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் தங்கள் பகுதியில் வளர்ச்சிக்காக திட்டமிடும்”வளர்ச்சி திட்டங்கள்” உரிய காலத்தில் தயாரிக்கப்படுவதையும் அத்திட்ட பணிகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.

6.மாதாந்திர மன்ற கூட்டங்கள் தொடர்ந்து முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல்.

7.ஊராட்சி நிர்வாக பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்ட பணிகள் ஆகியவை முறையாக நடைபெறுகின்றன என மக்களே நேரடியாக ஆய்வு செய்யும் முறையான “சமூகத்தணிக்கை”ஊராட்சி மூலம் முறையாக நடைபெறுகின்றனவா என கண்காணித்தல்.

8.ஊராட்சி நிர்வாக பணிகளை அரசு ஆய்வு செய்யும் போது அதாவது தணிக்கை செய்யும் போது கண்டுபிடிக்கப்படும்
பணி குறைபாடுகள்,தணிக்கைத் தடைகளாக பதிவு செய்யப்படும் தடைகளை உரிய காலத்தில் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.

9.ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு துறைகளான கிராம நிர்வாக அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் நூலகங்கள்,கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடை ஆகியவை இணைந்து பணியாற்றுவது உறுதிப்படுத்துதல்.

10.ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தல்.

  1. வட்டாட்சியர் :-

தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன.

இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இந்த வருவாய் வட்டத்தின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் இருக்கிறார். வட்டாட்சியர்களை தாசில்தார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

வட்டாட்சியர் பணிகள் :-

  1. தமிழ்நாடு அரசின் வருவாய் துறை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் நிர்ணயம் செய்துள்ளது. அவைகள் :-
  2. மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  3. கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
  4. வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
  5. வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
    மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
  6. துணை வட்டாட்சியர் :-

ஒரு மாவட்டத்தின் வருவாய் வட்டத்தின் துணை வருவாய் வட்டங்களை நிர்வகிக்க மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியரின் கீழ் செயல்படுபவர். மண்டல துணை வட்டாட்சியரின் கீழ் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும் :-

  1. வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.
  2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.
  3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.
  4. “ஏ” மற்றும் “பி” மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.
  5. அரசு புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.
  6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.
    பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
    பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
  7. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
  8. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
  9. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
  10. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
  11. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.
  12. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.
  13. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
  14. அரசு நில ஆக்கிரமிப்புகளை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.
  15. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள் மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
  16. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.
    வருவாய்த் துறை சான்றிதழ்களின் நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.
  17. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).
  18. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.
  19. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.
    மழைமானிகள் தணிக்கையிடுதல்.
    நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.
  20. அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.
  21. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
  22. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
  23. வருவாய் ஆய்வாளர் :-

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்யும் அதிகாரியாக வருவாய் ஆய்வாளர் இருக்கிறார்.

வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும் :-

  1. பயிராய்வு
  2. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
  3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
  4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
  5. “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.
  6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
  7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.
  8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.
  9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.
  10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
    பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
  11. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
  12. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
  13. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
  14. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
  15. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.
  16. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.
  17. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.
  18. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
  19. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.
  20. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.
  21. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
  22. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.
  23. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
  24. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.
  25. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்.

பிற பணிகள் :-

  1. பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்
    நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.
  2. கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.
  3. வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.
    சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.
  4. தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.
  5. மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
  6. கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.
  7. கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
  8. பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.
  9. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
  10. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.
  11. கிராம நிர்வாக அலுவலர் :-

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது.

இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.

மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது.

இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.

இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார்.

இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் :-

  1. கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்
    சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது.
  2. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.
  3. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது.
  4. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது.
  5. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.
  6. காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்.
  7. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
  8. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
  9. அரசுக் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
  10. புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல்.
  11. முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது.
  12. முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல்.
  13. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
  14. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல்.
  15. கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல்.
  16. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
  17. தேர்தல் பணிகள் மேற்கொள்வது.
    கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரித்து வட்ட அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புதல்.
  18. பொதுச் சுகாதாரம் பராமரித்தல்.
    நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  19. கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல்.
  20. வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் உரிய அறிக்கை அளித்தல்.
  21. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும், சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல்.
  22. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  23. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
  24. மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த உரிய பணிகள் செய்தல்.
  25. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது.
  26. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல்.
  27. பதிவு மாற்றம் [Transfer Registry] அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல்.
  28. நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
  29. கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
  30. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
  31. பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது.
  32. ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் கிராமத்தின் வருவாய் நிலவரி கேட்புத் தொகையை வசூல் செய்து வருவாய் தீர்வாயத்தில் இறுதித் தணிக்கையை முடிப்பது மிக மிக முக்கிய பணியாகும். என்றென்றும் மக்கள் பணியில்
    இரா. கணேசன்
    பாதிக்கப் பட்டோர் கழகம்
    அருப்புக்கோட்டை
    9443920595
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

supreme-court-order

Jail | for officers who disobey court order! Chennai High Court in action | கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு ஜெயில் தான்! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்Jail | for officers who disobey court order! Chennai High Court in action | கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு ஜெயில் தான்! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் தொடர்பாகச் சென்னை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களைக்

CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு.CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 86 வணக்கம் நண்பர்களே…! CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு. அரசு அலுவலகங்களின் CCTV

தொழிலாளர்களுக்கான உரிமைகளும் சட்டங்களும்.தொழிலாளர்களுக்கான உரிமைகளும் சட்டங்களும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 “தொழிலாளர்களுக்கான உரிமைகள்”(May Day – International Workers’ Day சிறப்பாக) தொழிலாளர்களுக்கு சட்டப்படி உள்ள முக்கிய உரிமைகள்: 🟢 நியாயமான ஊதியம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)