தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 30 தினங்களில் தகவல் தர வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பொது தகவல் அலுவலருக்கும் உள்ளது. 30 தினங்களுக்குள் தகவலை வழங்க தவறும் போது அவர் கடமையைச் செய்ய தவறியுள்ளார் எனக் கருதலாம்! அதன் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு அரசு குடிமைப்பணி விதிகள் 1953 இன் 17(b) பிரிவுப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கேட்கும் புதிய முயற்சியிலான விண்ணப்பம் மாடல்
மனுதாரர்:
…….
……..
……..
பெறுநர்:
1) திரு உள்துறை செயலர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,
சென்னை – 600009
2) திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
……….
………. மாவட்டம்.
எதிர்மனுதார்:
பொது தகவல் அலுவலர்,
……..
………
ஐயா/அம்மையீர்,
பொருள்:
தமிழ்நாடு அரசு குடிமை பணி விதிகள் 17 (b) இன் படி கடமையை செய்ய தவறிய பொது தகவல் அலுவலர் மீது சட்டப்படியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் மனு.
பார்வை:
1) ………
……….
2)……….
…………..
1) மனுதாரர் ஆகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 5 வது பிரிவுப்படி நான் ஒரு இந்திய பிரஜையாவேன். மேலும் இந்திய திருநாட்டை முன்னேற்றி செல்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 51(அ) பிரிவுப்படி இந்திய அரசுத் துறைக்கும் இந்திய நீதித்துறைக்கும் உதவும் முகமாக கூட்டாகவும் தனிப்பட்ட முறையிலும் சமூக சேவை ஆற்றி வருகிறேன்.
2) தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 ( 1 ) -ன் கீழ் கீழ்கண்ட தகவல்களை கோரி , எதிர் மனுதாரரிடம்…………………. தேதி அன்று மனு செய்ததில் , சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 30 நாட்கள் நிறைவுற்றும் , இன்று வரை கோரிய தகவல்கள் பெறப்படவில்லை .
3) மேலும் சட்டத்தின் பிரிவு 4 ( 1 ) ( b ) – ல் கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சட்டத்தின் பிரிவு 4 ( 2 ) மற்றும் 4 ( 3 ) -ன்படி பொது தகவல் அலுவலரின் அலுவலகமானது நான் பார்வையில் கோரியிருந்த தகவல்களை தானகவே முன் வந்து இணையதளத்திலும் , அவர்களது அலுவலக அறிவிப்பு பலகையிலும், பொதுமக்கள் அறியும்படி வெளியிடுதல் வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வலியுறுத்துகின்றது. ஆனால் இன்றுவரை எதிர்மனுதாரர் அலுவலகமானது நான் கோரிய தகவல்களை பொது மக்களின் பார்வைக்காக வெளியிடாவிட்டாலும் , குறைந்தபட்சம் அந்த தகவல்களை கைவசம் தயாராக வைத்திருந்து பொதுமக்கள் கேட்கும்போது உடனடியாக வழங்கவேண்டியது அவர்களின் கடமையாகும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.
4) நான் கோரிய தகவல்கள் அனைத்தும் எதிர்மனுதாரரின் அலுவலகத்தில் பொருள்வகை பொருண்மைகளாக (material facts) ஆக உள்ள நிலையில் , அவை சட்டத்தின் பிரிவு 2F ன்படி தகவல் எனும் பதத்தில் வரும் என்பதால் எதிர்மனுதாரர் நான் கோரிய தகவலை எந்த வகையிலும் மறுக்க முடியாது .
5) நான் கோரிய தகவல்கள் அனைத்தும் எதிர் மனுதாரரிடம் கைவசம் இருந்தும் , அவர் கெட்ட எண்ணத்துடன் ( malafide intention) 30 தினங்கள் கடந்தும் தகவல் வழங்காமல் இருந்து வருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் விதிகளின்படி தகவல் வழங்க மறுப்பதாகவே மனுதாரர் ஆகிய என்னால் கருதப்படுகிறது.
6) மேலும் இந்த நிகழ்வானது செய்ய வேண்டிய செயலை செய்ய மறுத்தலும் (இ. த. ச.1860 இன் 2வது பிரிவுப்படி குற்றம்), செய்யக்கூடாததை செய்தலும் (இ. த. ச.1860 இன் 3 வது பிரிவுப்படி குற்றம்), கடமையைச் செய்ய மறுத்தலும் (இ. த. ச.1860 இன் 166-A பிரிவுப்படி குற்றம்) ஆகிய குற்றச் செயலை பகிரங்கமாக செய்து வருகிறார்.
7) ஆகையால் மேற்காணும் எதிர் மனுதாரர் மீது தமிழ்நாடு அரசு குடிமைப்பணி விதிகள் 1953 இன் 17(b) பிரிவில் வகுத்துரைக்கப்பட்டவாறு துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும், மதிப்பு மிகுந்த தாங்கள் உசிதமென கருதும் இதர இன்னும் பிற நடவடிக்கைகளை எடுத்து மனுதாரராகிய எனது நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.
மனுதார்.