GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Illegal arrest, what to do next, சட்ட விரோத கைதுக்கு அடுத்து என்ன செய்யபெண்டும்.

Illegal arrest, what to do next, சட்ட விரோத கைதுக்கு அடுத்து என்ன செய்யபெண்டும்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல் துறையினர், சட்ட விரோதமாக எவர் ஒருவரையும் கைது செய்தால், கைது செய்த விபரங்களை, கைது செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கு தெரிவிக்காமல், கைது செய்யப் பட்டவரின் விருப்பத்தின்படி, அவரை காவலர்கள் விசாரணை செய்யும் போது, அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர் எவரையேனும் அனுமதிக்காமல் இருந்தால், அல்லது கைது செய்யப்பட்டவரை கண்ணிலேயே காட்டாமல் மறைத்தால், இதுபோல மனு செய்து கைது செய்யப்பட்டவரை பாதுகாத்து கொள்ள முடியும்.

ஒப்புதலுடன் பதிவஞ்சல்.

மனுதார்: (விபரங்கள்)
………………………………….
…………………………………

பெறுநர்கள்:
1) திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
………………………………….
…………………………………

2) காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்,
………………………………….
…………………………………

3) திரு.காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்,
………………………………….
…………………………………
4) திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
காவல் நிலையம்,
…………………………………
…………………………………

1) மனுதாராகிய நான் மேலே காணும் முகவரியில் நிரந்தரமாக/ வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். மனுதாராகிய எனது தந்தை / தாய் /சகோதரன்/ சகோதரி/மாமன் /அத்தை / மைத்துனர் / மைத்துனி திரு/திருமதி/………………………………………… த/பெ/ க/பெ……………………………… என்பவரை கடந்த…………………………..தேதி அன்று காலை/ பகல்/இரவு………………… சுமாராக மணியளவில் எங்களின் இல்லத்தில்/ நகர/ கிராம / பொது வெளியில் காவல் நிலைய காவலர்கள்/ தலைமை காவலர்/ காவல் சார்பு ஆய்வாளர் / காவல் ஆய்வாளர் ஆகியோரால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றியும், என்ன காரணத்திற்காக கைது செய்யப் படுகிறார் என்பதை தெரிவிக்கமலும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டவர் ……………………….. காவல் நிலையத்திற்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். …………………………………………. காவல் நிலையத்தில் மேற்படி கைது செய்யப்பட்ட நபரை நேரில் சந்திக்க காவல் துறையினரால் அனுமதிக்கப் படவில்லை. மேலும் இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கு எண். W. P. Crl. No. 539/1986 டி. கே. பாசு Vs மேற்கு வங்க அரசு மற்றும் W. P. Crl. No. 592/1987/1997 (1) SCC 4 அசோக் ஜோஹ்ரி Vs உத்திரப்பிரதேச மாநில அரசு என்ற வழக்கில் இந்திய காவல் நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய 11 கட்டளைகளை…………………………….. சீர்மிகு காவல் நிலையம் கடை பிடிக்காமல் தன்னிச்சையாக சட்ட விரோதமாக எந்தவொரு அழைப்பாணையும் வழங்காமல் கைது செய்து சட்ட விரோத காவலில் அடைத்துள்ளனர். இது வரை கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்படவில்லை. அல்லது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது இந்திய இறையான்மைக்கும் நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையையும் கேலி கூத்தாக்கும் செயலாக மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது. ஆதலால் இந்த கடிதம் கண்டவுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் உயர்நீதிமன்றத்தில்,ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு தாக்கல் செய்ய இதுவே ஆவணமாகிவிடும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள

தேதி:
இடம்:

இம்மனுவையே பிரமாணமாக இதில் என்னால்………………………………… தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப் படுகிறது.

நீதியின் நோக்கம் நிறைவேற இதன் நகல் பணிந்தனுப்ப படுகிறது.
1) திரு. தலைமை நீதிபதி அவர்கள்,
உயர் நீதிமன்றம்,
சென்னை -600104.
2) திரு.சார்பு செயலாளர் (உள்துறை),
தமிழ்நாடு அரசு தலைமை அலுவலகம்,
சென்னை -600009.
3) திரு. குற்றவியல் நடுவர் அவர்கள்,
குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
…………………………………
…………………………………

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

RTI simple explanation | தகவல் பெறும் உரிமைச் சட்டம் சுலபமான விளக்கம்RTI simple explanation | தகவல் பெறும் உரிமைச் சட்டம் சுலபமான விளக்கம்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 தகவல் பெறும் உரிமைச் சட்டம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு

காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ?காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 பாதிக்கப்பட்டோர் கழகம் தமிழ்நாடு **காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ? **தமிழ்நாடு காவல்துறை மக்கள் சாசனம் 1.காவல்

சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும்.சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 சிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)