GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் False Witness | பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

False Witness | பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

பொய் சாட்சி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எவ்வளவு திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. “சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும்.

நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொய் சாட்சி என்றால் என்ன?

சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிரமாணத்திற்கோ கட்டுப்பட்ட ஒருவர், எந்தவொரு பொருள் பற்றியாவது அறிவிப்பு கொடுக்க வேண்டியிருக்கும் போது, தான் சொல்வது உண்மைக்கு புறம்பானது என்பதோ அல்லது அது பொய் என்பதோ தெரிந்தும், அவ்வாறு அவர் சொல்வது பொய் சாட்சி ஆகும்.

அப்படி அவர் பொய் சாட்சி சொல்வது வாய் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வேறு விதத்திலோ இருக்கலாம்.

தெரிந்ததை “தெரியாது ” என்று கூறுவதும், தெரியாததை “தெரியும் ” என்று கூறுவதும் பொய் சாட்சி தான்.

உதாரணமாக :

  1. சிவன் என்பவர் சங்கருக்கு ரூ. 1000/- கொடுக்க வேண்டும். முருகனுக்கு அந்த விபரம் ஏதும் தெரியாது. இருந்தாலும் முருகன் நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு, சிவன் பணம் கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றால் அது பொய் சாட்சி ஆகும்.
  2. நீதிமன்றத்தில் உண்மை பேசுவதாக பிரமாணம் எடுத்துக்கொண்ட முருகன் என்பவர், ஒரு ஆவணத்தில் உள்ள கையெழுத்து சிவனுடையது அல்ல என்று தெரிந்தும், அது சிவனுடையது என்று கூறினால் அது பொய் சாட்சி ஆகும்.

பிரிவு – 192 : புனையப்படும் பொய் சாட்சி :

நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யப்படக்கூடிய பதிவேடு அல்லது ஆவணத்தில் உண்மைக்கு மாறான செய்தியை பதிவு செய்து வைப்பதும், ஒரு பொய்யான சந்தர்ப்பத்தை உண்மையாக தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும். அந்த பொய்யான தகவலால் ஒரு பொது ஊழியரோ அல்லது நீதிமன்றமோ உண்மைக்கு மாறான ஒரு கருத்தினை கொள்ள நேரிடும். எனவே தான் இக்குற்றம் புனையப்பட்ட சாட்சியினை உருவாக்குவதாக குறிப்பிடுகிறது.

உதாரணமாக :

  1. நிரபராதியான ஒருவர் மீது திருட்டு குற்றம் சாட்டும் எண்ணத்துடன் அவரது பை அல்லது பெட்டியில், அவருக்கு தெரியாமலே பிறருடைய நகைகளை வைப்பவர், பொய் சாட்சியினை உருவாக்கியவராவார்.
  2. நீதிமன்றத்தில் சாட்சியமாக காட்டப்படக்கூடிய ஒரு நிறுவனம் அல்லது கடையின் பதிவேடு அல்லது நோட்டு புத்தகத்தில் பொய்யான தவறை பதிவு செய்தல்

பிரிவு – 193 : பொய் சாட்சிக்கு தண்டனை :

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் எந்த நிலையிலாவது ஒருவர் வேண்டுமென்றே பொய் சாட்சி சொன்னாலும், நீதிமன்ற நடவடிக்கையின் எந்த நிலையிலாவது பயன்படுத்தும் வண்ணம் பொய் சாட்சி தயாரித்தாலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

பிரிவு 194 – : மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தான் சொல்லும் சாட்சியினால் ஒருவரை அதிகபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னாலோ அல்லது பொய் சாட்சி தயாரித்தாலோ அந்த நபருக்கு ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனை, அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு – 195 : ஆயுள்தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தாம் கொடுக்கும் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள்தண்டனை அல்லது 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிந்தே ஒருவர் பொய் சாட்சி சொன்னால் அல்லது பொய் சாட்சியை உருவாக்கினால், அவர் எந்த மாதிரியான குற்றத்திற்கு சாட்சியம் அளித்தாரோ, அந்த குற்றத்திற்கு உரிய தண்டனை, பொய் சாட்சி கூறியவருக்கு விதிக்கப்படும்.

என்றென்றும் மக்கள் பணியில்
இரா. கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

SURETY | ஜாமீன் கையெழுத்து போடுபவர்களின் உரிமைகள் கடமைகள் என்ன?SURETY | ஜாமீன் கையெழுத்து போடுபவர்களின் உரிமைகள் கடமைகள் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 ஜாமீன் (SURETY) கையெழுத்து போடுபவர்கள் தங்களின் உரிமைகள் என்ன? கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய ஒப்பந்தச்

சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948 ( UNIVERSAL DECLRATION OF HUMAN RIGHTS-1948) 10.12.1948 உருவாக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வ தேசிய அளவில் சிந்தனை செய்ததின் விளைவே சர்வ தேசிய மனித உரிமை பிரகடணம்- 1948

காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு FIR போடாமல் காலம் தாழ்த்தி வந்தால் என்ன செய்யவேண்டிம்.காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு FIR போடாமல் காலம் தாழ்த்தி வந்தால் என்ன செய்யவேண்டிம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 18 காவல் நிலையத்தில் புகார் வழங்கி காவல் துறையினர் 7 தினங்களாக FIR பதிவு செய்யாமல் எதிரியிடம் புகார் மனு பெற்று கொண்டு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)