GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி


அரசாணை எண்-39 பள்ளிக்கல்வி(இ2 )துறை அரசாணை எண்-39 அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

!

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

Views: 9 Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்கள் நிகழுமேயானால்

Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.

Views: 7 வணக்கம் நண்பர்களே…! தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய தடையேதும் இல்லை

காவல் மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுயமாக பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.காவல் மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுயமாக பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.

Views: 11 ‘காவல் துஷ்பிரயோக மரணங்கள் அச்சுறுத்தல்’: காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இன்மை குறித்து சுய முனைப்பு மனுவை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது காவலில் இருந்து விடுபட்ட நபர்களின் மரணங்கள், காவல் துறைப்பற்றி கவலைக்கிடமான கேள்விகளை எழுப்புகின்றன. இப்போது, உச்ச