GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது?

ஏன் சில நிலம் வைத்துள்ளவர்கள் இன்று வரை அலைகிறார்கள்?

சிலர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாலும், தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் விண்ணப்பித்திருந்தாலும், சில நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாத நிலை இருக்கிறது.

பட்டா வாங்குவதற்கு பத்திரம் மட்டும் போதாது என்பதுடன். எந்த வில்லங்கமும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தாசில்தார்கள் பத்திரம் தருகிறார்கள். எந்த நிலத்திற்கு எல்லாம் இனி பட்டா கிடைக்காது என்பதை பாப்போம்.

நிலம் வாங்குவோர் எந்த வகையான நிலம் என்பது தெரியாமல் வாங்கவே கூடாது. அதனை அறிய வேண்டும் என்றால் வணக்கம். V. A. O. அலுவலத்திற்கு போக வேண்டும்.

அங்குதான் அது எந்த வகையான நிலம் என்பதை அறிய முடியும். அனாதீனம் உள்பட பல்வேறு வகையான நிலங்களுக்கு பட்டா கிடைக்காது.

அனாதீனம் நிலம் என்பது தமிழகத்தில் 1970களில் நகர்ப்புறநங்களில், ஏராளமான நிலத்தை சிலரே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதனால் 1978ம் ஆண்டு, நில உச்சவரம்பு சட்டத்தினை கொண்டு வந்த அரசு, அதன் கீழ் உபரியாக 5883 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

ஆனால் இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.

இதனால் பழைய உரிமையாளர்கள், இந்நிலங்களை 1999க்கு பிறகு சட்டம் ரத்தானதால் விற்பனை செய்துவிட்டனர்.

இதை வாங்கிய மக்கள், அதில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலங்களில் விறபனை தொடர்பான பத்திரங்கள் பதிவானாலும் பட்டா மாறுதல் செய்ய முடிவது இல்லை.

இதனால் இந்நிலங்களை பயன்படுத்தி வங்கிக்கடன், கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதேநேரம் அனாதீனம் நிலத்திற்கு பட்டா வாங்க சில வழிவகை உள்ளது. அதேநேரம் கிராமங்களில் விஏஓ அலுவலகம் சென்று நிலத்தின் வகையை அறிய முடிகிறது.

ஆனால் சென்னை போன்ற நகரங்களில் எப்படி அறியலாம். அதற்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலமா என்பதை அறிய சர்வே நம்பரை கொண்டு சென்று சோதிக்க வேண்டும்.

அப்படி செக் செய்யாமல் வாங்கியவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

land ceiling act அலுவலகம் சென்று சோதித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

அதேபோல் அரசு, அனாதீனம். வண்டிப்பாதை, நீர் நிலை, நீர் வழிப்பாதை, வாய்க்கால் , கோயில் நிலங்கள், அறநிலைத்துறை நிலங்கள் போன்ற நிலங்களுக்கு முன்பு பட்டா வழங்கி இருந்தது.

அப்படி பட்டா வாங்கியவர்களின் நிலங்களின் மதிப்பு இப்போது பூஜியம் ஆக்கி வைத்துள்ளது.

எனவே பட்டா இருக்கிறது என்று நினைத்தும் இந்த இடங்களை வாங்கிவிட வேண்டாம்.

பட்டாவே இருந்தாலும் நிலம் என்ன வகை என்பதையும்

இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பை பூஜியமாக மதிப்பிட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்த பின்னர் நிலத்தை அல்லது வீட்டை வாங்குங்கள்.

தெரியாமல் வாங்கிவிட்டு அவதிப்பட வேண்டாம். அனாதீன நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா என்றால், 1987ல் தான் கடைசியாக பட்டா தந்ததாக கூறுகிறார்கள்.

அதன்பிறகு அரசு தரவில்லை. அதேநேரம் சில இடங்களில் தந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் பகுதியில் அனாதீன நிலத்திற்கு யாருக்காவது பட்டா கிடைத்துள்ளது என்று தெரிந்தால், அதை வைத்து நீதிமன்றத்தை நாடி, பட்டா பெற முயற்சிக்கலாம்.
கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் அனாதீனம் உள்பட சில நிலங்களை வாங்காமல் இருப்பதே சிக்கல் இல்லாமல் இருக்க ஒரே

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?Procedure of adjourn in Courts | நீதிமன்ற வாய்தா நடைமுறைகள் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 வாய்தா நடைமுறைகள் என்ன? ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா

இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள்இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 இந்தியாவில் நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பொதுவான சட்டங்கள் மற்றும்

துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை சகித்துக்கொள்ள சட்டம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது என்று ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 35 கட்டாக்: துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு காரணமாக மாறிய திருமணத்தை ஒருவர் சகித்துக்கொள்ள சட்டம் கட்டாயப்படுத்த முடியாது என்று ஒடிசா உயர் நீதிமன்றம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)