GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் மோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மோசடி பத்திர பதிவு ரத்து அதிகார அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

மோசடியாக பதியப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், முறைகேடாக பதியப்படும் பத்திர பதிவுகளை, அந்தந்த மாவட்ட பதிவாளர்களே நேரடியாக ரத்து செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம், கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, புதுக்கோட்டை வளர்மதி, திருச்செங்கோடு நித்யா பழனிச்சாமி, விழுப்புரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதில் அவர்கள் கூறியதாவது, “தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு பத்திர பதிவு சட்டத்தில், புதிதாக கொண்டு வந்துள்ள பிரிவு 77-ஏ, 77-பி ஆகிய பிரிவுகளின்கீழ், போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம் என்றும், அதுதொடர்பான மேல்முறையீட்டை, பத்திர பதிவு துறை தலைவர் விசாரிக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கும் இது வழிவகுத்துள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் என்ன அவ்வழிக்கில் கோரியிருந்தனர். மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள்,”போலி பத்திரம் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அந்த பத்திரம் செல்லாது என அறிவிக்கும் தமிழக அரசு அரசாணையை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். தமிழக அரசு கொண்டு வந்த 77ஏ, 77 பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது. அந்த பிரிவுகளை ரத்து செய்கிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டனர்

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

stop-corruption

Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.Anti-Corruption and Vigilance TN-PY Addresses | புதுவை மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முகவரிகள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள். Puducherry Vigilance & Anticorruption Unit. Address: 271, Ezhai Mariamman Temple,

Accused arrest is not mandatory for less than  7 (seven) years imprisonment said SUPREME COURT.  ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு, குற்றவாளியை, கைது செய்யத் தேவையில்லை, உச்ச நீதிமன்றம்.Accused arrest is not mandatory for less than  7 (seven) years imprisonment said SUPREME COURT.  ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு, குற்றவாளியை, கைது செய்யத் தேவையில்லை, உச்ச நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 102 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்?கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 15.08.2024 – ஆகஸ்டு 15. கிராமசப கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன செய்ய வேண்டும்? என்ன சொல்லுவார்கள் என்றால்…??? குறிப்பு: இந்த

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.