GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Contempt of Court Act, 1971 / நீதிமன்ற அவமதிப்பு சட்டம்.

Contempt of Court Act, 1971 / நீதிமன்ற அவமதிப்பு சட்டம்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் :-

Contempt of Court Act, 1971:-

ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ, அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ, அல்லது அவற்றை மதிக்காமல், விசாரணை நடக்கும் போது குறுக்கீடு செய்து சாட்சிகளுக்கோ, இதர தொடர்புடைய நபர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகவோ, அல்லது அவர்மீது தவறான எண்ணம் வரும் வகையில், நடந்து கொண்டால் அது அவமதிப்பு எனப்படும்.

The Contempt of Court Act, 1971 ல் தான், நீதிமன்ற அவமதிப்பு பற்றிய பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு என்பது உரிமையியல் அவமதிப்பு, மற்றும் குற்றவியல் அவமதிப்பு என இரண்டு வகையாக உள்ளது.

உரிமையியல் அவமதிப்பு என்ற Civil Contempt என்பது, ஒரு நீதிமன்ற தீர்ப்பையோ (judgement), தீர்ப்பாணையையோ (Decree), நீதிமன்ற உத்தரவையோ (Orders), நீதிப்பேராணையையோ (Writ Petition), அல்லது நீதிமன்றத்தின் இதர ஆணைகளையோ, தெரிந்தே வேண்டுமென்றே கீழ்படியாமல் நடந்து கொள்வது, அல்லது நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றாமல், வேண்டுமென்றே மீறுவது ஆகியவை உரிமையியல் அவமதிப்பு என பிரிவு 2(b) கூறுகிறது.

குற்றவியல் அவமதிப்பு என்ற Criminal Contempt என்பது, வாய் வார்த்தைகள், அல்லது சைகைகள், அல்லது எழுத்துக்கள் மூலம், ஒரு நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைப்பது போலவோ, அல்லது அவமதிப்பது போலவோ, எந்தவொரு செயலையும் செய்வது, அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது, அல்லது அந்த நடவடிக்கைகள் பற்றி தப்பான எண்ணம் வரும் வகையில் செயல்படுவது, அல்லது வேறு ஏதேனும் வழியில் நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது, அல்லது தடை செய்வது ஆகியவை, குற்றவியல் அவமதிப்பு ஆகும் என பிரிவு 2(c) கூறுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள வகையில் வந்தாலும், இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி, எந்தவிதமான தவறான எண்ணமோ, களங்கமோ இல்லாமல் வெளியிடப்படும் அத்தகைய செய்திகள் அவமதிப்பு ஆகாது.

அதேபோல் நீதிமன்ற நடவடிக்கைகளை நேர்மையான முறையில், எந்தவிதமான தவறுகளும் இல்லாமல், அப்படியே வெளியிடுவதும் அவமதிப்பு ஆகாது என பிரிவு 4 கூறுகிறது.

சட்டப்பூர்வ நடவடிக்கை பற்றி எந்தவிதமான தவறான எண்ணமும் இல்லாமல், நேர்மையாக விமர்சிப்பது அவமதிப்பு ஆகாது என பிரிவு 5 கூறுகிறது.

நீதிமன்ற தலைமை அதிகாரியை பற்றிய புகார் குறித்து, நல்லெண்ணத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை அவமதிப்பு ஆகாது, என பிரிவு 6 கூறுகிறது.

குறிப்பிட்ட சில இனங்கள் தவிர, பொதுவாக நீதிபதியின் அறையிலோ, அல்லது வெளியாட்கள் அனுமதிக்கப்படாமல் இரகசியமாக நடந்த, நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடுவது அவமதிப்பு ஆகாது என பிரிவு 7 கூறுகிறது.

உச்சநீதிமன்றத்திற்கும், மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் மட்டுமே, நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.

பிரிவு 12 ன்படி நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு, 6 மாதங்கள் வரை சாதாரண சிறை தண்டனையோ, அல்லது 2000 ரூபாய் வரை அபராதமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.

எப்படி இருந்தாலும், அபராதம் விதிப்பது மட்டுமே உரிமையியல் அவமதிப்பு வழக்குகளில் போதுமானதல்ல, சிறை தண்டனையும் தேவை என்று நீதிமன்றம் கருதினால், அவமதிப்பு செய்த நபருக்கு சாதாரண சிறை தண்டனை விதிப்பதற்கு பதிலாக, உரிமையியல் சிறையில் 6 மாதங்களுக்கு மிகாமல், நீதிமன்றம் கருதும் காலம்வரை சிறை வைக்க உத்தரவிடலாம்.

வழக்கின் தன்மையை பொருத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் குற்றவாளி, நீதிமன்றம் மனநிறைவு அடையும் வகையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அந்த நபரை வழக்கிலிருந்து விடுவிக்கலாம்.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில், 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசர சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 13 ல் புதிதாக (b) என்ற உட்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குற்றம் சாட்டப்பட்டவர், அவரால் செய்யப்பட்ட அவமதிப்பு என்பது, உண்மையின் அடிப்படையில்தான் என்ற தற்காப்பு கோர வழி செய்கிறது. குறிப்பிட்ட செய்தி மக்கள் நலனுக்காக தான் வெளியிடப்பட்டது என்பதிலும், குற்றம் சாட்டப்பட்டவரின் தற்காப்பு கோரிக்கை உண்மையானதுதான் என்பதிலும், நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளலாம்.

எப்படியிருந்தாலும் ஒரு அவமதிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு, நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்யக்கூடிய அளவுக்கு உள்ளது என்று, நீதிமன்றம் மனநிறைவு அடைந்தால் தவிர, எந்த நீதிமன்றமும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்காது.

பிரிவு 16(1) ன்படி, சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஒரு நீதிபதி, மாஜிஸ்திரேட் அல்லது சட்டம், அல்லது நீதிபதி சார்ந்த அலுவலர் ஆகியோரும், சட்டத்தில் உள்ள ஷரத்துகள் படி, மற்றவர்கள் போல் அவர்களது நீதிமன்றத்தின், நீதிமன்றம அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட்டால், சட்டத்தில் உள்ள ஷரத்துகள் அவர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல் பிரிவு 16(2) ன்படி, அவர்களது நீதிமன்றத்திற்கு வந்துள்ள, கீழ் நீதிமன்றத்தின் மேல்முறையீடு வழக்கின் போது, அந்த மேல்முறையீட்டின் நீதிபதியாக அவர்கள் பணி செய்யும் போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பு பற்றிக் கூறும் எந்த வித கருத்துக்களும் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.

பிரிவு 20 ன்படி, நீதிமன்ற அவமதிப்பு நடந்ததாக கூறப்பட்ட நாளிலிருந்து, ஒரு வருடம் முடிந்து விட்டால் எந்தவொரு நீதிமன்றமும், தானாகவோ அல்லது வேறு வகையிலோ, அந்த நீதிமன்ற அவமதிப்பு பற்றிய நடவடிக்கையை எடுக்காது….

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

THE PUDUCHERRY MUNICIPALITIES ACT, 1973 (pdf)THE PUDUCHERRY MUNICIPALITIES ACT, 1973 (pdf)

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 46 THE PUDUCHERRY MUNICIPALITIES ACT, 1973 (pdf)   குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின்

Handbook of civil trial procedure ebook 2020 pdfHandbook of civil trial procedure ebook 2020 pdf

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

INJUNCTIONS (or) STAY ORDER how to get in Civil Courts O 39 R 2A & 4 | செயலுறுத்துக்கட்டளை or தடையானை பெறுவது எப்படி.INJUNCTIONS (or) STAY ORDER how to get in Civil Courts O 39 R 2A & 4 | செயலுறுத்துக்கட்டளை or தடையானை பெறுவது எப்படி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.