கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதை எப்படி பார்ப்பது?
கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அதை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் 159 வருட பழமையான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ ஜனவரி 2018ல் ரத்து செய்தது. ஏன் என அறிய தொடர்ந்து படியுங்கள்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497 என்பது என்ன?
ஒரு ஆண், இன்னொரு ஆணுடைய மனைவியுடன் அவர் (கணவர்) அனுமதி இன்றி உடலுறவு வைத்துக் கொண்டால் ஐந்து ஆண்டு காலம் வரை சிறை தண்டனையும் அபராதமும் அளிக்கப்படும்.
ஏன் அது ரத்து செய்யப்பட்டது?
- திருமண பந்தத்துக்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டால் அதற்கான மொத்த பொறுப்பும் அதில் ஈடுபடும் ஆணிணுடையது மட்டுமே என்று கூறுகிறது. அதாவது, அந்த தகாத உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த வித தண்டனையும் கிடையாது. தகாத உறவை சம்பந்தப்பட்ட பெண்ணே தொடங்கி இருந்தாலும், தண்டனை ஆணுக்கு மட்டும் தான். இது பாலின பாகுபாடு அல்லவா?
- கணவருடைய அனுமதி இன்றி ஈடுபட்டால் மட்டுமே அது சட்டத்துக்கு புறம்பானது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணுடைய ஒப்புதல் தேவையில்லை என்று தானே அர்த்தமாகிறது? இது மனைவியை கணவனுக்கு சொந்தமான பொருள் போலவும், மனைவிக்கு சுய சிந்தனை மற்றும் சுய விருப்பு வெறுப்பு அற்றவராகவும் அர்த்தமாகிறது. இது சரி இல்லை அல்லவா?
எனவே, இந்த சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பு கூறும் சமமாக வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானதாகிறது. தகாத உறவில் ஈடுபடுவதை குடிமையியல் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறுவதற்கு காரணமாக கூறலாமே தவிர குற்றவியலில் அல்ல.