GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கிராம ஊராட்சியின் அதிகாரமும் கடமைகளும்.

கிராம ஊராட்சியின் அதிகாரமும் கடமைகளும்.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கிராம ஊராட்சியின் அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு பதிவு.

29 துறைகளின் அதிகாரங்கள்.

1) வேளாண்மை துறை : வேளாண்மை மற்றும் வேளாண்மை விரிவாக்கம்.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • திட்டத்தின் செயல்பாட்டிற்கு உதவுதல்.
  • விவசாய கிடங்கு அமைக்க ஆலோசனை வழங்குதல்.

2) வருவாய் துறை: நிலசீர்திருத்தம் மற்றும் மண் வளப்பாதுகாப்பு.

  • ஊரக ஏழை மக்களுக்கு உபரி நிலம் வழங்க பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • துறைக்கு உதவி செய்தல்.

3) பொதுப்பணி துறை: சிறுபாசனம் நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு வளர்ச்சி.

  • பணி மேற்கொள்ள கூடிய குளங்களை அடையாளம் காணுதல்.
  • ஊராட்சி ஒன்றிய சிறு பாசனங்கள் பணி மேற்கொள்ள ஆலோசனை வழங்குதல்.

4) கால்நடை துறை: கால் நடை, பால் வளம் மற்றும் கோழி வளர்ப்பு.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • கால்நடை வெட்டும் இடங்களை பராமரித்தல்.

5) கால் நடை துறை: மீன் வளம்.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • மீன் பிடிப்போர் முகாமைக்கு உதவி அளித்தல்.
  • கடல் அரிப்பினை தடுப்பு முயற்சிக்கு உதவுதல்.

6) வனத்துறை: சமூக காடுகள்.

  • வனத்துறை சமூக காடு வளர்ப்பிற்கு ஒத்துழைப்பு அளித்தல்.
  • கிராம ஊராட்சி நிலத்தினை சமூக காடு அறுபத்தி பொருட்கள் தயாரிக்க குத்தகை வழங்குதல்.
  • குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் வளர்க்க உதவுதல்.

7) வனத்துறை: சிறுகாடுகள் உற்பத்தி.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • காடுகளின் சிறு உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்த உதவுதல்.

8) சிறுத்தொழில்: சிறுத்தொழில்.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • பயனாளிகளுக்கு கடன் வழங்க உதவி செய்தல்.

9) கதர் மற்றும் கிராம தொழில்: கதர் மற்றும் கிராம தொழில்.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • கைவினை பயிற்சி மையங்கள் அமைக்க ஆலோசனை வழங்குதல்.
  • பனை தொழில் திட்டம் தயாரித்தல்.

10) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை: ஊரக வீட்டு திட்டம்.

  • தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிக .பிற்படுத்தப்பட்டோர், ஆகிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • திட்ட செயல்பாடு கண்காணித்தல்.

11) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை: குடிநீர்.

  • திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, மற்றும் விசைப்பம்பு ஆகியவற்றை அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

12) சுற்று சூழல் மற்றும் வனத்துறை: எரிபொருள் மற்றும் தீவனம்.

  • தரிசு நிலங்களை அடையாளம் காணுதல்.
  • எரிபொருள் மற்றும் தீவன பயிர்கள் வளர்க்க உதவுதல்.

13) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை: சாலை மற்றும் சிறுபாலம்.

  • கிராம ஊராட்சி சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

14) எரிசக்தி துறை: ஊரக மின்வசதி.

  • கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தெரு விளக்கு அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

15) எரிசக்தி துறை: மரபு சாரா எரிசக்தி.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • மரபு சாரா எரிசக்தி திட்டம் தயாரிக்க உதவுதல்.

16) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை: வறுமை ஒழிப்பு.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • வறுமை ஒழுத்து திட்டங்களை செயல்படுத்துதல்.

17) பள்ளி கல்வி துறை: ஆரம்ப கல்வி.

  • பள்ளி கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
  • பள்ளிகளில் நூல் நிலையம் துவங்க உதவுதல்.
  • ஆரம்ப கல்வி பள்ளிகளை நடுநிலை பள்ளியாக உயர்த்த பரிந்துரை செய்தல்.
  • கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி செயல்பாடுகளை கண்காணிக்க கல்வி துணை குழு அமைத்தல்.

18) வேலைவாய்ப்பு துறை: தொழில் நுட்ப பயிற்சி மற்றும் தொழில் கல்வி.

  • பயிற்சி தேவைகளை அடையாளம் காணுதல்.
  • பயிற்சி மையங்களை காண உதவுதல்.
  • தொழில் கல்வி துவங்க துறைக்கு உதவுதல்.

19) பள்ளி கல்வி துறை – முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி.

  • முறை சாரா கல்வி மையங்கள் அமைக்க உதவுதல்.
  • கிராம பகுதிகளில் முறை சாரா கல்வி மையங்கள் செயல்பட துறைக்கு ஆலோசனை வழங்குதல்.

20) பள்ளி கல்வி துறை – நூல் நிலையம்.

  • நூல் நிலையம் திறத்தல் மற்றும் பராமரித்தல்.
  • நூல் நிலையத்திற்க்கான புத்தங்கங்கள் மற்றும் தினசரி தாள் வழங்குதல்.

21) சுற்றுலா வளர்ச்சி மற்றும் பண்பாடு துறை – கலை மற்றும் பண்பாடு செயல்பாடுகள்.

  • உள்ளூர் விளையாட்டுகள், கலை மற்றும் பண்பாடுகள் ஊக்குவித்தல்.
  • நாட்டுப்புற கலை இசை நாட்டியம் ஆகியவைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

22) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சந்தை மற்றும் திருவிழா.

  • கிராம ஊராட்சி சந்தைகளை துவங்குதல் மற்றும் பராமரித்தல்.
  • தனியார் சந்தைகள் நடத்த அனுமதி வழங்குதல்.

23) மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு.

  • வடிகால்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
  • சுகாதார நிலையங்களை மேம்பாடு செய்தல்.
  • மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பொது கழிப்பிடம் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.

24) மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை – குடும்ப நலம்.

  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • துணை சுகாதார பணியாளர்களுக்கு குழந்தை நலம் பேணுவதற்கு உதவுதல்.
  • சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

25) சமூக நலத்துறை – மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு.

  • சத்துணவு அங்கன்வாடி மையங்கள் பார்வையிடுதல்.
  • குழந்தை காப்பகம் மற்றும் அங்கன்வாடி மையங்கள் துவக்க உதவுதல்.
  • அங்கன்வாடி மையங்கள் கட்ட உதவுதல்.
  • சுய உதவி குழுக்கள் அமைக்க பயனாளிகளை அடையாளம் காணுதல்.

26) சமூக நலத்துறை – மாற்று திறனாளி மற்றும் மனநலம் குன்றியவர்கள்.

  • மாற்று திறனாளிகளுக்கு உதவுதல்.
  • இளம்பிள்ளை வாதம் ஒழிப்பதற்கு உதவுதல்.

27) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்.

  • திட்டம் செயல் பட உதவுதல்.
  • பயனாளிகளை அடையாளம் காணுதல்.
  • இடுகாட்டிற்கான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல்.
  • இடுகாடு மற்றும் சுடுகாடு மராமரித்தல்.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வாழ் பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதி செய்து தருதல்.

28) கூட்டுறவு மற்றும் உணவுத்துறை – பொது விநியோகம்.

  • கிராம ஊராட்சி சொந்த நிதியிலிந்து, பொது விநியோக கடையினை துவக்க அதிகாரம் வழங்குதல்.
  • கிராம பகுதியில் உள்ள பொது விநியோக கடைகளை பார்வையிடுதல்.

29) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சமுதாய சொத்து பராமரித்தல்.

  • கிராம ஊராட்சி சாலைகள், தெருக்கள் மற்றும் மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரித்தல்.
  • சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகியவற்றை துவங்குதல் மற்றும் பராமரித்தல்.
  • ஊராட்சி அலுவலகம், சமுதாய கூடம், சத்துணவு மையம், பொது விநியோக கடைகள், மற்றும் இதர பொது கட்டிடங்கள் ஆகியவற்றை பராமரித்தல்.
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம்.பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் – சட்டம் தெளிவோம். பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின்

மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.மனித உரிமை மீறல் புகாரை எங்கு வழக்கு போடலாம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 105 காவல் துறையினரின், மனித உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி?_ மாநில மனித உரிமை ஆணையம்,

தகவம் பெரும் உரிமை சட்டம் 2005. மனு மாதிரி.தகவம் பெரும் உரிமை சட்டம் 2005. மனு மாதிரி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 14 பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் ) அனுப்புனர் பெயர், முகவரி மற்றும் ஊர். பெறுநர்:பொதுத் தகவல் அலுவலர்,தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005மாவட்ட

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.