GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் லோக் அதாலத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

லோக் அதாலத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நீதிமன்றத்தில் நடத்தப்படும் லோக் அதாலத் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

லோக் அதாலத் பெயர் விளக்கம்?
நீதிமன்ற லோக் அதாலத் என்றால் என்ன?

லோக்அதாலத் எப்போது தொடங்கப்பட்டது?

லோக் அதாலத் மற்றும் மக்கள் நீதிமன்றம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு?

லோக் அதாலத், எந்த சட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது?
லோக்அதாலத் செயல்முறை பற்றி அறிந்து கொள்வோம்?

மக்கள் நீதிமன்ற லோக்அதாலத்தின் சிறப்புகள்?

லோக்அதாலத்தில் முடித்த வழக்குகளுக்கு மேல்முறையீட்டிற்கு போக முடியுமா?

லோக்அதாலத்தில் தீர்க்கப்படும் வழக்குகளின் வகைகள்?

லோக் அதாலத் பெயர் விளக்கம்.
லோக் அதாலத் நீதிமன்றத்தில் பிரச்சனைகளுக்கு மாற்று முறையில் தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும்.

“லோக்” என்பது மக்களையும் “அதாலத்” என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். இதை மக்கள் நீதிமன்றம் எனவும் தமிழில் அழைக்கலாம். லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை, முன் மொழிந்ததில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி P.N.பகவதி அவர்களுக்கு பெரிய முதல் பங்குண்டு.

நீதிமன்ற லோக் அதாலத் என்றால் என்ன?

நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்றும், மக்கள் நீதிமன்றம் என்றும், மக்களால் அழைக்கப்படும் இந்த நீதிமன்ற நடைமுறை நீதிமன்ற வழக்கு நடத்துகிற வாதி பிரதிவாதிகளிடையே அமைதி, மற்றும் சமரசத்தின் அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

மக்கள் நீதிமன்றம் சமாதான நிலை, மற்றும் சமரசம் மூலமாக மக்களின் வழக்குகளை தீர்க்க, நீதிதுறையால் உருவாக்கப்பட்ட ஒரு நீதிமன்றமாகும்.

இந்தியாவில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை எளிதில் தீர்வு காண வேண்டி, சம்மந்தப்பட்ட மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ, அல்லது தன்னிச்சையாகவோ லோக் அதாலத்திற்கு அனுப்பலாம்.
லோக்அதாலத் எப்போது தொடங்கப்பட்டது.

இந்திய நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்ற நடைமுறையை முதலில் குஜராத் மாநிலத்தில், ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14-ம் நாள் 1982-ஆம் ஆண்டு, இந்த லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றமாக தொடங்கப்பட்டது. அது வெற்றி பெறவே நாடு முழுவதும் இந்த நடைமுறை பின்பற்ற உத்தரவிடபட்டது.

லோக்அதாலத் மற்றும் மக்கள் நீதிமன்றம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.

நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தும் மக்கள் லோக் அதாலத் வேறு, மக்கள் நீதிமன்றம் வேறு என்று நினைக்கிறார்கள் உண்மையில் அது தவறான ஒரு தகவல். இரண்டுமே ஒன்றுதான். இவைகளில் வேறுபாடு கிடையாது. தமிழில் நாம் லோக் அதலத்தை மக்கள் நீதிமன்றம் என்று அழைக்கிறோம்.

லோக் அதாலத் எந்த சட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது?
நீதிமன்றத்தில் லோக் அதாலத்தை நடைமுறைக்கு கொண்டுவர, சிவில் சட்டம், அதாவது உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலே நடைமுறைக்கு கொண்டு வந்தனர். இதை உரிமையியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 89-ன் கீழ் நடைமுறைப் படுத்தபடுகிறது.

லோக்அதாலத் செயல்முறை பற்றி அறிந்து கொள்வோம்.
மக்களுக்காக நீதிதுறையால் உருவாக்கப்பட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19-தின் படி, லோக் அதாலத் செயல்முறையில் மூன்று நபர்கள் கொண்ட நீதிமன்ற அமர்வாக இருக்கும். அந்த அமர்வு நீதிமன்ற நடைமுறையில் வழக்குகளை விசாரிக்கு முறையில் இருந்து கொஞ்சம் விலகி, சாதாரண மக்கள் பயம் இல்லாமல், சாதாரண நபர்களிடம் பேசுவதைப் போல அமைந்து இருக்கும்

அந்த அமர்வில் ஒருவர் பணியில் இருக்கும், அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ, அல்லது பணியிலிருக்கும் நீதிபதியோ மற்றொருவர் சமூக நலப் பணியாளராகவோ அல்லது பொது நல ஊழியராகவோ, மூன்றாம் நபர் வழக்கறிஞராகவோ இருப்பார்கள். அதாவது வழக்கிற்கு சம்மதமில்லாத வழக்கறிஞர் தான் இந்த அமர்வில் இடம் பெறுவார்கள்.

பெரும்பாலான வழக்குகளில் ஒய்வு பெற்ற நீதிபதியோ, அல்லது வழக்கறிஞர்கள், அல்லது சம்மந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியும், இந்த லோக் அதாலத் அமர்வில் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இப்படி மூன்று பேர் கொண்ட நீதி ஆலோசனை வழங்குபவர்கள் அமர்ந்து, வழக்கு சம்மந்தப்பட்ட நபர்களை விசாரித்து அவர்கள் குறைகளை அறிந்து சமாதானம் செய்து வைப்பார்கள்.

மக்கள் நீதிமன்ற லோக்அதாலத்தின் சிறப்புகள்.

மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம், கோர்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல், கோர்ட்டுக்கு வர இருக்கும் தாவாக்களுக்கும் சமரசம் செய்து கொண்டு தீர்வு கண்டுவிடலாம்.

லோக்அதாலத்தில் முடித்த வழக்குகளுக்கு மேல்முறையீட்டிற்கு போகமுடியுமா?

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில், வாதியும் பிரதிவாதியும், அதாவது வழக்கைத் தொடுத்தவர், மற்றும் அந்த வழக்கை எதிர் கொள்ளும் நபர், இந்த இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து சமரசம் செய்து கொள்வோம், வழக்கை இத்தோடு முடித்துக் கொள்வோம் என்று, லோக் அதாலத் மூலமாக, ஒரு சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, சமரசம் செய்து கொண்டால், அதற்குப்பிறகு லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்ட ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஆகவே இந்த லோக் அதாலத்தில் ஒரு வழக்கை முடிவுக்கு கொண்டு வருவது என்றால், அதில் மிகக்கவனமாக அந்த வழக்கின் தீர்ப்பு உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே, நீங்கள் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் லோக் அதாலத்தில் ஒரு வழக்கு முடிவுக்கு வருகிறது என்றால், அந்த தீர்ப்பு தான் கடைசி தீர்ப்பு அதற்கு மேல நீங்க மேல்முறையீடு செய்ய முடியாது அதற்கு வாய்ப்புகள் இல்லை.

லோக்அதாலத்தில் தீர்க்கப்படும் வழக்குகளின் வகைகள்.

சொத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள்.இது போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகிறது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Quashing of FIR

Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு

குடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் MEDIATION எவ்வாறு செயல்படுகிறதுகுடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் MEDIATION எவ்வாறு செயல்படுகிறது

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 சட்டம் ஒரு பார்வை குடும்ப மோதல்களில் மத்தியஸ்தம் மீடியேஷன் எவ்வாறு செயல்படுகிறது குடும்பம் மற்றும் திருமண தகராறுகளில் மத்தியஸ்தம் அதாவது மீடியேஷன்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்: 7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)