GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Stamp papers முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

Stamp papers முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

“முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

  1. முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுக்கிறோம்.
  2. இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்கள் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது.
  3. முத்திரைத் தாள்கள் & முத்திரை ஸ்டாம்கள் மூலமாக அரசு தங்களுடைய வரியை வசூலிக்கின்றன.
  4. அஞ்சல்துறை தவிர்த்த ஸ்டாம்களை முத்திரைதாள் ஸ்டாம்ப்போடு எக்காரணம் கொண்டும் குழப்பி கொள்ள கூடாது.
  5. முத்திரைத்தாள் & ஸ்டாம்கள் இந்தியாவில் நாசிக் & ஹைதராபாத்தில் மட்டும் அச்சிட்டு இந்தியா முழுவதும் சப்ளை அனுப்பபடுகிறது.
  6. தமிழகத்தில் இவை கருவூலம், சார் கருவூலம் வழியாக முத்திரைதாள் விற்பனையாளர்கள் மூலமாக பொது மக்கள் கையில் தவழ்கிறது.
  7. முத்திரைத்தாள் A4 Size அகலமும் , Fullsape பேப்பருக்கு கொஞ்சம் குறைவான உயரத்தில் , 3 ல் ஒரு பங்கில் இந்திய அரசு முத்திரை அச்சிடப்படும். 2 பங்கு நாம் நம்முடைய கிரைய விவரங்களை எழுதுவதற்காக வைத்து இருப்பர்.
  8. முத்திரைத்தாள் Judicial & Non Judicial என்று இரண்டு வைகைப்படும்.
  9. ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் நீதித்துறைக்கு உள்ளே சொத்து வழக்குகள் உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுபவை.
  10. Non Judicial முத்திரைத்தாள்கள் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரபதிவு அலுவலகம் , இன்சூரன்ஸ் அக்ரீமென்ட் போன்றவைகளுக்கு பயன்படுபவை.
  11. Court fee stamp, Revenue Stamp, Notorial Stamp, special adhesive stamp, foreign bill Stamp, broker’s note, Insurance Policy Stamp, Share Transfer Stamp போன்ற முத்திரைவில்லைகள், ஆவண உருவாக்கம் & பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களுக்கு பயன்படுகின்றன.
  12. முத்திரைத்தாள் சொத்து கைமாறுவதற்கு, ஷேர்களுக்கு, வியாபார பார்ட்னர்ஷிப் பத்திரங்களுக்ககு, பில் ஆப் எக்ஸேஜ், வாடகை , பிராமிசரி நோட் போன்ற அசையும் & அசையா சொத்துகளுக்கு பயன்படுத்தபடுகின்றன .
  13. மேலும் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம், தான பத்திரம், குத்தகை வாடகை, முதலீடு அதிகப்படுத்துதல், அக்ரீமென்ட் ஆப் பேங்க் கேரண்டி, வீட்டு கடன், கடன் ஒப்பந்தம், அடமானம் போன்ற வற்றிற்கும் முத்திரைதாள்கள் பயன்படுத்தபடுகின்றன.
  14. முத்திரைத்தாள் மதிப்பு சிலவற்றிற்கு Fixed ஆக இருக்கும் அவை adoption deed, affidavit, article of association , cancellation deed, copy of Extracts, Indemnity Bond, Power attiring, divorce .
  15. முத்திரைத்தாள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற பரிமாற்ற தொகையினை பொறுத்து அமையும், அவை அடமானம், குத்தகை ஒத்தி, ஹைப்போதிகேசன் டீட், ஆர்ட்டிகிள் ஆப் அச்சோலியேசன் போன்றவை.
  16. முத்திரைதாள்கள் மதிப்பு நாம் பத்திரத்தில் காட்டுகின்ற மதிப்பு அல்லது உண்மையான சந்தை மதிப்பு, இரண்டில் எது அதிகமோ அதனை காட்டுவது கிரைய ஒப்பந்தம், கிரையம் பரிமாற்றம் , பாகபிரிவினை போன்ற பத்திரங்கள் இப்படி நடக்கின்றன.
  17. முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு அதனை பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டால் அந்த முத்திரைத் தாள்களுக்கு காலம் முழுவதும் மதிப்பு இருக்கிறது.
  18. முத்திரைத்தாள்கள் வாங்கப்பட்டு அதனை எழுதாமலும், பத்திரப்பதிவு நடக்காமல் இருந்தால் அவை ஆறுமாதம் தான் செல்லும்.
  19. சொத்து வாங்கும்போது முத்திரைத்தாள் மதிப்பு சந்தை மதிப்பு விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை குறைக்க முத்திரைத்தாள் சட்டம் 47 (A) ன் கீழ் மனு செய்யலாம்.
  20. வீணாக்கப்பட்ட முத்திரைத்தாள், பயன்படுத்தப்படாத முத்திரைத் தாள்களை அரசிடம் கொடுத்து Refund வாங்கலாம்.
  21. மும்பையை சேர்ந்த தெல்கி என்பவரின் அதிக அளவு போலி முத்திரைத்தாள்களை உருவாக்கி இந்தியா முழுவதும் மோசடி செய்தான்.
  22. தெல்கி விளைவுக்கு பிறகு, முத்திரைத்தாள் ஒரிஜினாலா, போலியா என அதிக அளவு சோதனையிட ஆரம்பித்தனர்.
  23. பிராங்கிங், E.Stamp, ESBTR ( secular bank & treasury receipt ) போன்ற புதிய வழிகள் Non Judicial முத்திரைத்தாள்களுக்கு மாற்றாக உருவாகி இருக்கிறது.
  24. ESBTR என்பது வங்கியில் முத்திரைத்தாள்களை கட்டி விட்டால் அவர்கள் Printed Electronic Stamp தருவார்கள். தற்போது தமிழகத்தில் இவை இல்லை. மும்பை, டெல்லி பகுதிகளில் இவை நடைமுறையில் இருக்கிறது.
  25. பிராங்கிங் ( Franking) என்பது நாம் பணம் கட்டிய பிறகு, நாம் எழுதிவைத்து இருக்கிற பத்திரத்தில் முத்திரைத் தீர்வையை Frank செய்து தருவார்கள்.
  26. E Stamp என்பது அரசு சில தனியார் நிறுவனங்களை இதற்கு நியமித்து இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் E- Stamp நாம் கட்டிய தொகைக்கு தருகிறார்கள்.
  27. புதிய முறைகள் முத்திரைதாளில் வந்தாலும், பழைய முத்திரைத்தாளுக்கு இருக்கும் உணர்வு ரீதியான மதிப்பு புதியமுறைகளுக்கு இன்னும் ஏற்படவில்லை.
  28. அதிக மதிப்பிலான முத்திரைத்தாள்கள் வாங்கும்போது அரசு கருவூலத்திலே நேரடியாக சென்று வாங்கலாம் இதனால் கமிஷன் இருக்ககாது. பணம் மிச்சம்.
  29. கிரையப்பத்திரத்திற்கு , முழுவதும் வெள்ளை தாளில் எழுதி, முத்திரை தீர்வை பணமாக கூட கட்டலாம்.
  30. ரெவின்யு ஸ்டாம்ப், Court Fee Stamp, போன்ற முத்திரை வில்லைகளை எப்பொழுதும் கையிருப்பில் வைத்து கொள்வது நல்லது. அவசர நேரத்தில் நிச்சயம் உங்களுடைய டாகுமென்ட் (அ) இன்ஸ்ருமெண்டையோ லீகல் ஆக்க உதவும்.
  31. முத்திரை தாள் பயன்படுத்தாமல் ஸ்பெசல் அடிசிவ் ஸ்டாம்ப்யை பயன்படுத்திய பத்திரம்
  32. வெறும் வெள்ளை தாளில் பத்திரம் எழுதி முத்திரை தாள் கட்டணத்தை நேரடியாக பத்திர அலுவலகத்தில் கட்டிய பத்திரம்

அசல் மற்றும் போலி முத்திரைத்தாளின் வித்தியாசங்கள்!

  1. அசல் : கருவூல உலோக முத்திரையுடன் தேதியுடன் இடப்பட்டு இருக்கும்.
    போலி : பெரும்பாலும் இரப்பர் ஸ்டாம்ப் இடப்பட்டு இருக்கும்.
  2. அசல் : அச்சு பதிப்பு பளிச்சென்றும், நேர்த்தியாக இருக்கும்.
    போலி : பளிச்சென்று இருக்காது.
  3. அசல் : முத்திரை தாளின் தரம் மேம்பட்டதாக இருக்கும்.
    போலி : தாமற்ற BOND பேப்பரில் கூட அச்சிடப்பட்டு இருக்கும்.
  4. அசல் : அசோக சக்கரம் வாட்டர் மார்க் இமேஜ் இரண்டு புறமும் உள்ளீடாக தெளிவாக தெரியும்.
    போலி : வாட்டர் மார்க் இமேஜ் தெரியாது அசோக சக்கரம் உள்ளீடாக தெரியாது.
  5. அசல் : புற ஊதா கதிரில் ஒளியில் பார்த்தால் பாதுகாப்பு அம்சங்கள் தெரியும்.
    போலி : புற ஊதா கதிரில் பார்த்தால் எதுவும் தெரிவதில்லை
  6. அசல் : இழைகளால் தயாரித்தால் சாதரணமாக கிழியாது.
    போலி : வைக்கோல், மரக்கூழில்,6 தயாரிதத்தால் எளிதாக கிழியும்..

-தேசிய சட்ட நீதி இயக்கம் 6379434453

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வருவாய் ஆய்வாளரின் (REVENUE INSPECTOR) கடமைகளும் பொறுப்புகளும்வருவாய் ஆய்வாளரின் (REVENUE INSPECTOR) கடமைகளும் பொறுப்புகளும்

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 12 அ: மர மதிப்பு நிர்ணயம் செய்தல் ஆ: நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல். இ)

கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றிய முழு விளக்கம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 8 கிராம நிர்வாக ஊராட்சிகள் வழிமுறைகள் பற்றி ஒரு அலசல், தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் கிராம

Model Reply notice to an Advocate |வழக்கறிஞருக்கு பதில் அறிவிப்பு மாதிரிModel Reply notice to an Advocate |வழக்கறிஞருக்கு பதில் அறிவிப்பு மாதிரி

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 9 மனுதார்:முத்துக்கிருஷ்ணன, த/பெ.வெங்கடாஜலம், முத்து மாரியம்மன் கோவில் தெரு,கதவு எண் 111, பரிக்கல்பட்டு கிராமம், பெரும்பாக்கம் அஞ்சல் – 604304,வானூர் வட்டம், விழுப்புரம்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)