ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் தன் இஷ்டப்படி நிபந்தனை விதிக்க முடியுமா? இந்த வழக்கில் கண்ட எதிரி மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைகின்றனர். காவல்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் வழங்கி பிரிவு 167(2) ன் கீழ் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் ஜாமீன் வழங்கும் போது ரூ. 10,000/- க்கு இரண்டு பிணையதாரர்களை காட்ட வேண்டும், அதில் ஒரு பிணையதாரர் இரத்த உறவாக இருக்க வேண்டும், அவர் அசையாச் சொத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும், அவர் வசிப்பிட ஆதாரத்தையும், அசல் சொத்து ஆவணத்தையும் சரி பார்ப்பதற்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் 30 நாட்களுக்கு கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. ஆனால் இந்த நிபந்தனைகளை எதிரியால் நிறைவேற்ற இயலவில்லை. பொங்கல் விழாவையும் குடும்பத்தினருடன் கொண்டாட இயலவில்லை. அதனால் ஜாமீன் நிபந்தனைகளில் மாறுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் ஏன் ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்ற இயலவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. அவர் பதில் மிகவும் பரிதாபமாக இருந்தது. நான் ஏழை. என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் இரத்த உறவுகள் அனைவரும் கூலிகள். யாருக்கும் சொத்து கிடையாது. சாப்பாட்டுக்கே வழியில்லை என்று கூறுகிறார். அவரது பதிலை கேட்ட நீதிபதி.. நீதிமன்றங்களுக்கு ஜாமீன் வழங்கும் போது நிபந்தனைகளை விதிப்பதற்கு அதிகாரமில்லை என்று கூற முடியாது. ஆனால் அந்த நிபந்தனைகள் காரணங்களோடு கூடியதாக இருக்க வேண்டும். மிகவும் கடுமையான நிபந்தனைகளை நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது. நிபந்தனைகள் ஒவ்வொரு வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழலியல் பொறுத்து இருக்க வேண்டும். நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் போது தனது உளத்தேர்வு அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நீதிபதிகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். கடுமையான நிபந்தனைகளை விதிப்பது என்பது ஜாமீன் வழங்குவதை மறுப்பதற்கு சமமானதாகும். அந்த செயல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு இணையானது. ஒரு பக்கம் ஜாமீன் வழங்கிவிட்டு மறுபக்கம் கடுமையான நிபந்தனைகளை விதிப்பது முறையான செயல் இல்லை. ஏற்கனவே உச்சநீதிமன்றம் மேனகா காந்தி Vs யூனியன் ஆப் இந்தியா (AIR – 1978 – SC – 597) என்ற வழக்கில், பிணை உத்தரவுகளில் விதிக்கப்படும் நிபந்தனைகள் நியாயமானதாகவும், காரணங்கள் அற்றதாகவும் இருக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏழ்மை நிலையால் ஒருவர் ஜாமீனில் வராமல் இருக்ககூடாது என்று ரஹ்பீர் சிங் Vs பீகார் மாநில அரசு (1986 – SCC – CRL – 511)என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிணை வழங்கும் நடைமுறையானது பணத்தின் அடிப்படையிலோ அல்லது சொத்தின் அடிப்படையிலோ அமையக்கூடாது என்று மோதிராம் Vs மத்திய பிரதேச அரசு (1978 – 4 – SCC – 47) என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லை. தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவரை நிரபராதியாகவே கருத வேண்டும். ஜாமீனை அனுபவிக்கும் வகையில் நீதிபதி உத்தரவு பிறப்பிக்காமல் இயந்திரகதியில் நிபந்தனைகளை விதித்துள்ளார். எனவே எதிரி ரூ. 5000-/ க்கு சொந்த ஜாமீன் வழங்கினால் போதும் என்று தீர்ப்பு வழங்கினார். 2017 – 1 – TLNJ – CRL – 118 CRL. OP. NO – 993/2017 Dated – 18.01.2017
ஒருவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் தன் இஷ்டப்படி நிபந்தனை விதிக்க முடியுமா
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.
Related Post
பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்…பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்…
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 பத்திரம் பிழைத்திருத்தல் பற்றிய தகவல்… 7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர்
IPC-Indian Penal Code-Part-2 இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-2IPC-Indian Penal Code-Part-2 இ.த.ச.-இந்திய தண்டனை சட்டம் ஒலி+ஒளி வடிவில் பாகம்-2
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 Audio Video குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு
அரசு ஊழியர்களை பணி மாறுதல் செய்ய “நிர்வாக காரணம்” என்பது போதுமானதாக்காது சென்னை உயர் நீதிமன்றம் ‘Administrative reasons’ not enough to justify transfer orders: HCஅரசு ஊழியர்களை பணி மாறுதல் செய்ய “நிர்வாக காரணம்” என்பது போதுமானதாக்காது சென்னை உயர் நீதிமன்றம் ‘Administrative reasons’ not enough to justify transfer orders: HC
ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 “நிர்வாக காரணம்” என்ற காரணம் கூறி அரசு ஊழியர்களை பணி மாறுதல் செய்யக் கூடாது.- சென்னை உயர் நீதிமன்றம் ‘Administrative reasons’
