GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் Documents should be maintened by Police Stations | காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள்

Documents should be maintened by Police Stations | காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள்.

(1).முதல் தகவல் அறிக்கை :(FIR)
கைது செய்தற்குரிய குற்றம் பற்றி காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட புகார் பதிவு செய்யப்படுவதே முதல் தகவல் அறிக்கை எனப்படுகிறது.

(2).பார்வை மகஜர் : (observation Mahazar)
குற்றச் சம்பவம் நடந்த இடத்தை விசாரணை அதிகாாி (Investigation Officer) பார்வையிட்டு சம்பவம் நடந்த இடத்தின் பொதுவான விவரங்களை இரண்டு உள்ளூர் சாட்சிகளின் முன்னிலையில் வரைபடம் தயாரித்து விவரங்களை பதிவு செய்திருப்பதே பார்வை மகஜர் என அழைக்கப்படுகிறது.

(3).வழக்கு நாட்குறிப்பு : (Case Diary)
விசாரணை அதிகாரிக்கு குற்றம் பற்றி தகவல் கிடைத்த நேரம், புலன் விசாரணையை துவக்கிய நேரம், முடித்த நேரம், பார்த்த இடங்கள், விசாரணையில் கண்டறிந்த விபரங்கள் போன்ற தகவல்கள் விசாரணை அதிகாாியால் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

(4).பொது நாட்குறிப்பு : (General Diary)
காவல் நிலையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும். உதாரணமாக ஒருவர் காவல் நிலையத்தில் அளிக்கும் புகார் விவரங்கள் பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும்.

(5).சமுதாய பணிப் பதிவேடு : (Community Service Register – CSR)
காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தரப்படும் ஒப்புகை ரசீது ஆகும்.

(6).அரசு சொத்து பதிவேடு : (Govt. Property Register)
காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சொத்துக்களின் விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

(7).உயர் காவல் அலுவலர்கள் ஆய்வு பதிவேடு : (Inspection Register)
காவல் நிலையத்தை உயர் காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து அளிக்கும் குறிப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

(8).அலுவல் பதிவேடு : (Duty Register)
காவலர்களுக்கு அளிக்கப்படும் அன்றாட பணி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்

(9).பணப் பதிவேடு : (Cash Book)
காவல் நிலையத்தில் செய்யப்பட்ட வரவு, செலவுகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்

(10).முதல் தகவல் அறிக்கை அட்டவணை பதிவேடு : (FIR Index Register)
காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

(11).கட்டளை பதிவேடு : (Process Register)
நீதிமன்றத்திலிருந்து காவல்துறையினருக்கு அனுப்பப்படும் அழைப்பாணை விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

(12).இறுதி அறிக்கை / குற்றப்பத்திரிகை : (Final Report / Charge Sheet)
சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாட்சிய விவரப்பட்டியல், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை பற்றி விசாரணை அதிகாரியின் முடிவு ஆகிய
விவரங்களை கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Complaint against Police

Where to raise complaint against the Police Dept? காவல்துறையினர் மீது பொதுமக்கள் எங்கு புகார் கொடுக்க வேண்டும்?Where to raise complaint against the Police Dept? காவல்துறையினர் மீது பொதுமக்கள் எங்கு புகார் கொடுக்க வேண்டும்?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 https://m.dinamalar.com/detail.php?id=3225390 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Equal Justice for Everyone

Legal Notice U/s 101 of Indian Evidence Act, 1872 | 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்புLegal Notice U/s 101 of Indian Evidence Act, 1872 | 15 தினங்கள் கொண்ட சட்டப்படியான அறிவிப்பு

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 77 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்”

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 38 முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்” வழக்குரைஞர் :அ.அக்பர் பாஷா குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள்,

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)