GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரி

நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கோரும் மனு மாதிரி

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

சட்டம் தெரியாத ஒரு பாமரனை எதிர் வழக்கறிஞரின் தவறான ஆலோசனை நீதிமன்றத்தின் தவறான வழக்கு ஏற்பு ஆகியவற்றை குறித்து எங்கள் அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர விரும்புகிறேன்

எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு நபர் அவரது மகளுக்கு திருமணம் முடித்து கொடுத்தார் திருமணம் முடித்துக் கொடுத்த ஒரு ஆண்டுகளுக்குள் தம்பதிகளுக்குள் புரிதல் குறைபாடுகளால் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டுக்கு துரத்தி அடிக்கப்பட்டதன் காரணமாக மணமகள் தரப்பில் வேறு வழியின்றி மகளின் நல் வாழ்வுக்காக வேண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் நிலையம் விசாரணை செய்தது அந்த விசாரணையில் மணமகன் தரப்பில் ஒரு வழக்கறிஞர் வந்திருந்தார் வழக்கறிஞரின் தூண்டுதலின்பேரில் மணமகளுக்கு மனநிலை பாதிப்பு உள்ளது என்றும் மணமகளுக்கு ஏற்பட்டுள்ள மன நிலை பாதிப்பை சரி செய்த பின்னர் சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தனர் இவற்றையே மணமகள் தரப்பினரிடமும் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர் காவல் நிலையத்தினர்

அதன் பின்னர் மணமகன் தரப்பினர் காவல் நிலையத்தில் பெற்றுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை திருமண நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தனர் இது திருமண முறிவு வழக்கு ஆகும்.

இந்த திருமண முறிவு வழக்கில் வழக்கறிஞரின் தவறான ஆலோசனை மணமகன் தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதை எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகம் வழக்கறிஞர் அறிவிப்பின் மூலம் கண்டறிந்து இது தவறான செயல் என்று அந்த வழக்கறிஞருக்கு நேரடியாக கூறியும் அவர் தனது செயலை திருத்திக் கொள்ளவில்லை

அதன் பின்னர் மணமகள் தரப்பிலிருந்து அந்த வழக்கறிஞருக்கு எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மூலம் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது அந்த அறிவிப்பில் திருமண நீதிமன்றங்கள் சட்டம் பிரிவு 13 இன் படி இதுபோன்ற திருமண வழக்குகளில் வழக்கறிஞர் ஆஜராவது தடை செய்யப்பட்டுள்ளது என்ற சங்கதி மற்றும் ஒரு வழக்கறிஞர் தவறான ஆலோசனை வழங்கினால் வழக்கறிஞர் அவை விதி18 மற்றும் 35 (1) பிரிவு படி வழக்கறிஞர் அவை மூலம் தண்டிக்கக் கூடிய குற்றம் என அறிவித்து அறிவிப்பு அனுப்பப்பட்டது அதன் நகல் வழக்கு நடக்கும் திருமண நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர் அவை மற்றும் வழக்கறிஞர் ஆகியோருக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டது

இந்த அறிவிப்பு கிடைத்த நாள் முதல் மேற்காணும் வழக்கறிஞருக்கு பயம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது அதன் காரணத்தால் மேற்படி எதிர்மனுதாரர் ஆன மணமகள் தரப்பினரை வழக்கறிஞர் அழைத்து மிரட்ட ஆரம்பித்தார் இவரது மிரட்டலுக்கு பயப்படாத மணமகளின் தந்தை இவற்றையும் நீதிமன்றத்திலேயே விவாதிப்போம் என கூறியவுடன் வழக்கறிஞர் பயந்து போனார்

வழக்கறிஞர் தனது மிரட்டலுக்கு மணமகளின் தந்தை பயப்படாத தால் காவல்நிலையத்தில் வழக்கறிஞரை அவரது அலுவலகத்திலேயே மிரட்டியதாக மணமகளின் தந்தை மீது ஒரு புகார் வழங்கி அப்புகார் மீது அழைப்பாணை (சம்மன்) ஏதும் வழங்காமல் காவல்துறையினர் மணமகளின் தந்தையை கைது செய்து அழைத்துச் சென்றனர் இந்த சங்கதியை பாதிக்கப்பட்டோர் கழகத்திற்கு மணமகளின் குடும்பத்தினர் கைப்பேசி மூலம் தெரிவித்தனர்

உடனடியாக பாதிக்கப்பட்டோர் கழகம் களத்தில் இறங்கியது மேற்படி மணமகளின் தந்தையை காவல்துறையினர் அழைப்பானை வழங்காமல் கைது செய்து அழைத்துச் சென்றதை அவரது மனைவியின் பெயரில் மேற்படி திருமண நீதிமன்றத்திற்கும் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையத்திற்கும் வழக்கறிஞர் அவைக்கும் தந்தி அடித்து தகவல் தெரிவிக்கப்பட்டது அன்று மாலையே மணமகளின் தந்தையை காவல் நிலையத்தினர் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர் மறுநாள் காலையில் அருப்புக்கோட்டையில் உள்ள பார் கவுன்சிலில் விசாரணை இருப்பதாக மணமகளின் தந்தையை அழைத்து கட்டாயப்படுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர் அவ்வாக்கு மூலத்தை நகலையும் மணமகளின் தந்தைக்கு வழங்கினர்

இந்த ஆவணங்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டோர் கழகம் எடுத்துக்கொண்டு திருமண நீதிமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 (அ)(ஓ) பிரிவு படி நீதிபதியிடம் தன்னிலை விளக்கம் கேட்டு பாதிக்கப்பட்டோர் கழகம் ஒரு மனுவினை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியது

அதன் பின்னர் திருமண நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மணமகன் ஆஜரான போது மணமகனை நீதிபதி தனது தனி அறையில் அழைத்து உனது மனைவியோடு சேர்ந்து வாழ்கிறாயா அல்லது உன்னையும் உனது குடும்பத்தாரையும் சிறையிலடைக்க வா என மிரட்டியுள்ளார் திருமண நீதிமன்ற நீதிபதி அதன் பின்னர் மணமகன் உடனடியாக மணமகளின் இல்லத்திற்கு வந்து என்னோடு வந்து நீ வாழ வேண்டும் அல்லது நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என மிரட்டி மணமகளை தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார் அத்துடன் அந்த மணமுறிவு வழக்கு நிறைவு பெற்றது இது எங்கள் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் அறிவுசார்ந்த முயற்சி மற்றும் பயிற்சியாகும். நீதிமன்றத்திற்கு இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மூன்றாம் தரப்பினராகிய பாதிக்கப்பட்டோர் கழகம் செய்த மனு மேலே இணைக்கப்பட்டுள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றென்றும் மக்கள் பணியில்
இரா கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

Noted Points:

  • U/s 51/A, O of Constitution of India 1950
  • U/s 60/A of Criminal Procedure Code (Cr.P.C.) 1973
  • U/s 1973/50 of Criminal Procedure Code (Cr.P.C.)
  • U/s 331 of Indian Penal Code (IPC) 1860
  • U/s 500 of Indian Penal Code (IPC) 1860
  • U/s 365/4,5 of Indian Penal Code (IPC) 1860
  • U/s 32/8 of Constitution of India 1950
  • UI/s 14/8 of Constitution of India (CIA) 1950
  • U/s 13 of Hindi Marriage Act 1955
  • U/s 18 & 35/1 of Advocate Act 1961
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 1 தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்று நீதிபதி கிருஷ்ணய்யர் கூறிய கருத்துக்கள் குறித்தும் இந்திய நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு தாமதமாக கிடைக்கும்

Indian labour law | இந்திய தொழிலாளர் சட்டம்.Indian labour law | இந்திய தொழிலாளர் சட்டம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 31 இந்திய தொழிலாளர் சட்டம் முழு விளக்கம்…! தொழிற்சாலைகள் சட்டம் 1948. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம்

போலீஸ் விசாரணையின் பொது வீடியோ பதிவு செய்ய தடையில்லை. நீதிமன்றம்.போலீஸ் விசாரணையின் பொது வீடியோ பதிவு செய்ய தடையில்லை. நீதிமன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 4 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)