GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?

பொய் வழக்கில் விடுதலையாகிவிட்டால் அது நீதி கிடைத்துவிட்டது என்றாகிவிடுமா?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்று நீதிபதி கிருஷ்ணய்யர் கூறிய கருத்துக்கள் குறித்தும் இந்திய நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு தாமதமாக கிடைக்கும் நீதியைப் பற்றி கொஞ்சம் அலசு வோமா?

பெரும்பாலான பொதுமக்கள் சட்டம் அறியாதவர்களாக இருந்து வருகிறார்கள் இவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்லும்போது சுய விமர்சனத்தோடு இவர்கள் தங்களை அடையாளம் காட்டுவது இல்லை. பெரும்பாலான பொதுமக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் 100 விழுக்காடு நியாயம் இருப்பதில்லை. 100 விழுக்காடு நியாயம் இல்லாமலும் இல்லை எனலாம்.

நீதிமன்றம் செல்வோர்கள் அனைவருக்கும் நீதி கிடைத்து விடுவது இல்லை. 100 விழுக்காடு நியாயம் உள்ளவர்களுக்கு 100 விழுக்காடு நீதி கிடைப்பதில்லை. நீதியை சதவிகிதம் எண்ணிக்கையாக பிரிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஒரு குற்ற வழக்கில் ஒரு நபருக்கு வழக்கு உருவாகிறது என வைத்துக்கொள்ளலாம். அவர் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் குற்ற வழக்கில் சம்பந்தப்படுத்த படுகிறார் . அவர் வழக்கறிஞர் வைத்து வழக்கை நடத்துகிறார். இறுதியில் அவருக்கு வழக்கிலிருந்து விடுதலை என தீர்ப்பு உருவாகிறது. இதையே நீதி என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும் குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் ஆனால் அந்த பொய்யான புகார் கொடுத்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதா? பொய்யான வழக்கை பதிவு செய்த காவல் துறைக்கு தண்டனை வழங்கியதா? பொய்யான சாட்சியமளித்தவர்களுக்கு தண்டனை வழங்கியதா? இப்படி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த நபர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் வழங்காமல் குற்றம் சுமத்தப்பட்ட மேல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் மட்டும் அவர் விடுதலை செய்யப்படுகிறார் இதுதான் நீதி என கூறுகிறார்கள் இதில் எத்தனை சதவிகிதம் நீதி உள்ளது? நீங்களே கணக்கிடுங்கள்.

குற்றவியல் வழக்குகளை எத்தனை காலங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாக கு. வி. மு. ச.1973 இன் 309(1) வது பிரிவில் குற்ற வழக்கில் குற்றப் பத்திரிக்கை எதிரிக்கு நீதிமன்றம் வழங்கிய நாளில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை செய்ய வேண்டும் என்று உறுதி படுத்தி உள்ளது. நியாயமான காரணம் இருந்தால் ஒழிய வாய்தா போடக்கூடாது. என்றும் நியாயமான காரணங்கள் இல்லாமல் வாய்தா ஏற்படுமானால் கு. வி. மு. ச.1973 இன் 309(2) இன் படி நீதிமன்றத்திற்கு தொடர்ந்து ஆஜராகி வரும் எதிரிக்கு செலவு தொகை கொடுப்பதையே நியாயமான காரணமாக கொண்டு வழக்கை ஒத்தி வைக்கலாம் என்று சட்டம் தெளிவாக கூறியும் இவற்றை எந்தவொரு நீதிமன்றமும் சூமோட்டாவாக (தானே முன்வந்து) கால வரம்பை கடை பிடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக அறிய முடிய வில்லை

உரிமையியல் விசாரணை முறை விதிகள் : உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ன்- கட்டளை 7 – ன் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்கை ( விசாரணைக்கு ஏற்றதும் கட்டளை 5 விதி 1 ( 1 ) -ன் கீழ் பதிலுரையை முப்பது நாட்களுக்குள் தாக்கல் செய்ய கோரி எதிர்மனுதார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப வேண்டும் .

அழைப்பானை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்ட தேதியில் இருந்து எழு நாட்களுக்குள் மனுதார் அதற்கென நீதிமன்றம் விதிக்கும் கட்டணத்தை கட்டளை 7 விதி 9 – ன் கீழ் செலுத்த வேண்டும் . விதி விலக்காக நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் அல்லது 90 நாட்களுக்குள் பதிலுரை தாக்கல் செய்யப்பட வேண்டும் .

பதிலுரையை பொருத்து புகாரை மெய்பிக்க தேவையான அல்லது மனுவை பொருத்து மனுவை பொய்பிக்கத்தேவையான ஆவணச்சான்றுகள் குறிப்பிட்டு அவைகளை தாக்கல் செய்து சாண்றாவனமாக குறியிட ஆட்சேபணை ஏதும் இருக்கிறதா எனவும் , எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பி சார்பு செய்யப்பட்ட . தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்க கட்டளை 12 விதி 2 – ன் கீழ் கோர வேண்டும் . கட்டளை 12 விதி 2 – ன் * கீழ் அறிவிப்பை பெறும் தரப்பினர் , கட்டளை 12 விதி 2 அ – ன் கீழ் இது குறித்த தெளிவான தமது கருத்தை நீதிமன்றத்திற்கும் , எதிர்தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும் . இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்தில் அல்லது பதிலில் ஒப்புதல் ஏதேனும் இருந்தால் நீதிமன்றம் தனது விருப்பம் போல் அல்லது தரப்பினர்களின் மனுவை பெற்று பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்பாக ஒப்புதலின் அடிப்படையில கட்டளை 12 விதி 6 – ன் படி உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் .

இப்படி தீர்ப்பரை வழங்க இயலாத போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள
ஆவணங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்து முடிக்கும் பொருட்டு எழு 21 வினாக்களை எழுத வேண்டும் .

அதாவது மனுதார் கோரியுள்ள உரிமை சட்டபடி சரியானது தானா என முடிவு செய்ய தேவையான வினாக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு உருவாக்க வேண்டும் . இப்படி வினாக்களை உருவாக்குவதற்கு வேறு ஆவணம் ஏதும் தேவை என நீதிமன்றம் கருதும் போது அதை வைத்திருப்பவருக்கு அதை தாக்கல் செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவை அனுப்பி விட்டு வினாக்கள் எழுதுவதை ஏழு நாட்களுக்குள்ளாக கட்டளை 14 விதி 4 – ன் படி ஒத்தி போட வேண்டும் .

இதில் எதிர்மனுதாரர்கள் பலர் இருந்து அதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் வழக்கை ஒப்புக் கொள்ளும் போது தக்கது எனகருதும் தீர்ப்பை கட்டளை 15 விதி 2 – ன் கீழ் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் . மற்ற எதிர்மனுதார்களுக்கு எதிராக மட்டுமே வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டும் .

எழு வினாக்கள் வனையப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வழக்கு தரப்பினர்கள் தமது தரப்பில் சாட்சியாக அழைக்கப்பட வேண்டிய அல்லது ஆவணம் தாக்கல் செய்யப்படவேண்டிய சாட்சிகள் குறித்த பட்டியல் மனுவை கட்டளை 16 விதி 1 – ன்கீழ் தாக்கல் செய்ய வேண்டும் .

அப்படி அழைக்கப்படும் சாட்சிகள் தங்களின் வாக்கு மூலத்தை பிரமாணமாக கட்டளை 18 விதி 4 – ன் கீழ் தாக்கல் செய்யலாம் .

இதனை அடுத்து சாட்சிகள் தொடர்ந்து விசாரணை செய்யப்படவேண்டும் . கட்டளை 17 விதி 1 – ன் படி போதிய காரணம் காட்டப்பட்டால் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைக்கலாம் .

விசாரணைதுவங்கிய பிறகு அதாவது சாட்சிகள் விசாரணை ஆரம்பம் ஆனதும் எந்ததரப்புக்கும் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் வாய்தா வழங்க கூடாது .

சாட்சிகள் விசாரணைமுடிந்ததும் தரப்பினர்கள் எழுத்து மூலமான தமது வாதுரையைகட்டளை 18 விதி -2 ( 3 – அ ) -ன்கீழ் தாக்கல் செய்யலாம் .

இதற்கான கால நிர்ணயத்தை நீதிமன்றம் தான் கட்டளை 18 விதி 2 ( 3 – ஈ ) முடிவு செய்யும் , வாதுரைதாக்கல் செய்யப்பட்ட பிறகு கட்டளை 20 விதி 1 – ன் படி உடனடியாக அல்லது முப்பது நாட்களுக்கள் தீர்ப்பு பகர வேண்டும் அப்படி இயலாத போது அதிக பட்சமாக 60 நாட்களில் தீர்ப்பு பகர வேண்டும் . தீர்ப்புரை செய்த பிறகு கட்டளை 20 விதி 6 அ – ன் கீழ் உடனே தீர்ப்பானை அல்லது 15 நாட்களுக்குள் தீர்ப்புரை வரைவதை உறுதி செய்ய வேண்டும் .

வழக்குகளில் நகல் பெறுதல் : அனைத்து வழக்குகளிலும் நகல் பெற கால அவகாசம் எவ்வளவு எனசட்ட விதிகள் இருப்பதாக தெரியவில்லை .

எப்படி இருந்தாலும் , எந்த வழக்காக இருந்தாலும் வழக்கை முடிக்கவே குறைந்த பட்ச கால அளவு தான் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதிக பட்சம் நகல் வழங்க ஒரு வாரத்திற்குள் தான் கால அவகாசம் இருக்கும் என உறுதியாக நம்பலாம் .

ஏனெனில் வழக்கு தொடர்பான பதிவுகளின் நகலை அப்படியே ஜெராக்ஸாக பெறலாம் .

இப்ப புரியிதுங்களா நாட்டில் நடந்து வருகிற நீதிமன்றங்கள் எல்லாம் நீதிக்கு தண்டணைதான் கொடுத்து வருகின்றன என்று . என்ன யோசிக்கிறீங்க?

கீழ் நீதிமன்றங்களுக்கு தானே இந்த கால அவகாசம் . அப்புறம் எப்படி எல்லா நீதிமன்றமும் நீதிக்கு தண்டணை தான் அப்படீன்னு சொல்ல முடியுங்கிறீங்களா ?

ஏங்க , விசாரணை நீதிமன்றமே இவ்வளவு நாள்ல வழக்க முடிக்கனும் அப்படீங்கும் போது மேல் நீதிமன்றத்துக்கு இதுல என்ன வேலை இருக்கு ? கீழ் நீதிமன்றம் என்னென்ன தவறு செய்திருக்கு அல்லது என்ன விதத்தில் கையாண்டிருக்கு அப்படீன்னு கண்காணித்து முடிவு சொல்ற வேலை தானே ? இதுக்கு குறைந்த பட்ச கால அவகாசம்தானே இருக்க முடியும் ? அதிக பட்சம் இதுக்கு எவ்வளவு இருக்கலாம் ஒன்றரை மாதம் பத்தாதா ?

இந்த கணக்கு படி பாத்தா அமர்வு நீதிமன்றம் , உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் சேத்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் தானே ?

இதை எதையும் கடைப்பிடிக்காமல் நீதிமன்றங்கள் நடந்தால் அந்த நீதிமன்றத்துக்கு எந்த #நீதிமன்றம் தண்டணைவழங்க போகிறது ?

எனக்கு தெரிய அனைத்து வகையான வழக்குகளும் முடிவடைய அதிகபட்சமாக ஆறு மாத கால அவகாசம் தான் அந்தந்த சட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமா இருக்கா ? ஆம் உண்மை தான் .

இதில் இறுதியாக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 – ல் தான் . இதில் கடந்த 2002 – ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளது .

இப்படி வழங்கப்பட்டுள்ள கால வரம்பு நீதிமன்றங்களால் கடை பிடிக்க படுகிறதா?

திருமண #நீதிமன்றம்

கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.

மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.

மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக் கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும்.

அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது. என்றாலும் திருமண நீதிமன்றங்களின் சட்ட விதிகளின்படி இவ் வழக்கை நிறைவு செய்வதற்க்கான கால வரம்பை எந்தவொரு திருமண நீதிமன்றமும் கடை பிடிப்பதில்லை.

திருமண சட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் தகுந்தாற்போல் சட்டங்கள் உள்ளது

இதில் சாதி – மதம் பார்க்காமல் திருமணம் செய்பவர்களுக்கு என்று சிறப்பு திருமண சட்டம் உள்ளது எனினும் திருமண விவாகரத்து வழக்குகளில் அதிகமாக புழக்கத்தில் /நடைமுறையில் உள்ளது இந்து திருமண விவகாரத்துச் சட்டம் தான் எனவே இதைப் பற்றி மட்டும் தற்போது பார்க்கலாம்

இந்து திருமண விவாகரத்துச் சட்டம் பிரிவு 21 ஆ (1) இன் படி ஒரு மனு மீது நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை நடத்த வேண்டும் அப்படி நடத்த இயலாத போது அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்

பிரிவு 21 ஆ(2) இன் படி மனுவை எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க இயலுமோ அவ்வளவு விரைவர்க விசாரித்து முடிக்க வேண்டும் இது அதிக பட்சமாக எதிர் தரப்பினரரிடம் மனு சார்பு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிவு பெறவேண்டும்

பிரிவு 21 ஆ(3) இன் படி செய்யப்படும் மேல் முறையீட்டை மேல் முறையீட்டு நீதிமன்றம் விரைவாக தீர்மானிக்க வேண்டும் அதிகபட்சமாக எதிர் தப்பினரிடம் வழக்கு தொடர்பான மனு சார்பு செய்யப்பட்ட தேதியில் இருந்து 3 மாதத்திற்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும்

திருமண விதிகளில் மொத்தம் 10 விதிகள் தான் உள்ளது அதில் வழக்கை எப்படி எல்லாம் ஒத்தி வைக்க வேண்டும் என்ற குறிப்புகள் ஏதும் இல்லை.

நூகர்வோர் நீதிமன்றங்களில் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களிலும் இதுபோல கால வரம்புகள் உள்ளது. விசாரணை நீதிமன்றத்திற்கு இப்படி காலவரம்பு கொண்டிருக்கும்போது அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் எந்த அளவு கால வரம்பை கொண்டிருக்கும் என்பதை நாம் உணர முடியும். எந்தவொரு வழக்கையும் 6 மாதத்திற்குள் நிறைவடைய செய்வதற்கே சட்டங்கள் இயறப்பட்டுள்ளது ஆனால்…………………

என்றென்றும் மக்கள் பணியில்
இரா. கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன?தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 17 🙏தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள்…. மருத்துவர்களின் அலட்சியத்தால் (Medical Negligence) ஒரு நோயாளி உயிரிழந்தாலோ, சுகாதாரப் பிரச்சினைகளை

தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 15 தமிழ்நாடு வாடகை வீடு மற்றும் கட்டிடங்கள் சட்டம்1960 அக்ரிமெண்ட் அவசியம். வாடகை ஒப்பந்தம் ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட

அட்சபனை இருப்பதால் நிலத்தை நில அளவை செய்துத்தர அதிகாரிகள் மறுக்கலாமா?அட்சபனை இருப்பதால் நிலத்தை நில அளவை செய்துத்தர அதிகாரிகள் மறுக்கலாமா?

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)